சீரான ஒன்றேழில் இராகுவிருந்தாலும்
செய்யபத்தில் புதனிருக்க வியமதியுற்றாலும்
நேரான சாமிக்கு வியத்தோன்துர்ப் பலமாய்
நின்றாலும் இரவிமதி சனிகூடினாலும
தாரான இலக்கனமும் உதயநாயகனும்
சாற்றுமங்கி சாதிபரும் சரத்திலிருந்தாலும்
பேரான சரத்துடையோன் சுவாமிக்கே நட்பாய்
பேசுதயம் நின்றாலும் பரதேச வாசம்.
( சாதக சிந்தாமணி).
இலக்கினம்,ஏழாமிடம் இவைகளில் இராகு இருந்தாலும்.
இலக்கனத்திற்கு பத்தாமிடத்திற் புதனிற்க, இலக்கினத்திற்கு பண்ணிரண்டாம்
இடத்தில் சந்திரன் இருந்தாலும், இலக்கினத்திற்கு பன்ணிரண்டாம் இடத்ததிபன்
துர்ப்பலமாக இருந்தாலும். சந்திரன் சூரியனுடன் சனி கூடி
இருந்தாலும்.இலக்கினாதிபதி சர ராசியில் இருந்தாலும், அங்கிசாதிபதியும் சர
இராசியில் இருந்தாலும். சர இராசியதிபதி இலக்கனாதிபதியுடன் நட்பாக
இருந்தாலும், இச் சாதகன் வேறு நாட்டிற்கு பயணமாவான்.
சர ராசிகள் : மேஷம், கடகம், துலாம், மகரம்.
இதைப் போல இன்னும், ஒன்பது பாடல்கள் இவைபோன்றுள்ளது,
அவைகளையும்ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.