வியாழன், 1 ஜூன், 2023


 புத்திரருக்குப் பகை





தீதுநன் றறிகிலாச் சேய ரென்செய்வார்,
கோதற அவரைநன் னெறியிற் கூட்டிடா(து),
ஏதங்க ளவர்முன் செய்(து) இழிவைக் கற்பிக்கும்,
தாதைதாய் புதல்வர்க்குச் சத்து ருக்களே.

தீயது எது என்றும் நல்லது எது என்றும் அறியாத குழந்தைகள் என்ன செய்வார்? குற்றம் நீங்குமாறு அவரை நன்னெறியில் வளர்க்காமல், அவர் முன்னாலேயே தாங்கள் குற்றங்கள் பல செய்து தவறான விஷயங்களைக் கற்பிக்கும் பெற்றோர்களே அவர்களுக்கு எதிரிகள்.