ஞாயிறு, 8 ஜனவரி, 2017

பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தில்! புலம்பும் ஞானசார தேரர்

பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…

பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தில்! புலம்பும் ஞானசார தேரர்

எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.
அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவற்றை போட்டுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை காணப்பட்டது. ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் அதே தேவை காணப்பட்டது.
யாருடன் இணைந்து செயற்படுவது எவ்வாறு தேசிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பது என்பதில் எமக்கு பிரச்சினை உள்ளது.
விழுந்த இடத்திலிருந்து எவ்வாறு எழுவது என்பது தொடர்பில் குழப்ப நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.
சிங்கள பௌத்தர்கள் நாட்டை ஆட்சி செய்வதாக தென்பட்டாலும் உண்மை நிலைமை அதுவல்ல. அதுவே இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது.
சிங்கள பௌத்த தலைவர்களை வழிநடத்துவதும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதும் எதிரி சக்திகளேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அரசியலில் திடீர் மாற்றம்! மைத்திரியுடன் இணையும் விமல், கம்மன்பில! நல்லாட்சியில் பிளவா?

கொழும்பு அரசியலில் திடீர் மாற்றம்! மைத்திரியுடன் இணையும் விமல், கம்மன்பில! நல்லாட்சியில் பிளவா?


சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த தயாராக இருப்பதாக சிறுகட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் உள்ள அரசியல் தொடர்பை கைவிட்டு ஜனாதிபதி வெளியேறியேறினால், ஜனாதிபதியின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தேசப்பற்றுள்ள சக்திகள் கொண்ட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் பிவிதுரு ஹெலஉறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட இடங்களை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு வழங்குவதனை தடுப்பதற்கும், எதிர்வரும் காலங்களில் நாடு துண்டு துண்டுகளாக பிளவடையும் ஆபத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவும் குறித்த உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர், ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பு இல்லை என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கம் ஒன்றை அமைக்க தயார் என இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர். அதற்கமைய தற்போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரும்பான்மை தலைவர்கள் ஒரே கருத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டை காப்பாற்றுவதற்காக தங்கள் தரப்பு ஆயத்தமாக இருப்பதாக அறிவித்துள்ளதனால், இது தொடர்பில் ஆராய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுதந்திர கட்சி தரப்பினருக்கு சந்தர்ப்பம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விமல் மற்றும் கம்மன்பில் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரிடம் வினவிய போது, கடந்த 6ஆம் திகதி நிதி மோசடி தொடர்பில் விமல் வீரவன்ச கைது செய்யப்படவிருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காகவே, திடீரென தீர்மானங்களை மாற்றிக் கொள்வதற்கு இவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தற்போதைய நல்லாட்சி ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னர் மேலும் காலம் தாமதிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது கூட்டு எதிர்கட்சி உறுப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு தேசபற்று தேசிய இயக்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெறும் கண்துடைப்பு !




வெறும் கண்துடைப்பு !