'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
திங்கள், 9 அக்டோபர், 2017
புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதில் கடுமையான சிக்கல்புதிய
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் மைத்திரிபால நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்
(ரொபட் அன்டனி)
(ரொபட் அன்டனி)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படாவிடின் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாது என கூறி வருகிறது. இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற
உறுப்பினருமான விஜத்த ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிடின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பாரிய சிக்கல் ஏற்படும். நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமையை இங்கு பிரதானமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வானது மாகாண சபை முறைமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுமானால் ஜனாதிபதி முறைமை அவசியமில்லை. மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருந்தால் போதுமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அடுத்த கட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜத்த ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக்கூடாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக வலியுறுத்தி வருகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காணப்படுகிறார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவதாக கூறியே பதவிக்கு வந்தார். எனவே அவர் ஜனாதிபதி தேர்தலின் போது குறிப்பிட்டவாறு தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன் அதனூடாகவே புதிய அரசியலமைப்பினை கொண்டு வர வேண்டும்.
ஆனால் தற்போது சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி முறைமை வேண்டும் என்று கூறுவதால் ஜனாதிபதி அது தொடர்பான நிலைப்பாட்டை உடனடியாக வெ ளியிட வேண்டிய தேவை காணப்படுகிறது. கட்சியை காரணம் காட்டி ஜனாதிபதி இந்த விடயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் ஜனாதிபதி தனது தற்போதைய நிலைப்பாட்டை உடனடியாக வெ ளியிட வேண்டும்.
அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்காமல் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டத்தை வழங்குவதனால் ஜனாதிபதி முறைமை அவசியம் தேவை என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை.
மாறாக மாகாண சபைகள் எல்லை மீறும் பட்சத்தில் பாராளுமன்றத்தினால் அதனைக் கட்டுப்படுத்த முடியும். அதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீ்க்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சாட்டிக் கொண்டிருக்காமல் உடனடியாக தமது நிலைப்பாட்டை வெ ளியிடமுன்வர வேண்டும். இல்லாவிடின் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)