எம்ஜியாரின் நூறாவது பிறந்தநாளான இன்று நீந்தும் சில நினைவலைகள்-
எம்ஜியாரின் தந்தை பெயர் கோபால மேனன். அவருக்கு
மூன்று மனைவியர். ( எம்ஜியாரின் தாத்தா அங்காரத்த சங்குண்ணி மன்றாடியாருக்கு நான்கு மனைவியர் இருந் திருக்கிறார்கள்). கோபால மேனனின் முதல் மனைவி மாதவி அம்மாள். . இரண்டாவது மனைவி மீனாட்சி.. மூன்றாவது மனைவியான சத்யபாமாதான் எம்ஜியாரின் தாயார். இவர் கொல்லங்கோட்டை அடுத்துள்ள வடவனூ ரி ல் உள்ள மருதூர் வீட்டைச் சேர்ந்தவர். அதனால்தான் எம்ஜியாரின் பெயர் மருதூர் கோபால ராமச்சந்திரன் என்று ஆனது.
கோபால மேனன் கேரளாவில் நீதிபதியாக பதவி வகித்த வர். குந்நங்குளம் , அரூர் , இரிஞ்ஞாலக்குடா , திருச்சூர் , கரூர் , சிற்றூர் , எர்ணாகுளம் போன்ற ஊர்களில் நியாய மான நீதிபதியாக இருந்திருக்கிறார். அதனால் ஊருக்கு ஊர் மாற்றி அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தி ல் கோபால மேனனுக்கே இது அலுத்துப் போய் நீதிபதி வேலையை ராஜினாமா செய்து விட்டு கல்லுரி முதல்வ ரா க த் தன் உத்தியோகத்தை மாற்றிக் கொண்டார்.
பின்னர் கண்டியில் உள்ள ஒரு கல்லூரியின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றார். அப்போதுதான் கோபால மேனனின் ஐந்தாவது குழந்தையாக எம்ஜியார் பிறந்தார். எம்ஜியாருக்கு இரண்டரை வயது இருக்கும் போது கோபால மேனன் இறந்தார்.
இவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் எம்ஜியார் சிறு பிராயத்திலிருந்து சுமார் நாற்பது வயது வரை கடுமையான வறுமையில் இருந்திருக்கறார். காரணம் , அப்போது கேரளத்தில் வழக்கத்தில் இருந்த ' மருமக்கள் தாயம் '. ஒரு குடும்பத் தலைவர் இறந்து விட்டால் அவருடைய சொத்தில் அவருடைய குழந்தைக ளுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் , அச் சொத்தின் உரிமை முழுவதும் இறந்து போனவரின் உடன் பிறந்த சகோரதரிக ளின் மக்களுக்குத்தான் போகும். இந்தச் சட்டத்தின் காரணமாகவே எம்ஜியாரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.
எம்ஜியார் பிறந்த பிறகே அவரது தந்தை இறந்து குடும்பம் நசித்துப் போனதால் " ' முடிகாலன் பிறந்து வீட்டினெத் தன்னெ முடிச்சு! ' என்று அடிக்கடி திட்டுவார்கள் என் அம்மா" என்று தன் இளமைப் பிராயத்தைப் பற்றிக் குறிப்பி டுகிறார் எம்ஜியார்.கணவர் இறந்த பின்பு இலங்கை யிலிருந்து கும்பகோணத்துக்குக் குடி பெயர்ந்தார் எம்ஜி யாரின் தாயார் சத்யபாமா. கும்பகோணத்திலும் தொடர்ந் தது வறுமை. பசியினாலேயே எம்ஜியாரும் , அவரது அண்ணன் சக்ரபாணியும் தவிர மற்ற மூன்று சகோதர சகோதரிகளும் இறந்து போனார்கள்.
ஒருநாள் எம்ஜியாரின் அம்மா பட்டினியால் மெலிந்து கிடந்த தன் மகன் ராமச்சந்திரனைப் பார்த்து " பொழைக்கி ற புள்ளையா இருந்தா பொறந்ததுமே செத்து இருக்காது ?" என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் கேட்டிருக்கிறார்.
கணவனை இழந்த சத்யபாமாவினால் தன்னுடைய இரண்டு மகன்களையும் இரண்டு வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. "அண்ணன் சக்ரபாணிக்கும் , எனக்கும் சோறு பொங்கிக் கொடுத்து விட்டு அம்மா பட்டி னியாகவே காலம் கழிப்பார்கள்.
இப்போது நான் எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கி றேன். அதைப் பார்க்க அம்மாதான் இல்லை" என்று கூறஇந்தக் கால கட்டம் பற்றி எம்ஜியார் பெரும் நட்சத் திரமாக உயர்ந்த பிறகு பல முறை நினைவு கூர்கிறார்.
எம்ஜியாரும் , சக்ரபாணியும் கும்பகோணத்தில் இருந்த பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விடப் பட்டார்கள். சம்பளம் என்று எதுவும் கிடையாது. நன்றாக நடித்தால் வாரத்துக்கு நாலு அணா கிடைக்கும். மற்றபடி மூன்று வேளையும் சாப்பாடு உண்டு.பனிரண்டு ஆண்டுகள் நாடக த்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்ஜியார்.
பின்பு மெட்றாசுக்கு வந்துசதி லீலாவதி ( 1936) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் எம்ஜியார். அப்போது அவருக்கு வயது 19. இதில் அவர் ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார். பின்னர் தொடர்ந்து மாயா மச்சீந்திரா , பிரஹலாதா , வேதவதி அல்லது சீதா ஜன னம் , தமிழ் அறியும் பெருமாள் என்று பல படங்களில் பல ஆண்டுகள் துணை நடிகராகவே நடித்துக் கொண்டிருந்தார்
இந்தக் கால கட்டத்தில் பஸ்ஸில் செல்வதற்குக் கூட காசு இல்லாமல் சென்னை நகரம் முழுக்கவும் நடந்தே சென்ற து பற்றிக் குறிப்பிடுகிறார். (சினிமாவுக்கு முன் நாடகத்தி ல் நான் பட்ட கஷ்டம் , சினிமாவுக்கு வந்த பின் அனுபவித் த கஷ்டம் , வேலை கிடைக்காமல் மாடிப்படிகளில் ஏறி இறங்கிய அனுபவம் , காசு இல்லாமல் சென்னை முழு வதும் தினமும் பல காலம் நடந்து சென்ற அனுபவம் இது எல்லாம்தான் என்னை மனிதாபிமானமுள்ளவனாக ஆக்கியது.
தனது தாயாரின் பூர்வீக ஊரான வடவனூரில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்று எண்ணிய எம்ஜியார் , தனக்குக் கொஞ்சம் வசதி வந்த போது கவுண்டத்தரா என்ற இடத் தில் ஒரு பழைய வீட்டை வாங்கிப் புதுப்பித்து ' சத்ய விலா ஸ் ' என்று மலையாளத்தில் பெயரும் பொறித்திருக்கிறார்
எம்ஜியாருக்கு அவரது 23- ஆவது வயதில் சேகரிபுரத்தைச் சேர்ந்த லட்சுமி குட்டி-விஸ்வநாத அய்யர் தம்பதியின் மகளான தங்கமணி என்ற பெண்ணுடன் 1940- இல் திரும ணம் நடந்தது. அப்போது தங்கமணியின் வயது 18. எம்ஜி யார் அப்போது மிகக் கொடிய வறுமையில் இருந்த காலம். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் எம்ஜியார் தங்கம ணி யின் நகைகளை விற்று வாழ வேண்டியிருந்தது.
குழந்தையும் இல்லை. தங்கமணியின் நிலைமையைக் கண்டு அவரது பெற்றோர் சென்னை வந்து தங்கள் மகளை சேகரிபுரம் அழைத்துச் சென்றனர். ஆனால் தங்கள் கையி ல் இருந்ததையெல்லாம் விற்றுத்தான் தங்கள் மகளுக்கு அவர்கள் திருமணம் செய்திருந்ததால் அவர்களின் நிலையும் எம்ஜியாரின் நிலைமையைப் போலவேதான் இருந்தது. சரியான சாப்பாடு இல்லாமலேயே சேகரிபுரம் வந்த 20- ஆவது நாளில் இறந்து போனார் தங்கமணி. அப்போது அவர் வயது 20.
தன் மகனின் முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முனைந்தார் சத்யபாமா. பாலக்காட்டில் இருந்து பத்து மைல் தூரமுள்ள குழல் மன்னம் என்ற இடத்தில் எரகாட் குடும்பத்தைச் சேர்ந்த சதானந்தவதியுடன் 1942- இல் எம்ஜியாரின் இரண்டாம் திருமணம் நடந்தது. சதானந்தவதியின் வயது அப்போது 14. எம்ஜியாரின் வயது 26. சதானந்தவதி நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சதானந்தவதியை சென்னைக்கு அழைத்து வந்த பிறகுதான் தன் முதல் மனைவி இறந்து போன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் எம்ஜியார்.
சென்னை வந்ததும் சதானந்தவதிக்குக் காச நோய் தாக்கியது. அந்தக் காலத்தில் அது ஒரு உயிர்க்கொல்லி நோய். எம்ஜியாருக்கும் சரியான வருமானம் இல்லை. பிறகு , 1950- இல் சதானந்தவதிக்கு குறைப்பிரசவம் நடந்து அதன் காரணமாகவும் பலகீனமானார். அது மட்டுமல்லாமல் அவருக்கு இதயக் கோளாறும் ஏற்பட் டது. மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே கிடந்து 1962- இல் காலமானார்
சதானந்தவதி. அவர் படுக்கையில் கிடந்த போதெல்லாம் அவருக்குப் பல் தேய்த்து விடுவதிலிருந்து குளிப்பாட்டி விடுவது வரை பக்கத்தில் இருந்து எம்ஜியாரே செய்தி ருக்கிறார். சதானந்தவதியை மிகவும் நேசித்த எம்ஜியார் அவருக்கு நினைவுச் சின்னமாக குழல் மன்னத்தில் ஒரு வீடு கட்டியிருக்கிறார்.
எம்ஜியாரின் மூன்றாவது மனைவியான ஜானகி வேலை க்காரி , ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி போன்றவை உட்பட 25 பிரபலமான படங்களில் நடித்தவர். அவரது கணவர் பெயர் கணபதி பட். அவர்களுக்கு சுரேந் திரன் என்று ஒரு மகனும் இருந்தான். 1950- இல் வெளி வந்த ' மந்திரி குமாரி ' என்ற படத்தில் வி.என். ஜானகி யின் கணவர் கணபதி பட்டும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் படப் பிடிப்பின் போதுதான் எம்ஜியாருக்கும் ஜானகிக்கும் காதல் உண்டாகியிருக்கிறது. உடனே , கணபதி பட்டை விவாகரத்து செய்து விட்டு எம்ஜியாருட ன் வாழத் தொடங்கி எம்ஜியார் இறக்கும் வரை உடனிருந்தார் ஜானகி..