புதன், 20 ஜனவரி, 2010

Poll: இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறபோவது...!!




Poll: இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறபோவது...!!
ஒரு  கருத்துக்  கணிப்புத்தான்,26 .ஜனவரி 2010வரைக் காத்திருக்க முடியாதவர்கள்.இப்பொழுதே வாக்களிக்கலாம்.அடையாள அட்டை தேவையில்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கத் தேவையில்லை .உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பதிவின் அடிப்பகுதிக்குச் செல்வது ஒன்றுதான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை.வாருங்கள் வாக்களிப்போம்.சிறிலங்காவின் அடுத்த  ஜனாதிபதியை இந்தக் கருத்துக் கணிப்பால் கண்டுபிடிப்போம்.

யாழ் /பாதுகாப்பு வலையத்தில் மீள் குடியேற்றம்




பாதுகாப்பு வலையங்களில்பொதுமக்கள் மீளக்குடியமர ஸ்ரீ லங்காவின் பாதுகாப்பு அமைச்சு   அனுமதி அளித்துள்ளதாக அரச தொலைக்காட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.பாதுகாப்பு வலையததினுள் காணி,வீடுகள் இருப்பவர்கள்,தங்களது உரிமைகளை உறுதிப் படுத்தக்கூடிய ஆவணங்களுடன் சென்று தகுதிவாய்ந்த அதிகாரிகளை சந்திக்குமாறு, அரச தொலைக்காட்சி அறிவித்தல் விடுத்துள்ளது.

ஏனைய பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலையங்களுக்குப் பொருந்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவும்

தேர்தல் நெருங்க நெருங்க,தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்காததெல்லாம் நடக்கலாம் போல்

தெரிகிறது.  

ஜனாதிபதித் தேர்தல் - 2010


வட கிழக்கு மொத்த வாக்காளர்கள் பதிவு செய்யப் பட்டவை 
2005 ஆண்டு தேர்தல் இடாப்பின்படி 19,06260
2008  ஆண்டின் தேர்தல் இடாப்பின் படி 19,83946









 எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்பேசும் முகாமையாளர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்போது,ஜனாதிபதி வேட்பாளர்களோ யார் முந்தி,தேர்தலில் வென்று இனிய தமிழ் மக்களின் கடைசிச் சொத்தாக மிஞ்சி இருக்கும்,கச்சையை உருவலாம் என்று யோசனை பண்ணுகிறார்கள் .இதை அறிந்த ...என் இனிய தமிழ் மக்கள் .. என்ன செய்யலாம் என்று தலையைப் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.சும்மாவா கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் சுத்த தமிழ்  வாக்குகள் 2005 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் படாதவை தேர்தல் செயலகத்தின்  கணக்கின்படி,  பதியப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்.வட கிழக்கில் கொட்டிக் காயப்போட்டிருக்கிறார்கள் எனது இனிய தமிழ் மக்கள். இவற்றை எப்படி கணக்குப் பண்ணலாம் என்பதுதான் வடகிழக்கு முக்கிய அரசியல் வாதிகளின் கவலை.தங்களின் இருப்பைத் தக்கவைக்கவும்,தங்களின் எஜமான விசுவாசத்தை மீண்டும் நிருபிக்கவும் இந்த இனிய தமிழ் மக்களின் வாக்குகள் எப்படியெல்லாம் உதவப் போகிறது என்பதுதான் தற்போது அவர்களின் கவலை.  . 
  
 தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து,பெரும்பான்மை மக்களின் பகுதிகளில் "அமிர்தகழி திமிர்த களம்" ஆடி வருகிறார்கள்.தொலைக்காட்சிகள் மேலும் ஒரு  படி  போய்   நேரடி விவாதம் மட்டும் நடத்தாதகுறை ஒன்றைமாத்திரம் விட்டு வைத்திருக்கிறார்கள்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனவரி  26ந் திகதி இரவு 12  மணிக்கு, தாங்கள் யுத்தம் செய்து பெற்ற சுதந்திரத்தை சரத் பொன்சேகா,தமிழ் கூட்டமைப்புத் தலைவர்  சம்பந்தரிடம் ஒப்பந்தம் போட்டு விற்று விட்டதை 
வாங்கிக் கிழித்தெறிந்து தமிழ் மக்களை இந்நாட்டின் சுதந்திர பிரசைகளாக ஆக்குவேன். .அத்துடன் சுபீட்சமான எதிர்காலத்தையும் காட்டுவேன் என்கிறார்.நம்பவில்லை என்றால் மேலேயுள்ள படத்தைப் பார்க்கவும்.வடகிழக்கு வாக்குகளை தனக்குச் சாதகமாக்க ஜனாதிபதி நம்பியிருப்பவை,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,தர்மலிங்கம் சித்தார்த்தன்,
ஆனந்த சங்கரி, தமிழ் மக்களை வன்னியில் இருந்து விடுவித்தது,தமிழ் மக்களில் இருந்து விடுதலைப்புலிகளை மாத்திரம் தெரிந்து எடுத்து வகை, தொகை இல்லாமல் கொன்றது.பாதுகாப்பான தமிழ் அகதி முகாம்கள் ஏற்படுத்திக் கொடுத்தது.விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு அரசியல்வாதி அந்தஸ்த்துக் கொடுத்தது.தப்பி வந்த போராளிகளுக்கு பயங்கரவாதி என்ற பட்டத்துடன் சிறை வாழ்க்கை. இன்னும் பட்டியல்  இடலாம். கடந்த 2005 ஜனாதிபதித் தேர்தலில் இவர் வடகிழக்கில் பெற்ற மொத்த வாக்குகள் 226009 வட கிழக்கின் மொத்த வாக்குகளில் 12 % த்தைதான் இவரால் பெற முடிந்தது. இவரை விட ரணில் விக்கிரம சிங்க பெற்ற வாக்குகள் அதிகம். 
    
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா   தான் எதையும் தமிழ் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடம் எழுதவும் இல்லை,விற்கவும் இல்லை .இத்துடன் நிலையான மாற்றத்தையும் ஏற்படுத்துவேன் என்கிறார்.ஜனாதிபதியின்  தலைமையின் கீழ் போரில் ஈடுபட்டு,தமிழ் மக்களை அகதிமுகாம்களுக்குள்  பாதுகாப்பாகக் கொண்டு விட்டவரும் இவர்தான். இவருக்காக வாக்கைச்  சேகரிக்க,பெரும்பான்மை மக்கள் ஐ .தே.கட்சி சார்பில் ரணிலும் அவரது குழுவினரும்,இனவாதக் கட்சி ஜே.வி.பி.சார்பில் சோமவன்ச அமர சிங்கவும்.தமிழைப் பேசிக்கொண்டு தமிழ் மக்களுக்கு எப்படி ஆப்பு வைக்கலாம்,கிழக்கு மாகாணத்தை எப்படி கையகலப் படுத்தலாம் என்று அலையும் முஸ்லிம் காங்கிரசும்,மலையகத் தமிழர் மனோகணேசனும் இவருக்கு அகலக் கைகள்.ஜனாதிபதித் தேர்தல் -2005 இவரது நண்பர் ரணில் விக்கிரம சிங்க வடகிழக்கில் பெற்ற வாக்குகள் 443180 வடகிழக்குமாகாணத்தில்  மொத்த வாக்குகளின் 23 %மான வாக்குகளை இவர் பெற்றார். மஹிந்த ராஜபக்சவை விட அதிகம்.   


.தமிழ் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன்   தொடர்ந்தும்,இந்தியாவின் இசையுடன் " ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம்"என்கிறார்கள்.இசை மாத்திரம் அல்ல தயாரிப்பு,நெறியாள்கை,உதவி இப்படிப் பட்டியல் நீண்டாலும்.நடிப்பு மாத்திரம் 
சுத்தமா தமிழர் கூட்டமைப்பு மாத்திரமே.தமிழ் மக்களின் வாக்குகளைக் கைகளில் எப்படி ஏந்துவது,என்னமுறையில் பாவித்து,தமிழ் மக்களைக் காப்பற்ற வக்கில்லாத தமிழ்க் கூட்டமைப்பும் சம்பந்தர் தலைமையில் திரு திரு வென முழித்துக்கொண்டு வட கிழக்கில் அலைகிறார்கள்.   

   மொ.கள்=மொத்த வாக்குகள் .உதிரி= உதிரிக் கட்சிகள் வாக்க.வை =வாக்களிக்காதவை
சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில்,மஹிந்த பெற்ற வாக்குகள் மாவட்ட வாரியாக தேர்தல் திணைக்களத்தின் தகவலுடன் உள்ளது.படம் பெரிதாகத் தெரிவதற்கு மௌசை படத்தின் மேல் வைத்துக் கிளிக்கவும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் 36 %  689649 இதை 
விட வாக்களிக்காதவர்களின் தொகை  அதிகம். மொத்த வாக்காளர்களின் 64 % மானவர்கள் 
வாக்களிக்கவில்லை 1236071 இந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால்,தமிழ் மக்களின் தலைஎழுத்து வேற மாதிரியாக இருந்திருக்கலாம்.


வரும் 26 ந திகதி எல்லாம் தெரிந்து விடும்.அடையாள அட்டை கலாசாரம் தொடருமா? போலீஸ் பதிவு தொடர்ந்து நடை பெறுமா? பாதுகாப்பு வலையம் அதிகரிக்குமா? இவை யாவும்
தொடர்ந்து அமுலில் இருக்கும். எவர் ஜனாதிபதியாக வந்தாலும்,இவைகளில் மாற்றங்கள் வார,தேர்தல் முடிந்ததும் பழைய குருடி கதவைத் திறடி கதைதான் தொடரும்.