ஹிரோஷிமா நாகசாகி-1945 - 08 - 06/09
1945ஆம், ஆண்டு,இரண்டாம் உலகப்போரில்,கடைசிக் காலகட்டத்தில் அமெரிக்காவின்
அணு ஆயுத வீச்சுக்கு,இலக்கான ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் படங்கள்தான்
இவை.௦06ந்த் திகதி ஆகஸ்ட், 1945ல் ஹிரோஷிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அனு குண்டின் பெயர், நமது பாசையில் கூறுவதானால், சின்னப் பொடியன்,( Litle Boy ),09 ,ஆகஸ்ட்,1945ல் நாகசாகியில் வீசப்பட்ட
அனுகுண்டின் பெயர் தடியன் (Fat Man ) இந்த இரண்டு அனுகுண்டுகள்தான்,உலகில்
முதலும் கடைசியுமாக இடம்பெற்ற அனுகுண்டுத்தாக்குதல்.இதைக் காட்டிக் காட்டி
இன்றுவரையும் உலக நாடுகள்,இதைத் தயாரித்துக் கொண்டிருப்பதும், தயாரிக்கும் நாடுகளைக் கண்டிப்பதும், இதன் பெயரைச் சொல்லியே ஒரு நாட்டையும், அந்த
நாட்டின் தலைவரையும் கொன்றது, நாம் எல்லோரும் அறிந்த கதை.இந்த அணுகுண்டுத்
தாக்குதல் நடந்து, நாலு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,ஹிரோஷிமா 90 ,000 -166 ௦000௦. நாகசாகி 60 ,000௦,௦௦௦.-80 ,000 இவ்வளவு மனித
அழிவுகளையும், எண்ணிலடங்காத பொருளாதார இழப்புகளையும் சந்தித்த இந்த இரண்டு நகரங்களும், இன்று எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கின்றன.