இதே பாடலை முன்பு நான், யூ ட்யூப்பில் வலையேற்றியபோது,தொழிநுட்பத்தில் ஒரு கத்துக் குட்டியாக இருந்ததால்,ஏதோ ஒன்றை இழந்த ஒரு குற்ற உணர்ச்சி என் மனத்தைக் குடைந்து கொண்டு இருந்தது.அதை நிவர்த்தி செய்யும் வகையில்,திரும்பவும்
இந்தப் பாடலை யூ ட்யூப்பில் வலையேற்றியுள்ளேன். பெற்ற தாயையும்,பிறந்த பொன்னாட்டையும், மறப்பது நமது மரபல்லவே.என்னை ஈன்ற மட்டக்களப்புக்கு, நான் செய்யும் சிறு காணிக்கை.மட்டக்களப்பில் பிறந்தவர்களும், இசையில் சளைத்தவர்களல்ல என்பதை நிருபிக்கும் பாடல்.இயற்றிப் பாடுபவர் மட்டக்களப்பு திரு.ஞானப்பிரகாசம்,இசை மட்டுநகர் ஆதவன் இசைக்குழு.அல்பம்: மட்டுநகர் கீதங்கள்.
இதில் இரண்டு பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்தும் ஏனையவைகளை வலையேற்றுவேன்.அதுவரையில் இதைக் கேளுங்கள் பழைய பதிவுக்கு இங்கே செல்லுங்கள்.
