மனைவியை மதித்தவர் -தென் கச்சி சுவாமி நாதன்
இக்காலத்து ஓர் இல்லத்தரசி என்னைப் பார்த்து தீடிரென ஒரு கேள்வி கேட்டார்,"ஏன்? சார்,காதலுக்கும்.பக்திக்கும் என்ன வித்தியாசம்?"
எண்ணெய் பார்த்துக் கேட்க்கிறாரே என்று எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.இடுந்தாலும்,சமாளித்துக்கொண்டு பதில் சொன்னேன்.
"இரண்டுமே அன்பின் வெவ்வேறு வடிவங்கள், மீது காட்டுகிற அன்பு,காதல்!கடவுள் மீது காட்டுகிற அன்பு.பக்தி!
"அப்புறம்,எதுக்காக கணவன் மீது பக்தி செலுத்தச் சொல்றாங்க.?
"என்ன சொல்றீங்க? "
"கணவனே கண் கண்ட தெய்வம்,பத்தி பக்தி,இப்படியெல்லாம் சொல்றாங்களே,இந்தக் காலத்திற்கு இவை எல்லாம் சரிப்படுமா,சார்?"
"உங்க கேள்வி நியாயமானதுதான்,இருந்தாலும் கணவனைத் தெய்வமா நினைக்கிற மனைவியும்,மனைவியைத் தெய்வமா நினைக்கிற கணவனும்
இந்த மண்ணுல இருக்கத்தான் செஞ்சாங்க ....!"
"அப்படியா சொல்றீங்க?"
"இல்லறமும்,துறவறமும் அவர்கள் வாழ்விலே சங்கமம் ஆகியிருக்கு!"
"அது,எப்படி? "என்றார் ஆச்சரியத்துடன்!
"இப்படி உக்காருங்கள்!" என்று கூறி ஆரம்பித்தேன்!"
கங்கைக் கரையிலே அந்தத் தந்தையும் மகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடம் இன்னும் கொஞ்சதூரம்தான்.கொல்கத்தாவுக்கு மேற்கே அறுபது மைல் கல் தொலைவிலுள்ள ஜெயராம்பாடியிலிருந்து அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
"அப்பா!.கங்கைக்கரையில் குளிக்கவேண்டும்போல் இருக்கிறது!"என்ற
மக்ளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அப்பெரியவர் தம் மக்ளை
அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.அப்பெண் குளிக்கப் போவது ஆன்மிக
கங்கையில் என்பது.அப்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது.
ஆமாம்,அந்தப் பெண்ணின் கணவர் அங்கேதான் இருக்கிறார்,யார் அவர்?
அவர்தான் ஸ்ரீ இராம கிருஷ்ணர்.
அப்படியானால்,அந்தப் பெண்.........? அன்னை ஸ்ரீ சாரதா தேவி.
ஆண்டவனை அடையாளம் காணுகிற முயற்சியிலே அவர் அமந்திருக்கிறார்.
அவரிடம் அடையாளம் காட்டிக்கொள்கிற முயற்சியிலே இவர் போய் அ.ங்கே நிற்கிறார்.யாரும் எதிர்பாராத ஒன்று அப்போது அங்கே நடந்தது.அவர் ஒரு துறவிபோல நடந்து கொள்ளவில்லை.ஒரு கணவன் போலவே நடந்து கொண்டார்.
"விலகிப்போ! " என்று சொல்லவில்லை.விரும்பி "வா" என அன்போடு வரவேற்றார்.அவர்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தார்.
அப்போது ஸ்ரீ சாரதா தேவிற்கு உடம்பு சரியாக இல்லை.காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.எனவே சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தார்.
கணவருக்கு மனைவியாக மட்டுமல்ல,குருவுக்குச் சீடராகவும் இருந்து தம் கடமைகளைச் செய்யத் தொடங்கினார். அன்னை ஸ்ரீ சாரதா தேவி.இந்த
மண்ணின் மகிமை அது! பெண்ணின் பெருமை இது!.
அன்று அசோகவனத்தில் சீதா தேவி சிறையிருந்த கதை நமக்குத் தெரியும்.
இன்று ஸ்ரீ சாரதா தேவி அவருக்கென்று ஒதுக்கப்பட்ட சிறை போன்ற சிறு அறையில் வாசித்தார்!.
ஆனால்,இது தண்டனையல்ல.தவம்!இந்தச் சிறையின் நீளம் 9.5அடி அகலம் 8 அடி.இந்த அறையின் பெயர் நஹபத் . இந்த அறையில் இருந்து புறப்பட்ட ஆன்மிக ஒளி இன்று பல உள்ளங்களில் பரவி நீக்கமற நிறைந்துள்ளது.இவ்வறையிலிருந்து
பார்த்தால் குரு தேவரின் அறை தெரியும்,அப்படி ஒரு அமைப்பு.
அதிகாலை மூன்று மணிக்கு எழுவது.குளிப்பது.வழிபாடு செய்வது.குறு தேவரைக் கவனிப்பது.அவரை நாடி வரும் அடியவர்களுக்கு உணவு சமைப்பது.இப்படியே அன்றாடப் பொழுதுகள் கழிகின்றன, தவறானமல் நடந்து கொன்டிருக்கிறது, என்றாலும் அன்னையின் அடக்கமான செயல்பாடுகளுக்கு ஓர் உதாரணம்.ஒரு தடவை அங்கு பணிபுரிகிற ஆலய
அதிகாரி சொன்னது.
"ஸ்ரீ சாரதா தேவி இங்கே வசிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனா ஒரு நாள் கூட, ஒரு தடவையேனும் நாங்க அவரைப் பார்த்ததேயில்லை!".
"தெய்விகத்தம்பதிகள்' என்று ஒன்று உண்டல்லவா? அதற்கு ஒரு உதாரணம்
எடுத்துக் காட்டுத் தேவையென்றால் எங்கேயும் தேடி அலைய வேண்டாம்.
தட்க்ஷிணேஸ்வரம் போனால் போதும் மனைவியைத் தெய்வமாகவே கருதி வழிபட்ட கணவரை அங்கேதான் பார்க்க முடியும்.
ஒரு நாள் குருதேவர்,தமது அறையில் கண்களை மெல்ல மூடிய நிலையில்
அமர்ந்து இருக்கிறார்.யாரோ அறைக்குள் நுழைகிற சப்தம் இந்தநேரத்தில்
இங்கே யார் வரக் கூடும்? தம் அண்ணன் மகள் லட்சுமியாகத்தான் இருக்கும்.இப்படி எண்ணிய குருதேவர் "காதவைச் சாத்திக்கொண்டு போ! "
என்கிறார்
அப்போது அவர் "துயி"என்ற பதத்தைப் பயன்படுத்தினார்வங்காளத்தில் "துயி " என்ற பதம் சிறுவர்களையும் வேலைக்காரர்களையும் அழைக்கின்ற வார்த்தை.
வாடி,போடி என்று சொல்கிறோமல்லவா? அதுபோல 'துயி' என்பது 'அடி 'என்று பொருள்படுகின்ற சற்று மரியாதைக் குறைவான வார்த்தை "சரி.."
அப்படியே செய்கிறேன் என்று பதில் வருகிறது.
குரலைக்கேட்ட குருதேவருக்கு அதிர்ச்சி ! இது லடசுமியின் குரல் அல்லவே!
சாரதாவின் குரலல்லவா? நிமிர்ந்து பார்க்கிறார். எதிரே ஸ்ரீ சாரதா தேவி
அவர் கையில் உணவுத்தட்டு, குருதேவருக்காகக் கொண்டுவந்திருக்கிறார்.
மரியாதைக்குறைவாக அன்னையை அழைத்து விட்டோமே! அவர் வெட்கப் படுகிறார்.வேதனைப் படுகிறார்.
"வந்தது நீயா?" நான் லடசுமி என நினைத்துவிட்டேன்,தயவு செய்து என்னை
மன்னித்து விடு !"
"அதனாலே என்ன? அது ஒன்னும் தப்பில்லை!"
என்றாலும் குருதேவருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை.
மறுநாள் அன்னை இருக்குமிடம் போய்ச் சொல்கிறார் குருதேவர் "நான் உன்னை மரியாதைக் குறைவாய் அழைத்து விட்டேன் அதை நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை"
அன்னை நீண்ட காலத்துக்குப் பிறகு.இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து "அடி என்று கூட என்னை அழைக்காத ஒருவரை நான் கணவராகப் பெற்றிருந்தேன்,ஆக அவர் என்னை எப்படியெல்லாம் போற்றினார்? ஒரு முறை கூட என்னைக் கடிந்து கொண்டதில்லை.என் உணர்வுகளை மதித்து
நடந்து கொண்டார்.பூவினால் கூட என்னை அவர் அடித்ததில்லை".
மலரைவிட மென்மையான அதே சமயம்,மலரை விட மணம் மிகுந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.
அந்த இல்வாழ்க்கையில் இல்லாத ஒன்று ஏது? என்று கேட்டால் "குழந்தைப் பேறு" என்று சொல்லலாம்.என்றாலும் காலம் அந்தக் கணக்கையும் நேர் செய்து விட்டது.
அன்று "அம்மா என அழைக்க 'அன்னை'க்கு ஒரு குழந்தை இல்லை.அந்தக் குறையைக் காலம் எப்படி தீர்த்து வைக்கிறது பாருங்கள்.இன்று ஆயிரக் கணக்கான,கோடிக்கணக்கான ஆன்மீகக் குழந்தைகள் அவரை அம்மா,அம்மா என அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
#அன்னை ஸ்ரீ சாராத தேவி 163ஆவது நினைவு தினம் @ இன்று,#