இலங்கை வரைபடத்தில் எங்க ஊர் பெயரைக் காணோமுங்க,நான் எனதுவெளி நாட்டு நண்பர் ஒருவருக்கு மின் அஞ்சல் அனுப்பியிருந்தேன்.அவர் அதில் இருந்த எனது இலங்கை விலாசத்தை யாஹு வரைபடத்தில் தேடியிருக்கிறார்,அதில் காணப்படவில்லை,எனக்கு எடுத்துச் சொன்னார்,என்னப்பா சரித்திரத்தில் எல்லாம் இடம்
பெற்ற பெயர் என்று சொல்கிறீர்கள்,இந்த வரை படத்தில் Batticaloa என்ற பெயர் எங்கேயும்
காணோம்,நீங்களும் வேணும் என்றால் தேடிப்பாருங்கள் என்று இந்தப் படத்தை அனுப்பியிருந்தார்,நானும் பார்த்தேன் Batticaloa வைக் காணோமுங்க.
அண்ணன் வடிவேல் ஒரு திரைப்படத்தில்,கிணத்தைக்கானோமுங்க என்ற ரேன்ஞ்சில்
யஹுவிடம் முறையிட்டேன்,முறைப்பாட்டைப் பெற்றவர் இருபத்து நான்கு மணித்தியாலத்தில்,கண்டுபிடித்துத் தருவதாகவும்,இல்லையேல், உடுப்பைக் கழட்டிஓரமாய் வைத்துவிட்டு ஓடிவிடுவேன் என்றார்,பதிவு எழுதும் வரை,எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.எங்க ஊரின் பெயருடன்,சேர்ந்து போன ஊர்கள் Jaffna ,Trnicomalee ,kalmunai ,mannar ,இவைகளைக் கண்டால்,உடனடியாக அருகிலுள்ள,யாஹு
பொலிசாருக்கு அறிவிக்கவும்.தகுந்த சன்மானம் வழங்ககப்படும்..
காணாமல் போன ஊர்.பற்றிச் செய்த முறைப்பாட்டுக்கு,யாஹுவால், எனக்கு
வந்த பதிலை அறிய இங்கே அழுத்தவும்
அன்புடன்.!......