வெள்ளி, 26 ஜூன், 2009

இந்தியா எனக்குத் துணையிருந்தால் !....















யார் யாரோ ஆயுதம் வைத்திருக்கிறார்கள் -நானும் ஓர் ஆயுதம் வைத்திருந்தால் என்ன குறை ? இலங்கையில்தான் இதை பாவித்துப் பார்க்கலாம் --போடுங்க இப்பவே ஒப்பந்தம் ஐ .நாவில் பார்க்கலாம் மீதிய

எழுத்தாளர் சுஜாதாவின் 18 கேள்விகள்







முப்பத்து இரண்டு கேள்விகளால் நொந்து நூலாகி,குற்றுயிரும் குறையுயிரும்மாக இருக்கும் உங்களுக்கு,எழுத்தாளர் சுஜாதாவின் பயனுள்ள பதினாறு கேள்விகள்,நீங்களே கேள்விகளை எழுதி அதற்கு பதிலை எழுத சொல்லி உள்ளார், நீங்க எழுதும் பதில் மூலமா நம்மை யார் என்று அடையாளம் காணலாம். எழுத்தாளர் சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" என்ற புத்தகத்தில் இருந்து
இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கையில்தான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ .ஐ. டி அனுமதித் தேர்வுவரை. வாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் கொள்ள கீழ்க்காணும் கேழ்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள். (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது )
1. 01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?
2. 02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?
3. 03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?
4. 04.எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள் ?
5. 05.எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
6. 06எத்தனை முறை வாக்களித்துள்ளீர்கள்?
7. 07.அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் உண்மையாக வேலை செய்கிறீர்கள்?
8. 08.உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?
9. 09தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செயகேறீர்கள்?
10. 10.எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?
11. 11.எத்தனை மணி நேரம் தொலைக் காட்சி பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?
12. 12.போனவருடம் எத்தனை பேருக்கு புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து அனுப்புநீர்கள்?
13. 13.பாடல்கள் மட்டும் எத்தனை மணி நேரம் கேட்கிறீர்கள்?
14. 14.தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிக்கை படிக்கிறீர்கள்?
15. 15.எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறீர்கள்?
16. 16.தினம் எத்தனை மணி நேரம் பேருந்து,ஈருருளிகளில் பயணிக்கிறீர்கள்?
17. 17. பாடசாலையில் உங்களுக்கு பிடித்த பாடம் எது?
18. 18. இப்போது, தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார்?
இந்த பதினெட்டுக் கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிட்டு ஒருவாரம் கழித்து அவற்றைப்பாருங்கள், உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
1. 01.சோம்பேறி
2. 02.சாதாரண மனிதன்
3. 03.நல்ல குடிமகன்
4. 04.அறிவு ஜீவி

( நன்றி : ஆனந்த விகடன் )

இலவசம் வேண்டாம்














ஒரு கோடி ரூபாயில் ஆலயம் வேண்டாம் --பெரிய
ஊரைத் திரட்டி ஒளிவிளக்கு இடவேண்டாம்
இருளைப் பிளந்து ஒளியைக்கொடுக்கும் சூரியனாய் –கல்வி அறிவைக் கொடுங்கள் அதுவொன்றே போதும்

வியாழன், 25 ஜூன், 2009

மட்டு மாநகர்




















வான் உயர் புகழ் மாமாங்கேஸ்வரர் அருள் -நிறை
தான் தோன்றி ஈஸ்வரர் பெருமை கொள்
மீன் பாடத் தேன் பாயும் மட்டு மாநகர் –இதற்கு
மிதிலை மாநகர் கூட நிற்குமா நிகர்


இறைவனாக இருக்கின்றேன்.














நான் இறைவனாகத்தான் இருக்கிறேன்-உலகில்
மனிதனாக இருப்பதாக நீ இருந்தால்
எங்கும் தேடி அலைய வேண்டாம் – தினம்
உங்கள் காலடியில் நானிருப்பேன்

உன்னையே நீ உணரவில்லை –பிற
உறவுகளை ஒழுங்காகப் புரியவில்லை
இன்னுன் ஏன் தேடுகிறாய் என்னை –அன்பு
அன்னையின் முகத்தைப் பார்!

அறிவுள்ள தந்தையை நேசி –உலகின்
எண்ணில்லா இதயங்களை யோசி
அன்பான அயலவர்களைப் பெற்று நாளும்
பண்பாக வாழ்வதையே போற்று

கண்ணில்லா மனிதர்களாய் வழாமல் --பெரும்
கருணையுள்ள மனிதனாய் வாழ்.
எங்கும் நீ எனைத் தேடவேண்டாம்--அன்பு
பொங்கும் மனதில் ஓரமாய் நானிருப்பேன்

வெள்ளி, 5 ஜூன், 2009

தண்ணீர்
















குறைந்த விலையில குளிர்ந்த பாணம் அரசின் அனுமதியுடன் அருந்துங்கள் ஆபத்து எதுவுமில்லை வரிகள் தனி.

சவூதியில் இருந்து கடிதம் !









அன்புள்ளவளுக்கு !...... வணக்கம்.

நடப்பவைகளை நான் வந்து சொல்வேன்—கொஞ்சம் நாளை எண்ணிக்கொள் நான் அங்கு வருவேன். வேலையா இது? வெட்கம் கெட்டவர்கள்!—சோயாக் கூளைக் குடித்து கும்மாளம் அடிக்கிறார்கள்

நான் வந்த வேளையோ இல்லை -- நாம் நலிந்து போகும் நேரமோ பாவி போன இடமெல்லாம் --பெரிய பள்ளமும் திட்டியும் போல

சம்பளம் தருவதற்கு பணமும் இல்லை –நல்ல சாப்பாடு தருவதற்கும் இங்கு யாருமில்லை வெளியே இதைச் சொன்னால் –மிக வெட்கம் என்னக்கும் இல்லை

கடவுளே இதைக் கேளுங்கள் என்றால் –இங்கு கலாஸ் ஓடிப் போய்விடு என்கிறார்கள் யாரைச் சொல்லி நானழுவேன் --இனி யா அல்லாஹ் நானும் இப்போ தொழுவேன்

பாடிப் பறந்து திரிந்த என்னை –இந்த பாழும் நாட்டில் பன்னாடை ஆக்கிவிட்டார்கள் கானல் நீரைக் கண்ட மான் போலாகி -- மெய் களைத்துக் கதி கலங்கித் தவிக்கின்றேன்

புத்தி கெட்டுப் பேதலித்து , பேராசை கொண்டு –கையில் வைத்திருந்ததையும் வள்ளிசாக விற்றுவிட்டு வெறுங்கையை வீசி விரைந்து வந்துவிட்டேன் –நெஞ்சு பொறுக்குதில்லை நான் நடத்தியதை நினைத்து

ஏரு பிடித்தேனும் இருவருக்கும் நான் –ஊரில் ஒருபிடிச் சோற்றுக்கு உண்மையாய் உழைப்பேன் வளவை ஈடு வைத்தாலும் பரவாயில்லைவரும் நாளில் நாடு வருவதற்கு வழி செய்துவிடு

உண்மையாகவே இது எனது அனுபவந்தான்.ஒரு புறம் ஆயுதப் படைகளின் கெடுபிடி ,மறுபுறம் ஆயுதம் ஏந்தியவர்களின் வரி வசூலிப்பு, இரண்டும் கெட்டான் நிலையில் தொழில், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ் நிலையொன்று வந்தபோது, இருந்ததையெல்லாம் விற்றுச்சுட்டு அங்கே போனால் ஆறு மாதம் சம்பளமே தரவில்லை. சொன்ன வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை. எப்படி இருக்கும். .வீட்டில் இருந்து கடிதம் டெலிபோன் எல்லாம் வரும் ,என்ன பதில் சொல்வது.கதைப்பதற்கு அரபு தெரியாது.அவர்களுக்கோ அரபியைவிட வேறு எதுவும் விளங்காது.இறைவா என்ன கொடுமை .அந்தக் கொடுமையின் பிரதிபலிப்புத்தான் இந்தச் சவூதிக் கடிதம்.

முடிந்தால் ஒரு வரி எழுதுங்கள். வழ்க்கம்போல உங்கள் பிரதிபலிப்பை நான் அறிந்து கொள்வதற்காகத்தான்