குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி மங்காது!.-குளச்
சேற்றில் முளைத்த செந்தாமரை நீ யடா!
உன்னையும் விடவில்லையே தமிழன் பெற்ற சாபம் - உன்
அம்மாவின் ஆசி! அந்தம் வரைக் காப்பாற்றும் !
குடத்திலிட்ட விளக்காய் ஒளிந்திருந்தாய் -ஆனால் !
குவலயம் அதிரவெல்லோ தீக் கற்றையாய் ஒளிர்ந்தாய்
காலின்றியும் பாரதப் பெருமை காப்பேனேயென்று -ஒரு
காலூன்றி உயரப் பாய்ந்து தமிழ் பெருமை சேர்த்தாய்
சூரியனை ஒருநாள் ஒளித்து விட்டாயுன் புகழால் -யேதும்
புரியாதவனையும் சேர்த்து அணைத்து விட்டாயெழிதால்
மாரியப்பன் தங்கவேலு மறக்குமோ தங்கத் தமிழனை -யுனை
வாரியனைத்திடும் தமிழுலகமே!வந்திடு தமிழகமே.!