புதன், 5 ஜனவரி, 2011

பொனி-எம் பாடகர் பொபி பரேல் மரணம்

பொனி-எம் பாடகர் பொபி பரேல் மரணம்


அறுபத்தொரு  வயதுடைய பொபி பரேல் Roberto "Bobby" Alfonso Farrell பொனி-எம் குழுவில் முக்கியமான பாத்திரம் வகுத்தவர்.இந்தவயதிலும் ரஷ்யாவில் சென்.பீட்டர்ஸ் பார்க்கில் 30டிசம்பர் 2010
நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்று தங்கியிருந்த,
ஹோட்டலில்,இருதய நோயால் மரணமடைந்தார்.

பொனி எம் இசைக்குழுவில் பொபி பரேல்,மைசி வில்லியம்ஸ்,லிஸ் மிச்செல்,மார்சியா
பரேட் போன்றவர்களின்,கடும்முயற்சியால் அகில உலக ரீதியில் பல வெற்றிகளுக்குச்
சொந்தக்காரர்களாக பொனி எம் இசைக்குழுவைக் கொண்டு நடத்தியவர்கள்.

1970  ௦களில்,டிஸ்கோ நடனம் உலகம் முழுவதும் பிரபல்யம் அடைவதற்கு இவர்களின்
பொனி எம் பாடல்களே முக்கிய பங்கு வகித்தது என்றால் மிகையாகாது.குறிப்பாக
பொபி பரேல் தனது நடனத்தாலும்,வாய் அசைப்புகளாலும் வாலிபர் கூட்டத்தையே
கவர்ந்து வைத்திருந்தார்.

1978 களில் ரஷ்ய அதிபர் பிரஸ்நோவ்,முதன்முதலில் மேற்கத்தேய இசைக்குழுவை
பிரித்தானியாவில்  இருந்து,ரஷ்யாவின் விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில்
அழைப்பித்து,படைவீரர்களுக்கு இசை விருந்தளித்தார். அந்தப் பெருமை பொணி எம்
குழுவையே சேரும்.

பொனி எம் பாடல்களில் டாடி கூல்,மா பகெர், ரஸ்புடீன் (Daddy Cool, Ma Baker  Rasputin )
.போன்ற பாடல்கள் இன்றும் மேல்நாட்டு மக்களைக் கவர்ந்த்தவை.

பொபி பரேல் பிறந்தது அருபா ஐலன்ட்டில். இது கருபியன் தீவுகளிலுள்ள ஒரு தீவாகும்.
இவர் 15வயதில்  ஒரு மாலுமியாக தொழிலை ஆரம்பித்தாலும்,பின்னர் நோர்வே,நெதர்லாந்து
நாடுகளில் இரவு விடுதிகளில் இசைப் பாடல்களுக்கு நாட்டியமாடுபவராக இருந்தார்.

1974ல் பிரபல்யமாக இருந்த பொணி எம் இசைக்குழு,ஜெர்மன் பாடகரும்,கவிஞ்ஞருமான
பிராங் பேரியனுடன் கைகோர்த்து 38 டொப் டென் பாடல்களை வெளியிட்டார்கள்.அதில்
பிரவுன் கேர்ல் இந்த ரிங் மற்றும் மேரீஸ் போய் சைல்ட்( Brown Girl in the Ring and Mary's Boychild.) என்ற இரு பாடல்களும் அடங்கும்.

1978 ல் உலக சாதனை படைத்த Daddy Cool. That year, their version of By the Rivers of Babylon
போன்ற பாடல்கள் பல வாரங்களுக்கு முதலிடத்தை தக்க வைத்திருந்தது பிரிட்டனில்.

1986இல் இவர்களது கூட்டணி உடைந்து,தனியாக வேறு பலருடன் சேர்ந்து போனி எம்
இசைக்குழுவை நடாத்தி பொணி எம் பொபி பரேல் என்றபெயரில் அழைக்கப்பட்டர்

போனி எம் பாடல்கள்: