சனி, 3 ஏப்ரல், 2010

மாதம் பன்னிரெண்டுக்கும் பலன்கள்.

தமிழ் மாதத்திகதிகளுடன்,ஒத்துப்பாருங்கள்,சரியாக வரும்,கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களூடன்,எனது வாழ்க்கையில் நடந்த சில அதிருப்தியான முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் இதை வெளியிடுகிறேன் 


மாதம் பன்னிரெண்டுக்கும் பலன்கள்.
கேளப்பா பனிரண்டு மாதந்தோறுங்
கெடிதான கரிநாட்கள் வாறபோது
ஆளப்பா ருதுவான மங்கையர்க்கும்
அதிற்பிறந்த குழந்தையின் றன்வழிசெல்வோர்க்கும்
சூளப்பா மனையெடுக்க வித்துப்போட
தோகை மனஞ்செய்வதற்கு நலமுள்ள தெல்லாம்
நாளப்பா ஆகாத நாளேயாகா
நன்மையில்லை யெப்போது மிடறுண்டாமே

தை மாத பலன் .
நீங்குமே தைமாத மிரண்டாந்தெய்தி 
நெறிநெடுக்கு மூன்றிலையும் பதினொன்றிலேயும்
பாங்குடனே பதினொன்றுங் கரிநாளாகும் 
பால்மாடு வாங்கினால் சேதமாகும் 
தூங்கிவிடும்  ருதுவானால் பெண்கள் சேதம் 
தூரவழி போவார்க்குத் துன்பமுண்டாம் 
அலங்கார பூமி நட்டங் காலி நட்டம் 
அழித்துவிடும் வீடு கட்டத் தீக்கோளாமே.

மாசிமாதப் பலன்
கோளான மாசியிலே பதினைந்தாம் நாள்
குணங்கெடுதி பதினாறும் பதினேழா நாள்
மீளார்கள் வழி போனால் வீடு தீக்கோள்
மெல்லியர்கள் ருதுவானால் தாலிபோகும்
நாளான பயிர் தீயுங் காலி  சேதங்
நற்குழ்ந்தை பிறந்தாலுஞ சேதமாகும்
வாழ்வெல்லாமிழந்து விடும் வீடும் பாழாம்
வந்தபிணி கொல்லுமென்று வகுத்திட்டேனே

பங்குனி மாத பலன் 
வகுத்திட்டேன் பங்குனியில் பதினைந்தாக 
வகையான பதினாறும் பத்தொன்பதாநாள்
தொகுத்துமே வீடு கட்டப் பாழாகும் பார் 
தோகை ருதுவானாலுந் தாலி சேதம் 
மகுத்துவமுமழிந்துவிடுங் கெர்ப்ப சேதம் 
மாடாடு சேதமாம் பூமி நட்டம் 
தொகுத்துமே வழிபோனாலிடறுண்டாகுந்
துன்ப மெல்லாந் தொடர்ந்து வருமறிந்து பாரே 


சித்திரைமாதப் பலன்.
உண்டாக்குஞ சித்திரையிலாறாந் தெய்தி 
யுண்மையுடன் பதினைந்தாந் தெய்திதன்னில்  
பண்டுள்ள முதற் சேதம் குழந்தை சேதம் 
பாக்கியங்கள் குறைந்துவிடுந்தீக்கோள் கண்டாய் 
கண்டதொரு பூமி நட்டங் காலி நட்டங் 
கல்யாணஞ செய்தாலு மலடியாவாள்
தெண்டம் வரும் வழிபோனால் கெடுதியாகும்
தீவினையா மற்ற தெல்லாந் திடம் வராதே.

வைகாசி மாதபாலன்.
திடமான வைகாசி மூன்றாந் தெய்தி 
செயலான பதினாறு பதினேழா நாள் 
அடமான ராசியப்பா ராஜ தண்டம்
அடுத்தவர்கள் பகையாகுந் துக்கங்காட்டும் 
செடமதிலே நோயுண்டாம் பூமி நஷ்டம் 
சென்றவிடம் பலியாது காலி சேதம் 
மடமதுவுந் தீக் கோளாய் விரோதமாகும் 
.மைந்தர்களுஞ சேதமாம் வரிசை கேளே 

ஆனிமாத பலன் 
வரிசையில்லை ஆனி யதிலோராந்தெய்தி 
வகையான ஆறாநாள் பலனைக் கேளு 
உரியவர்கள் பகையாகும் உடந்தை துக்கம்
ஊர் வழிதான் போனாலு மிடறுண்டாகும்
கருகிவிடும் பூமிநட்டங் காலி நட்டங் 
கல்யானந் தவறிவிடுங்காயமுண்டாங் 
பெரியோர்கள் பகையாகு மினவிரோதம் 
பிறந்த பிள்ளை சேதம் வரும் களவுபோமே

ஆடிமாத பலன் 
களவுபோம்ஆடியதில் ரண்டானாளுங் 
கலந்த பத்து மிருபதிலும் பலனைக்கேளு
தளர்ந்திளைப்பு சோகையுண்டாம் வீடு தீக்கோள்
சல்லியங்கள் பூமி நட்டங் காலி நட்டம் 
கிளைவழியில் துக்கமுண்டாங் கெர்ப்ப சேதம் 
கெடுதி வரும் வழிபோக இடறுண்டாகும்
பலம் பொருளு மழிந்துபோம் கிரகம் வைத்தால் 
பாழாகிப் போவதன்றிப்பகையுண்டாமே  
  
ஆவணி  மாத பலன்.
பகையான ஆவணி யிரண்டாந்  தெய்தி
பதிகெட்ட வொன்பதிலுமிருபத் தெட்டில்
வகையான முதல் சேதம் காலி சேதம் 
வழி போனாலிடறுண்டா  மைந்தர் சேதம் 
துகையான களவுபோம் வீடு தீக்கோள் 
தோகையர்கள் ருதுவானால் மலடியாவாள் 
அகமெல்லாந்  தாழ்வாகு மினவிரோதம்   
அல்லலதுவுண்டாகும லைச்சல்தானே

புரட்டாசி மாத பலன் 
அலைச்சலே புரட்டாசி பதினாறா நாள் 
அறிவுகெட்டயிருபதிலுமொன்பதாநாள் 
நிலைச்சிருந்த கெர்ப்பமது சேதமாகும் 
நீங்காத சனமெல்லா நீங்கி நிற்கும் 
குலைச்சுவிடும் வீடு முதல் காலி நட்டங் 
குடிவிரட்டும் வழி போனால் மீளமாட்டார் 
கலைச்சு விடுங் கெர்ப்பமது சேதமாகுங்
கன்னிருதுவானால் தாலிபோமே        

ஐப்பசி மாத பலன் 
தாலிபோம் ஐப்பசி யிலாறாந்தெய்தி
சந்ததி யுஞ்சேதமாம் பூமி அர்ப்பம்
வாலிபப் பெண் ருதுவானால் வாழ்வு போகும் 
மைந்தர்களுஞ்சேதமாம் வீடு தீக்கோள் 
காலிலே காயமுண்டாம் நோய்கள் மிஞ்சும் 
கல்யாணமு கிந்தாலுந் துன்பங் காட்டும் 
ஆவி விசமுண்டாகுந் துக்க நேரும்
அடுத்த சென்ம பகையாகும சடுண்டாமே 


கார்த்திகை மாத பலன் 
அசடுண்டாங் கார்த்திகையில் முதற் செவ்வாயும் 
ஐயிரண்டு பதினேழு பலனைக்கேளு 
நிசத்திருந்த வாழ் வெல்லாங்குறைந்து காணும் 
நில்லாது நீடு கட்டத் தீக் கோளாகும் 
வசையுண்டாங் கெர்ப்ப மது சேதமாகுங் 
வழி போனாலி டருண்டாமங்கை பூர்க்கில் 
அசையாத மங்கிலியஞ்சேதமாகும் 
அடுத்த ஜென்மபகை பூமி சேதமாமே


மார்கழி மாத பலன் 
சேதமா மார்கழியி லொன்பதாநாள்
திடம் குலையும் பதினொன்றுங் கரிநாளாகும்
பாத மதில் பிளவையுண்டாங் வீடு தீக்கோள் 
பாழாகும் பூமி நட்டங் காலி நட்டம் 
கோதையர்கள் ருதுவானால் குழ்ந்தையர்ப்பம் 
குடி விரட்டும் அடுத்த சனம் பகையுமாகும் 
நீதமுடன் வழி போனாலிடறு ண்டாகும் 
நீங்காத சன மெல்லா நீங்கிப் போமே,

நம்புவது நம்பாதது உங்களது கையில் நான் படித்ததை உங்களுக்குத்  தெரியப்படித்தியுள்ளேன்.கணனி
பாவிக்கத்தெரிந்தவர்களுக்கு,அடுத்தவர்கள் அறிவுரை தேவையில்லை,நாம் எல்லாம் சொந்த புத்தியுடையவர்கள்,நன்மை தீமை எதுவென்பதை பகுத்தறியக்கூடியளவுக்கு நமக்கு அறிவு உண்டு,ஒரு நாளைக்கு எத்தனையொ சினிமாப்படங்கள்,வெளியாகுது அவ்வளவு படங்களும்,மக்களை நல்லவழிப்படுத்துகிறதா,அந்தப் படங்களைப் பார்த்து,மக்கள் சீரளிந்திருந்தால்,இன்று இந்த உலகத்தின் 
நிலைமை என்னவாகியிருக்கும்,உபதேசங்களை உங்கள் வீட்டுடன் வைத்துக்கொள்ளூங்கள்,உங்கள்
கருத்துக்களை தையிரியமாகச்சொல்லுங்கள்,பெண்களின் பெயருக்குள் ஒளிந்து கொண்டு,முகம் காட்ட
தையிரியம் இல்லதா உங்களுக்கு,உபதேசம் ஒரு கேடா?

(தொப்பி யாருக்கு அளவாக இருக்கோ,அவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்,பத்தும் பலதும் வாசகர்களுக்கு
அல்ல) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள