தமிழ் மாதத்திகதிகளுடன்,ஒத்துப்பாருங்கள்,சரியாக வரும்,கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களூடன்,எனது வாழ்க்கையில் நடந்த சில அதிருப்தியான முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் இதை வெளியிடுகிறேன்
மாதம் பன்னிரெண்டுக்கும் பலன்கள்.
மாதம் பன்னிரெண்டுக்கும் பலன்கள்.
கேளப்பா பனிரண்டு மாதந்தோறுங்
கெடிதான கரிநாட்கள் வாறபோது
ஆளப்பா ருதுவான மங்கையர்க்கும்
அதிற்பிறந்த குழந்தையின் றன்வழிசெல்வோர்க்கும்
சூளப்பா மனையெடுக்க வித்துப்போட
தோகை மனஞ்செய்வதற்கு நலமுள்ள தெல்லாம்
நாளப்பா ஆகாத நாளேயாகா
நன்மையில்லை யெப்போது மிடறுண்டாமே
தை மாத பலன் .
நீங்குமே தைமாத மிரண்டாந்தெய்தி
நெறிநெடுக்கு மூன்றிலையும் பதினொன்றிலேயும்
பாங்குடனே பதினொன்றுங் கரிநாளாகும்
பால்மாடு வாங்கினால் சேதமாகும்
தூங்கிவிடும் ருதுவானால் பெண்கள் சேதம்
தூரவழி போவார்க்குத் துன்பமுண்டாம்
அலங்கார பூமி நட்டங் காலி நட்டம்
அழித்துவிடும் வீடு கட்டத் தீக்கோளாமே.
மாசிமாதப் பலன்
கோளான மாசியிலே பதினைந்தாம் நாள்
குணங்கெடுதி பதினாறும் பதினேழா நாள்
மீளார்கள் வழி போனால் வீடு தீக்கோள்
மெல்லியர்கள் ருதுவானால் தாலிபோகும்
நாளான பயிர் தீயுங் காலி சேதங்
நற்குழ்ந்தை பிறந்தாலுஞ சேதமாகும்
வாழ்வெல்லாமிழந்து விடும் வீடும் பாழாம்
வந்தபிணி கொல்லுமென்று வகுத்திட்டேனே
பங்குனி மாத பலன்
வகுத்திட்டேன் பங்குனியில் பதினைந்தாக
வகையான பதினாறும் பத்தொன்பதாநாள்
தொகுத்துமே வீடு கட்டப் பாழாகும் பார்
தோகை ருதுவானாலுந் தாலி சேதம்
மகுத்துவமுமழிந்துவிடுங் கெர்ப்ப சேதம்
மாடாடு சேதமாம் பூமி நட்டம்
தொகுத்துமே வழிபோனாலிடறுண்டாகுந்
துன்ப மெல்லாந் தொடர்ந்து வருமறிந்து பாரே