சனி, 17 டிசம்பர், 2016

நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியுடன் கூடிய முக்கிய அறிவித்தல்

நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியுடன் கூடிய முக்கிய அறிவித்தல்

சில முக்கிய அரச நிறுவனங்கள் அடுத்த ஆண்டு வாரத்தின் ஏழு நாட்களிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
மத ரீதியான விடுமுறை தினங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் சில அரச நிறுவனங்கள் சேவையை வழங்க உள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வழங்கி வரும் அரச நிறுவனங்களே இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் திறக்கப்பட உள்ளன.
பொதுமக்களுக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தேசிய ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் போன்றன முதல் கட்டமாக வாரத்தின் ஆறு நாட்கள் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகள் குறைந்த பட்சம் மாவட்டத்தில் ஒரு வங்கிக் கிளையேனும் மத ரீதியான விடுமுறை நாட்களைத் தவிர்ந்த வருடத்தின் ஏனைய அனைத்து நாட்களும் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவின் சேவையை இரவு 10.00 மணி வரையில வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் கம்பனி பதிவுத் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் போன்றன 24 மணித்தியாலங்களும் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை குறிவைக்கும் அழிவு சக்திகள் - கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

தமிழர்களை குறிவைக்கும் அழிவு சக்திகள் - கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்பது புரியாத பாதையில் அடியெடுத்து வைத்துள்ள இலங்கையின் அடுத்த இலக்கு நல்லிணக்கம் என்பது மட்டுமே.
இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் ஆங்காங்கே ஏற்படும் குழப்ப நிலைகள் அனைத்தின் பின்னணியிலும் ராஜபக்சர்கள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இராணுவப் புரட்சி வெடிக்கப்போகின்றது என்ற பயம் மக்களிடையே புகுத்தப்பட்டது. அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்ற ஓர் நிலைப்பாடு தொடர்ந்து வந்தபோது இப்போது அது மறைந்து போனாலும் புகை இருக்கத்தான் செய்கின்றது.
மாறி மாறி வந்த பிரச்சினைகள் இப்போது புதிய அரசியல் யாப்பிற்கும் தமிழர்களுக்கும் எதிராக திசை திரும்பியுள்ளது.
அந்த வகையில் இப்போதைக்கு அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து சக்திகளும் ஒன்றாக இணைந்து புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக செயற்பட தொடங்கிவிட்டன.
குறிப்பாக தமிழர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் அதே நேரம் அதிகாரம் தங்கள் கைகளுக்கு வர வேண்டும் என்பது மட்டுமே பிரதான நோக்கம்.
இதற்கான காய்நகர்த்தல்களில் எந்த வகையிலும் கபட நாடக தீர்மானங்களை எடுக்க தயாராக இருக்கின்றனர். ஆனாலும் இது கூட்டுச் சதி பௌத்த அமைப்புகள், கடும்போக்காளர்கள், ராஜபக்சர்கள் அனைவரும் இப்போது இணைந்து விட்டனர்.
அண்மையில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் அரசியல் யாப்பை ஒத்துக் கொள்ள முடியாது, இது பௌத்த நாடு புலிகள் தலை தூக்கி விட்டார்கள் நாடு சர்வதேசத்திற்கு விலை போய் விட்டது என்றார்.
அங்கு அவர் தெரிவித்த அதே கருத்துகள் தான் மஹிந்த, நாமல், கோத்தா, மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உட்பட இனவாதம் பரப்பும் வேறு சில விசமிகள் அனைவருமே இப்போது முன்வைத்து வருகின்ற வாதமாகி விட்டது.
இவர்கள் அனைவரதும் கோரிக்கை புதிய அரசியல் யாப்பு கொண்டு வரக்கூடாது அப்படி வந்து விட்டால் நாடு பாரிய ஆபத்துகளை சந்தித்து விடும் என்பது மட்டுமே.
எப்படி என்றாலும் முடிந்து போன யுத்தத்தையும் அதன் வடுக்களையும் மட்டுமே ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக புலிகள் புலிகள் என இவர்கள் கூறி வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இதன் காரணமாக இவர்கள் அனைவருமே கூட்டு சதியில் இணைந்துள்ளார்களா? என்ற சந்தேகம் ஏற்படத்தான் செய்கின்றது.
குறிப்பாக இனவாதம் பரப்பிய நபர்களுக்கும் ராஜபக்சர்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் ஊடகங்கள் விமர்சித்தன.
அதனால் இவர்கள் அனைவரும் இணைந்தே நாட்டில் பதற்றத்தை தோற்றுவித்து கொண்டிருக்கின்றார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் அடிக்கடி அவர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் இவர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டு வரும் நிலை நாட்டில் இல்லை.
அப்படியானதொரு நிலை இல்லை ஆனாலும் அப்படியான தொரு கலவரத்தை ஏற்படுத்துவது மட்டுமே இவை அனைத்தின் பின்னணி. இதன் மூலம் எதிர்பார்க்கும் பதில் அதிகாரம், ஆட்சி மாற்றம்.
மேலும் இதுவரையில் ஆட்சி பற்றி குறைகளை மட்டும் கூறி வந்த மஹிந்தவும் கூட நான் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக் கொள்கின்றேன் என்ற வெளிப்படை கருத்துகளையும் முன்வைக்கத் தொடங்கி விட்டார்.
மேலும் கூட்டாக கோவிந்தா போடும் இவர்களுடைய நோக்கம் அதிகார வேட்கை என்பது தான் என்றாலும் அதனால் ஏற்படும் அடுத்த பக்க விளைவு உண்டாக்கும் பாதிப்பு கூட கடந்த கால சுவடுகளை பார்த்து பயணித்தவர்கள் நினைப்பது இல்லை.
அதிகார ஆசை காரணமாக நாட்டில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி கொண்டு உள்ளார்கள் என்பது வேதனைத் தரும் விடயமே.
நான் இல்லை நீ என ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றார்களே தவிர நாளை சமூகத்தின் நிலை பற்றி யார் பதிலளிப்பது.
இங்கு அரசும் கூட கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கின்றதே தவிர முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்துள்ளதா என்பது இது வரையில் வெளிப்படுத்தப்படாத ஒன்றே..,
அதிகாரங்கள் கையில் உள்ள ஜனாதிபதியும் அரசும் அடுத்து எடுக்கும் தீர்ப்பு எப்படி இருக்கப்போகின்றது என்பது நீருக்குள் தீயை கொண்டு செல்வது போலத்தான் இருக்கின்றது.
tamilwin

இனவாதம் பேசி,இலங்கையை இன்னலுக்குள் கொண்டு செல்பவர்கள் யார்?

இனவாதம் பேசி,இலங்கையை இன்னலுக்குள் கொண்டு செல்பவர்கள் யார்?
ஒரு முஸ்லிமோ,ஒரு தமிழனோ,மட்டு நகர் விகாரையில் உள்ள அம்பிட்டியே சுமன ரத்தின தேரர் போல் கதைக்கமுடியுமா? பொலிசாரின் முன்னால் இப்படி நடந்து கொள்ளத்தான் முடியுமா?
நல்லிணக்கம் ஒற்றையாட்சி என்று அரசு பாடுபட்டு கொண்டு வரும் வேளையில் நாளுக்கு நாள் இனவாதம் எனும் பிரச்சினை அதிகரித்து கொண்டே செல்கின்றதே தவிர குறைவடைய வில்லை.
பௌத்தம் அழிக்கப்படுகின்றது, அதனை காக்க வேண்டும் என புறப்பட்ட கும்பல்கள் தற்போது கடும்போக்கான இனவாதத்தினை தூண்டும் வகையிலான வாதங்களை மக்கள் மத்தியில் புகுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இங்கு கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கும் எந்த ஒரு நபரும் இனவாதம் பற்றி பேசமாட்டார்கள் என்றாலும் கூட யாருக்கு என்ன நடந்தால் என்ன எனக்கு இலாபம் கிடைத்தால் போதும் என்ற வகையிலேயே இப்போது காய் நகர்த்தல்கள் தொடர்ந்து கொண்டு வருகின்றது.
ஆரம்பத்தில் பௌத்தம் காக்க வந்தவர்கள், கடும்போக்காக வாதங்களை பரப்பியவர்கள் இப்போது மீண்டும் புலிகள் வந்து விட்டார்கள் அதனால் இராணுவ பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்று பல கதைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவெனில் முதலில் இனவாதம் பரப்பி பௌத்தம் காக்க வந்தவர்கள் கடைசியில் நாட்டின் பிரச்சினைகளுக்கு காரணம் விடுதலைப் புலிகள் என்று புதுக்கதைகள் பரப்புகின்றார்கள்.
இப்படியும் ஒரு புத்த துறவி கதைக்கிறார் என்று சிங்கள மக்களின் விமர்சனம் காணொளிஒரு அரச அதிகாரியை தனது கடமையை செய்ய விடாது தடுத்ததுமில்லாமல்.தனது இனத்தை இழிவு செய்து பேசியது இலங்கைக்கு காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னால் இது இலங்கை அரசியலமைப்பின் படி ஒரு குற்றமில்லையா?. 
அதற்கடுத்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே இந்தப்பிரச்சினைக்கு காரணம் என்றும் அவர்கள் மூலமாகவே நாடு இயக்கப்பட்டு வருகின்றது என்ற வாதத்தினை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பில் சுமன ரத்ன தேரர் பௌத்தம் அழிந்து விட்டது, விடுதலைப்புலிகள் கொல்ல வருகின்றார்கள், எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறிவருவதோடு மட்டக்களப்பில் தனது விகாரை அழிக்கப்படப்போவதாக பிரச்சினைகளை சமூக வலைத்தளங்கள் மூலமும் ஏனைய ஊடகங்கள் மூலமும் பறைசாற்றிக்கொண்டு  வருகின்றார்
.
அவரின் இப்போதைய பிரச்சினையை சற்று பின்நோக்கி பார்க்கும் போது 30 வருடகாலம் ஆயுதபலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் நிலை கொண்டிருந்த போது கூட..,மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் போலீஸ் நிலையம் உட்பட இருந்தபோது ஜனாதிபதி பிரேமதாசவின் ஆடசிக் காலத்தில்,இந்த மங்கள ராமாய விகாரை அப்படி.யேதான் இருந்தது.ஒரு சில அசம்பாவிதங்கள் திருடர்களால் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார்கள்.அதில் இருந்த ஹமதுரு பன்சாலைக்குச் சொந்தமான லங்கா பேக்கரிக் கட்டிடத்தை விற்றுவிட்டுத் தலை மறைவானார்.தமிழ் மக்கள் ஒரு நாளும் மதங்களையோ.மத வணக்கத்  தலங்களை அழித்ததாகச் சரித்திரம் இல்லை உதாரணம் யாழ்ப்பாணம் முஸ்லிங்கள் இல்லாதபோதும் விடுதலைப் புலிகள் அவற்றை அழிக்கவில்லை. 
அவ்வளவு ஏன் 1998ஆம் ஆண்டு தலதாமாளிகை மீதும் தாக்குதல் மேற்கொண்ட புலிகள் தனது காலத்தில் மட்டக்களப்பு விகாரை மீது தாக்குதல் நடத்தவில்லை.
அவர்கள் நினைத்திருந்தால் அப்போதே அதனை தரைமட்டமாக்கி விட்டிருக்கலாம் ஆனாலும் அப்படி எதனையும் செய்யவில்லை. இப்படியான ஓர் நிலையில் இப்போது எங்கிருந்து அந்த விகாரை அழிக்கப்படுவதாக கூறி பிரச்சினை எழுப்பப் படுகின்றது என்பது தெரியவில்லை.
ஆக மொத்தம் இது பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே எழுப்பப்பட்ட விடயம் என்பது தெளிவாகத் தெரியும். இது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்த விடயம் தான் என்றாலும் இதனை வளர விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மட்டும் ஏன் என்று தெரிய வில்லை.
அது மட்டுமா ஆரம்பத்தில் தனியாக களம் இறங்கிய குறித்த பிக்கு இப்போது படையுடன் செயற்பட்டு வருகின்றார். அவருக்காக குரல் கொடுக்க ஓர் கூட்டத்தினையே உருவாக்கி விட்டார்.
அது மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் பௌத்தர்களுக்கும் அவர் தனது செய்திகளை பரப்பி வருவதோடு நிதி சேகரிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
போதாக்குறைக்கு தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அடிக்கடி கூறிக்கொண்டு வரும் இவரது திட்டம் எது வென்று தெரியவில்லை.
இப்போதைய நிலையில் வேண்டுமென்றே இவர் தலைமறைவாகி விட்டால் அந்த ஒரு பிரச்சினையே போதும் இலங்கையை ஆட்டிப்படைக்க என்பது தெரிந்த ஒன்று. அதன் காரணமாக இவர் அடிக்கடி இவ்வாறு சொல்லிக் கொண்டு வருகின்றாரா என்பதும் ஒரு வகை சந்தேகமே.
பௌத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இலங்கை அரசு அதிரடியாக அவரை கைது செய்து விடாது. இப்போதைய நிலையில் சிங்களவர்கள் மத்தியில் ஓர் புரட்சி வீரராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இவர் ஓர் மத போதகரா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.
அதனையும் தாண்டி அவர் கைது செய்யப்பட்டு விட்டால் அதுவும் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடும் அதனால் அரசு பொறுமை காத்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவர்களுடைய புதுக்கதைகள், சகோதர இனத்தவரிடையே ஆழப் பதிய முன்னர் அரசு தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றது.
ஆனாலும் தொடர்கதையாக மாறிவரும் இவர்களுடைய பிரச்சினைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது இது தொடர்ந்து சென்று பயங்கரத்தில் முடிய வழிசமைக்குமா? என்பது காலத்தில் பதில் மட்டுமே.

எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

ஐக்கிய அமெரிக்காவில் சிறுபான்மை மக்களுக்கான உயர் கல்வி நிறுவனங்கள்.

ஐக்கிய அமெரிக்காவில் சிறுபான்மை மக்களுக்கான உயர் கல்வி நிலையங்கள்.



இலங்­கை–மலே­ஷி­யா­வுக்கிடையில் ஐந்து உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்து




(கோலா­லம்பூ­ரி­லி­ருந்து ரொபட் அன்­டனி)
இலங்­கைக்கும் மலே­ஷி­யா­வுக்கும் இடை யில் பொரு­ளா­தாரம், வர்த்­தகம் மற்றும் கலா­சார துறை­களில் ஐந்து உடன்­ப­டிக்­கைகள் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டன.  உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற் ­கொண்டு மலே­ஷியா வந்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரஸ்­ஸாக்கை  சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்­னரே இந்த ்ஐந்து உடன்­ப­டிக்­கைளும் கைச்­சாத்­தி­டப்­பட்­டன.  
இளைஞர் ஒத்­து­ழைப்பு, சுற்­று­லாத்­துறை , விவ­சாயம், வௌிநாட்டு வேலை­வாய்ப்பு கலா­சாரம் ஆகிய துறை­க­ளி­லேே்ய ஐந்து உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்­னி­லையில் இரண்டு நாடு­க­ளி­னதும் அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரிகள் இந்த உடன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்­டனர்.  
இளைஞர் ஒத்­து­ழைப்பு,
இளைஞர் ஒத்­து­ழைப்பு தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் மலே ஷிய வௌிவி­வ­கார அமைச்சர் ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.
சுற்­று­லாத்­துறை
சுற்­று­லாத்­துறை குறித்த உடன்­ப­டிக்­கையில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மலே­ஷிய சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.
விவ­சாயம்,
இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான விவ­சா­யத்­துறை தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் மலே­ஷி­யா­வுக்­கன இலங்கை உயர்­அர ஸ்தானிகர் இப்­ராஹிம் அன்சார் மற்றும் மலே­ஷிய நிறு­வனம் ஒன்றின் உயர் அதி­காரி ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.
வௌிநாட்டு வேலை­வாய்ப்பு
வௌிநாட்டு வேலை­வாய்ப்பு விடயம் தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் பிர­தி­ய­மைச்சர் மனுஷ்ய நாண­யக்­கார மற்றும் மலே­ஷி­யாவின் வௌிநாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.
கலா­சாரம்
இலங்கை மற்றும் கலா­சார விட­ய­தானம் தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் இலங்­கையின் சார்பில் பிர­தி­ய­மைச்சர் பாலித்த தெவ­ரப்­பெ­ரும கைச்­சாத்­திட்டார். 
இது இவ்­வாறு இருக்க மலே­ஷி­யா­வுக்கு உத்­தி­யோ­க­புர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கோலா­லம்­புரில் இரண்டு நாடு­க­ளி­னதும் வர்த்­தக பிர­தி­நி­தி­களின் பங்­கேற்­பு­ட­னான வர்த்­தக மாநாடு நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.  
இந்த வர்த்­தக மாநாட்டில் இலங்கை முத­லீட்டு சபையின் தலைவர் ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சபையின் தலைவர் மற்றும் அர­சாங்­க­ததின் வர்த்­த­கத்­துறை சார்ந்த உயர் அதி­கா­ரிகள் என பலர் கலந்­து­கொண்­டனர். அத்­துடன் மலே­ஷ­யாவின் வர்த்­தக பிர­மு­கர்கள் அரச நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலரும் இந்த வர்த்­தக மாநாட்டில் கலந்­து­கொண்­டனர் 
மேலும் இந்த வர்த்­தக மாநாட்­டின்­போது இரண்டு நாடு­க­ளி­னதும் வர்த்­தக பிர­தி­நி­திகள் மட்­டத்­தி­லான நேருக்கு நேர் இரு­த­ரப்பு சந்­திப்­புக்­களும் பேச்­சு­வார்த்­தை­களும் நடை பெற்­றன. இதில் உரை­யாற்­றிய மலே­ஷி­யாவின் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் முஸ்தபா மொஹம்மட் இலங்கையில் தற்போது பாரிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இலங்கையானது அடுத்த ்நிலைக்கு செல்கின்றது என்று கூறலாம். இலங்கையின் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அதனை மலேஷிய வர்த்தகர்கள் பயன்படுத்தவேண்டும். எனது நாட்டின் வர்த்தகர்களை நான் ஊக்குவிக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார். 
துளசி


எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

இராமர் பாலம்

இராமர் பாலம்



ஆம்! இராமர் பாலம் உண்மை தான்,புகழாரம் சூட்டிய நாசா..
இராமர் பாலம் உண்மைதானா? நம்மைப்பெருமை கொள்ள வைக்கும் நாசாவின் ஆய்வறிக்கை… இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள்.
இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பல விடயங்களை அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்… நாசா கூறும் விளக்கம் நாசா விண்வெளி மூலம் தனது செயற்கைக் கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தைக் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல.
மற்றும் இது வெறுமனே கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது. என கூறியிருக்கிறார்கள் இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது. அதனால் இராமாயணம் சொல்வது உண்மை இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன.
எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர். இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர். இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது. மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர்.
ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். தொடக்கமும், முடிவும் இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிவும் ஆழமற்று காணப்டுகிறது .கிட்டதட்ட 1௦ மீட்டர் இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.
இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது. இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான் இராம சேது பாலத்தின் வயது அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்!!! வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம். இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.

இஸ்லாமிய உடையை அணிய மறுத்த ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இஸ்லாமிய உடையை அணிய மறுத்த ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர்! 




சவுதி அரேபியாவில் அரசுப் பயணமாக சென்ற ஜேர்மன் பாதுகாப்பு துறை அமைச்சர் அந்நாட்டில் இஸ்லாமிய உடையை அணிய மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சரான Ursula von der Leyen என்பவர் ஜேர்மன் வரலாற்றில் முதன் முதலாக பாதுகாப்பு துறைக்கு தெரிவு செய்யப்பட்ட பெண் அமைச்சர் ஆவார்.
சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியை சேர்ந்த இவர் சில தினங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார்.
ரியாத்தில் இளவரசரான Mohammad bin Salman al Saud என்பவரை சந்திப்பதற்கு முன்னதாக பெண் அமைச்சருக்கு அந்நாட்டு இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா ஆடை கொடுக்கப்பட்டது.
ஆனால், ஆடையை வாங்க மறுத்த பெண் அமைச்சர் தனது உடையிலேயே இளவரசரை சந்திப்பதாக கூறியுள்ளார். பின்னர், பெண் அமைச்சரின் விருப்பத்தின்படி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.
ஜேர்மன் அமைச்சரின் இந்நடவடிக்கை சவுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இஸ்லாமிய உடையை அணிய மறுத்ததன் மூலம் அமைச்சர் சவுதி அரேபியாவின் பாரம்பரியத்தை அவமதித்துவிட்டார்’ என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பெண் அமைச்சர் பேசியபோது, சவுதி அரேபியாவின் பழக்கவழக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால், எனக்கும் சில கொள்கைகள் இருக்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகளை தெரிவு செய்வது என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். எனவே, சவுதியின் இக்கொள்கையில் தனக்கு முரண்பாடு இருப்பதால் புர்கா ஆடையை அணியவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க முதல் குடிமகள் மீச்செல் ஒபாமா, ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சவுதிக்கு சென்றபோது புர்கா ஆடையை அணிய மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இவர் செய்தது சரியா ? தவறா ??

இவர் என்ன அங்கு வேலைக்கா சென்றார்? அரசு முறைப் பயணம்.

ஆதாரத்தைக் கொடு; இல்லாவிட்டால் சிறைக்குப் போ;சுப்ரமணிய சாமி ராகுலுக்கு எச்சரிக்கை

ஆதாரத்தைக் கொடு; இல்லாவிட்டால் சிறைக்குப் போ;சுப்ரமணிய  சாமி
ராகுலுக்கு எச்சரிக்கை.




இலங்கைச் சாரதி அனுமதிப் பத்திரம் இத்தாலியிலும் செல்லுபடியாகும்.

இலங்கைச் சாரதி  அனுமதிப் பத்திரம் இத்தாலியிலும் செல்லுபடியாகும்.


வெளி நாட்டிலுள்ள தமிழர்களின் தான்தோன்றித் தனமான செயல் -மனோ கணேசன்

வெளி நாட்டிலுள்ள தமிழர்களின் தான்தோன்றித் தனமான செயல் -மனோ கணேசன் 



171விசாரணைகள் நிறைவு :6 அறிக்கைகள் அடுத்த வாரம்.

171விசாரணைகள் நிறைவு :6 அறிக்கைகள் அடுத்த வாரம்.

 ஊழல் மோசடிகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு.


அமெரிக்காவின் 'ஆப்பிள்' நகரின் மேயராக இந்திய வம்சாவளிப் தமிழ் பெண்!

அமெரிக்காவின் 'ஆப்பிள்' நகரின் மேயராக இந்திய வம்சாவளிப் தமிழ் பெண்!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குபெர்டினோ நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணொருவர் தெரிவாகியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவிதா வைத்தியநாதன் என்ற பெண்ணே இவ்வாறு நகர மேயராக தெரிவாகியள்ளார்.
உலகின் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் இருக்கும் நகரம் தான் குபெர்டினோ. இந்நகரத்திற்கு மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தெரிவாகியுள்ளமை இதுவே முதல் தடைவையாகும்.

20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசிக்கும் சவிதா, அங்குள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வருவத்தோடு, வங்கி வணிகத் துறை அதிகாரிகாவும் இருக்கிறார்.
மேலும் சவிதா டெல்லி பல்கலைக்கழகத்தில் B.A படப்படிப்பையும், லக்னோ பல்கலைக்கழத்தில் ஆசிரியர் படிப்பையும், வெற்றி கரமாக பூர்த்தி செய்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சென் ஜோஸ் ஸ்டேட் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பையும் சவிதா பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பட்டியலில் தனி இடம்பிடித்த இலங்கை

அமெரிக்காவின் பட்டியலில் தனி இடம்பிடித்த இலங்கை


இலங்கை அரசியலில் அண்மைக்காலமாக ஓரளவு முன்னேற்றம் எற்பட்டு வருகிறது. இதனையே மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு சபையின் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பினால் நாடுகளுக்கு உதவி வழங்கும் 


திட்டத்தினுள் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் பணிப்பாளர் சபையின் சந்திப்பில் இலங்கை, புர்கினோ ஃபசோ மற்றும் ரியூனியா ஆகிய நாடுகள், ஊக்குவிப்பு திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
இலங்கை மக்களுடனான அபிவிருத்தி பங்களிப்புக்கு பாரிய உந்துசக்தியாக, காணப்படுகின்றது. மேலும் பல வகையில் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்குள் இலங்கை உள்வாங்கப்பட்டதன் அடிப்படையில் ஜனநாயக ஆட்சி, மக்களுக்கான முதலீடு மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை இலங்கை உணர்வு பூர்வமாக நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உலகத்தின் வறுமை ஒழிப்பு நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.