செவ்வாய், 5 ஏப்ரல், 2011

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே,!



"சுருட்டுக் குடிக்கக் கூடாது" இது இலங்கையில்,ஆங்கில ஆட்சியாளர்களின் 
காலத்தில், அரச திணைக்களங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,புகையிரத 
நிலையங்கள், இப்படி முக்கியமான இடங்களில் இந்த விளம்பரப் பலகைகைகளைக் காணக் கூடியதாக இருந்தது.இதன் விளக்கம் என்னவென்று 
அந்நாளில் புரியவில்லை,விளக்கம் புரிய ஆரம்பித்த போது,சிரிப்புத்தான் வந்தது."புகை பிடிக்கக் கூடாது"என்பதை எப்படி ஆங்கிலேயர் விளங்கியுள்ளார்கள் என்பதை நினைத்து.

இது போலத்தான்,இந்தப் பாடலும்,இலங்கையில் மது என்ற பதம் அநேகமாகப் 
பாவிக்கப் படுவதில்லை,தற்போதைய சமுதாயம்,சாராயம்,கள்,போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மாத்திரமே உபயோகிக்கிறார்கள். இலங்கையில் 
மதுக் கடைகளைக் கொண்டு  வருவதற்கு முதல், கள்ளுக் கடைகள் தான் 
பிரபல்யம்,1970  துகளில் பிரபல்யமான இப் பாடலில் கள்ளின் மகத்துவம் 
சொல்லப் பட்டுள்ளது, இதனால் வரும் சங்கடங்களையும்,மிகவும் எளிமையாகப் பாடி விளக்கியுள்ளார் திரு நித்தி கனக ரெத்தினம் கேட்டுப் 
பாருங்கள்.