செவ்வாய், 1 அக்டோபர், 2019

அரசு வர்த்தமானி



அரசு வர்த்தமானி


அரசு வர்த்தமானியின் முதல் வெளியீடு
அரசாங்க வர்த்தமானியின் முதல் வெளியீடு மார்ச் 15, 1802 அன்று அரசு அச்சிடும் அலுவலகத்திலிருந்து (இப்போது அரசு அச்சகம் என்று அழைக்கப்படுகிறது) வெளிவந்தது. இது ஒரு பக்க செய்தித் தாள், இது இலங்கையில் செய்தித்தாள் துறையின் தொடக்கமாகக் கருதப்பட்டது.

ஆளுநர் சர் ராபர்ட் வில்மோட் ஹார்டன் 'அரசாங்க உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் செய்தித்தாள் மூலம் அறியப்பட்டு விநியோகிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் வசதி ஏற்படும்' என்று உணர்ந்ததால் செய்தித் தாள் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் பிரகடனங்கள், பொது உத்தரவுகள், அரசாங்க விளம்பரங்கள், நீதித்துறை மற்றும் பிற அறிவிப்புகள் பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கும்.

39cm x 40cm செய்தி தாள் திங்கள் கிழமைகளில் வெளியிடப்பட்டது.

அரசாங்க வர்த்தமானி வாரந்தோறும் இன்றுவரை வெளியிடப்படுகிறது.
நோயும் மருந்தும் பக்க விளைவும் 



இருமல்,காய்ச்சல் ,தலைவலி,உடம்பு வலி  இப்படி ஏகப்பட்ட வருத்தங்கள் நம்மை  வந்து சந்திக்கும்போது  நாம் மருத்துவர்,நண்பர்கள் இப்படி ஏகப்பட்டவர்களிடம்  ஆலோசனையும்  மருந்தும்  வாங்கி பாவிக்கிறோம்.
பிணி குணமாகிறதோ? இல்லையோ? தவறாமல் மருந்துகளை பாவிக்கிறோம் முடிவு எது என்பது  ஒரு பக்கம் இருக்கட்டும் அந்த மருந்துகள்
பற்றி எதையாவது அறிந்துள்ளோமா?

நான் இருமலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன்,வைத்தியரிடம்  சென்று மருந்தும் எடுத்தேன்,வைத்தியரின் மருந்தால்  நான்  குணமனேனா
என்பது ஒரு பக்கமிருக்கட்டும், ஆனால்  அதன் பக்க விளைவுகளைப் பார்த்ததும், காசு கொடுத்து நாம் இவ்வளவு  வருத்தங்களையும்  கொள்வனவு செய்கிறோம்  என்பதை  நினைத்தால் பெருமையாகவுள்ளது.

ஒரு உண்மை,வருத்தம் அதுதான் நோய் குணமாகியதோ இல்லையோ ,அதில் சொல்லப்பட்டிருந்த பக்க விளைவுகள் அனைத்தும்  என் உடம்பை பரிசோதித்து  வெற்றி  கண்டது.

எப்படி இது சாத்தியமானது? எல்லாம் பாணி மருந்துடன் இருந்த  துண்டுச்
சீட்டில்  குறிக்கப்பட்டிருந்த  விபரங்கள்தான், நம்மில் எத்தனை பேர் அவைகளை  வாசித்துப் பார்க்கிறோம்.சிறிய எழுத்துக்களால்  அச்சிடப்பட்டவைகளை  யாரும் கண்டுகொள்வதில்லை.என்னையும்  சேர்த்துத்தான், தவறுதலாக நான் அதைப் பார்த்து  வாசித்ததால்தான்
இந்தப் பதிவு.

நான் வாசித்ததில் இருந்தவைகள்  இதுதான்

Uses Wet cough, Chest congestion, Cold, Asthma, Breathing disorders, Sinusitis, and Bronchitis.
Composition Ambroxol, Guaifenesin, Levosalbutamol
Side Effects Drowsiness, Dizziness, Upset stomach, Blurred Vision, Dry Mouth, Constipation, Dry nose and throat
Precautions Pregnancy, Lactation, Liver and kidney-related ailments, Alcohol Consumption

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு 
ஈரமான இருமல், மார்பு நெரிசல், சளி, ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள்,புரையழற்சி  மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.


Composition Ambroxol, Guaifenesin, Levosalbutamol

பக்க விளைவுகள் 
மயக்கம், தலைச்சுற்றல், வயிற்று வலி, மங்கலான பார்வை, உலர்ந்த வாய், மலச்சிக்கல், வறண்ட மூக்கு மற்றும் தொண்டை  வறட்ச்சி


முன்னெச்சரிக்கைகள் (தவிர்க்க வேண்டியவர்கள்)
 கர்ப்பிணிகள் , பாலூட்டும்  தாய்மார்கள் , கல்லீரல் மற்றும் சிறுநீரக தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் , ஆல்கஹால் நுகர்வாளர்கள்