செழுமதியிற் சித்திரைசே யுத்திராடம்
பொங்கு புதனவிட்டம் பொன்வாரங் கேட்டை
புகார் பூராடங் காரி ரேவதியினாளில்
மங்கையரை மீனம் புனரில் விதவையாகு
மனையொரு சிற்ப வழியில் போகிற் சாவாஞ்
செங்கற் கண்ணாற் பூதிதான் மலடியாவார்
சிறு குழவி பெறின் மறிக்குந் தின்னந்தானே.
(மனையடி சாஸ்திரம்)
செவ்வாய்க் கிழமைகளில் உத்திராடம் நட்சத்திரம்,புதன் கிழமைகளில் அவிட்ட நட்சத்திரம்,வியாழக் கிழமைகளில் கேட்டை நட்சத்திரம்,வெள்ளிக்கிழமை பூராடம்
நட்சத்திரம்,சனிக் கிழமைகளில் ரேவதி நட்சத்திரம் வரும்போது,மங்கையர் ருதுவானால்
மலடியாவாள்.திருமணம் நடந்தால் விதவையாவாள்,சுகயீனம் ஏற்பட்டு வைத்தியரை
நாடினால் மரணம்.பிள்ளை பிறந்தால் மரணம் என்பது திண்ணம். இப்படி வரும் நாட்கள் சுப கருமங்களுக்கு விலக்கவும்.
அத்துடன் இந்தப் பாடலையும் பாருங்கள்.
"காலற்ற வுடலற்றன தலையற்ற நாளிற்
கோலக்குய மடைவார்,தம்மைக் கூடின் மலடாவர்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத்தவர் வழி போகினு நலமெய்திடாரே."
காலற்ற நாட்கள்:கார்த்திகை,உத்திராடம்,உத்திரம்.
உடலற்ற நாட்கள்:மிருகசீருசம்,சித்திரை,அவிட்டம்.
தலையற்ற நாட்கள்:புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி.
நம்புவது நம்பாதது உங்கள் பொறுப்பு.சரியா? பிழையா? என்று ஆராய்ந்து பார்க்கலாம்,
அல்லவா.