

தரணியெல்லாம் தமிழ் தமிழ் என்றும் பேசவும்
பொங்கு கடல்போல் தரணியெங்கும் ஆளவும்
எங்கும் நிறை இறைவன்அருள் பொழியட்டும்
வந்தவினை என்றும் தங்காமல் ஓடி ஒழியட்டும்
வாழும் எம்மை வாழவைக்க கதிரவன் புறப்படட்டும்
சூழ நிற்கும் அசுரர்கள் தொல்லை மறையட்டும்
சூழ்ந்து நின்று குழி பறிக்கும் கூட்டம் குறையட்டும்
தமிழனைக் கொன்று தமிழ் வளப்போர்
தரணியைத் தனியே ஆளட்டும்
தமிழ் மக்களை ஒத்தி வைத்த
தமிழினத்தின் தமிழ்க் காவலர்கள் வாழட்டும்
தரணியில் தமிழினமும் தமிழும் அனைவரும் வாழ
ஓரணியில் உலகமும் ஒற்றுமையுடன் சேர
இரண்டாயிரத்துப் பத்தாவது இந்தப் பொங்கல்
இன்பமாகப் பொங்கி இவ்வுலகத்தை வாழ்த்தட்டும்