திங்கள், 21 செப்டம்பர், 2009

களுதாவளை கு பாக்கிய ராஜாவின் பக்தி கீதங்கள்

.பாடலை எழுதிப் பாடியிருப்பவர் களுதாவளை குஞ்சித்தம்பி பாக்கியராஜா இசையமைத்து ஒலிப்பதிவு மருதமுனை M.H.M. நாசார்

களுதாவளை கு.பாக்கிய ராஜாவின் பக்தி கீதங்கள்
தனி ஒரு மனிதனாக ஒரு சாதனையைச் சாதிப்பது என்பது எழுத்திலே விவரிக்க முடியாத ஒன்று.அதை சாதித்துக் காட்டியிருக்கிறார் களுதாவளை குஞ்சித்தம்பி பாக்கிய ராஜா.ஓய்வுபெற்ற பெரும் பாக உத்தியோகஸ்தரான இவர் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருந்தபோதும். களுதாவளை அவர் வாழும் இடம் (திருமணம் மூலம்) ஆகிவிட்டது.தனது அயராத முயற்சியால் "பாக்கியராஜாவின் பக்தி கீதங்கள்" என்ற இறுவட்டை அண்மையில் வெளியிட்டு இருந்தார். அதில் இருந்த பன்னிரு பாடல்களும் இனிமையானவை,அருமையானவை இதில் ஒரு பாடல் "வா வா வாணியே " ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா? கலையில் ஆர்வமுள்ள ஒருவரான மருதமுனை M.H.M. நசார் இசையமைத்து ஒலிப் பதிவும் வழங்கி உள்ளார் நீங்களும் கேட்டுப் பாருங்கள் வெளியிட்டவர்கள் டிஜிட்டல் மியுசிக் சென்ரர் களுதாவளை.