நான், பொங்கல் நேரம்,எனது மனைவியுடன்,கதைக்கும்போது,சஹீஸ்னு
எனது பேரன் US,இல் இருப்பவன் இலங்கையில் இருந்து இருந்தால்,KFC
சாப்பாட்டை நல்லா விரும்பிச் சாப்பிடுவான்,வாங்கி வந்ததும்,அந்தப் பார்சலை
தூக்கிக்கொண்டு ஓடும் அழகே தனி. சிறு பிள்ளை தானே என இருவரும்
நினைத்துக் கதைத்தோம்.
அதே நேரம், அமெரிக்காவில் எனது பேரன் தனது தாயிடம்,"அம்மா,அம்மப்பா
வாங்கி வரும் KFC நல்ல ருசியாக இருக்கும். ஆனால்,இங்கு வாங்கும் KFC
ஏன்? ருசி குறைவாக இருக்கிறது" என்று கேட்டிருக்கிறான்.
ஒரே, விசயம், இடம் மட்டும் வித்தியாசம்,ஆனால், நேரம், சிந்தனை எல்லாம்
ஒத்துப்போகிறது.இப்படி பல நிகழ்வுகள்,என் வாழ்க்கையில் நிறைய
சந்தித்துள்ளேன்.இவரைச் சந்திக்க வேண்டும் என நினைக்கும்போது, அவர்
நேர் எதிரே, நம்மைத்தேடி வந்துகொண்டிருப்பதை நான் பல முறை
அவதானித்துள்ளேன்.
உதாரணத்திற்கு சில சினிமாப்பாடல்களை முனுமுனுக்கும்
போது அது வானொலியில் ஒலிபரப்பாகும். உங்கள் வாழ்கையிலும் இப்படியான
நிகழ்வுகள், நடந்திருக்கும், இனி வரும் காலங்களில் கவனியுங்கள். இது
சம்பந்தமான விவரத்தை விக்கிபீடியாவில் கீழ் வருமாறு தந்துள்ளார்கள்.
சஹீஸ்னு தங்கை லக்ஸ்மிதாவுடன்.
(telepathy) என்பது, புலன் உறுப்புக்கள் எதையும் பயன்படுத்தாமலும், பௌதீகத் தொடர்புகள் இன்றியும், ஒருவருடைய மனத்தில் இருந்து இன்னொருவர் மனத்துக்குத் தகவல்கள் செலுத்தப்படுவது ஆகும். அதாவது, பேசுதல், கேட்டல், சைகை காட்டுதல், எழுதிக் காட்டுதல் போன்ற பல்வேறு வழமையான தொடர்பு முறைகளின் பயன்பாடு இல்லாமல் ஒருவர் எண்ணுவதை மற்றொருவர் அறிந்து கொள்வதே "தொலைமனமுணர்தல்" எனப்படுகிறது. அறிவியலாளர்கள் இதனை ஒரு உண்மையான தோற்றப்பாடாகக் கருதுவது இல்லை. தொலைமனமுணர்தல் என்னும் ஒன்று இருக்கிறதா என அறிந்துகொள்ளவும், அதைப் புரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்குமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், கட்டுப்பாடான சோதனைகளின் கீழ் இதை உண்மை என்று நிறுவுவதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை..
தற்காலப் புனைகதைகளிலும், அறிவியற் புனைவுகளிலும் தொலைமனமுணர்தல் இடம்பெறுவதைக் காணலாம். இவற்றில், வேற்றுக்கோளினரும், மீவியல்பு நாயகர்களும் இத்தகைய ஆற்றல்களைக் கொண்டவர்களாகக் காட்டப்படுவது உண்டு.