புதன், 14 டிசம்பர், 2016

அம்பிட்டிய சமண ரத்தின தேரருக்குப் பிணை

அம்பிட்டிய சுமண ரத்தின தேரருக்குப் பிணை



இன்று மட்டக்களப்பு நீதி மன்றில் ஆஜர்படுத்தப் பட்ட  அம்பிட்டிய சமண ரத்தின தேரருக்குப் பிணை வழங்கி ஜனவரி மாதம் 25ம் திகதி மன்றில் சமூகமளிக்குமாறு ஆணையிடப் பட்டுள்ளது விவரங்கள் இங்கே 

பொது உளச்சார்பு     




இணையத்தில் இலவசமாக ஆசிரியர் க.குணராசாவின்   ( செங்கை                 ஆழியான்)  பொது உளச்சார்பு தமிழ் மொழியில் படித்துப் பயன் பெறுங்கள் படிப்பதற்கு இங்கே செல்லுங்கள்  PDF கோப்பைத் திறக்க முடியாவிட்டால் கீழ் காணப்படும் comments box ல் அறிவியுங்கள்   

சோதிடமும் பலனும்.
சோதிடம் தெரிந்தால் மாத்திரம் போதாது.சரியான நேரத்தில்,சரியான முறையில் சோதிடத்தை பயன் படுத்தவும் தெரிய வேண்டும்.தன்னைக் காப்பதற்கும் சோதிடருக்குத் தெரியவும் வேண்டும்.

மன்னர் பதினொன்றாம் லூகி க்கு ஒரு ஆஸ்தான ஜோதிடர் இருந்தார். அவர் ஒரு முறை லூகியிடம் "எண்ணி சரியாக 14 ஆம் நாள் உங்கள் ராணிகளில் ஒருவர் இறந்துவிடுவார் "என கணித்து கூறினார்.அவர் கூறியது போலவே ராணியும் இறந்து விட்டார். லூகிக்கு பயம் பிடித்து கொண்டது .எனவே அந்த ஜோதிடரை தன்னை தன் மாளிகையில் வந்து சந்திக்குமாறு கூறினார். அவரை கொல்வதற்கு ஆட்களை மறைத்து வைத்தார். ஜோதிடர் வந்ததும் " உங்களுக்கு எப்பொழுது மரணம் நிகழும் என வினவினார்.?" அவர் பதில் சொன்னதும் அவரை கொல்வதற்கு ஆட்கள் தயாராகினர். ஆனால் ஜோதிடர் தான் கொல்லப்பட போவதை அறிந்து கொண்டார். எனவே அவர் லூகியிடம் "மன்னா என் வாழ்கையை கணித்ததில் , நீங்கள் இறப்பதற்கு சரியாக 3 நாட்களுக்கு முன் என் மரணம் நிகழும் " என்று கூறினார்.
உடனே மன்னர் அவரை கொல்ல நியமிக்கப்பட்ட ஆட்களை தடுத்ததோடு அவர் நீண்டகாலம் வசதியாக வாழ எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார். அதற்கு பிறகு அந்த ஜோதிடர் மன்னர் இறந்து பல ஆண்டுகள் சுகமாக வாழ்ந்தது தனி கதை.
ஒரு மனிதனின் வாய் சாமர்த்தியம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

மட்டக்களப்பில் புலிகள்..!! அடுத்தது என்ன?? - மீண்டுமோர் அழைப்பு..!

அண்மையில் மட்டக்களப்பில் ஒரு விதமான பதற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அது பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டிருந்தது.
இனவாதம் பரப்பும் ஒரு சில கடும்போக்கான சிந்தனையாளர்கள் மட்டக்களப்பு கலவர பூமியாக மாறும் என எதிர்ப்பார்த்து ஏமாந்தே போனார்கள்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் அதனாலேயே பின்வாங்கிவிட்டோம் என்ற ஓர் கருத்தும் பிக்குகள் சார்பில் வெளிவந்திருந்தன.
இந்த நிலையில் பிக்குகள் இனவாதம் பரப்பியமைக்கும் அவர்கள் வேண்டும் என்றே பொலிஸாரை சீண்டியமைக்கும் ஆதாரங்கள் வெளிவந்த போதும் இது வரையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் மட்டும் என்னவோ மந்த கதிதான்.
எனினும் மட்டக்களப்பு பிரச்சினைகளுக்கு பிரதான காரணமான சுமனரத்ன தேரருக்கு கைது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் நாளை அவரை நீதிமன்றத்திற்கு அழைத்திருப்பதாக கூறி காணொளி ஒன்றினை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் அவர் தெரிவித்துள்ளதாவது, காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
இலங்கை மட்டும் அல்ல வெளிநாடுகளில் இருக்கும் சிங்கள மக்களும் இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த நாட்களாக மட்டக்களப்பில் பதற்றங்கள் ஏற்பட்டது அதற்கு பிரதான காரணம் பௌத்தம் தொடர்பில் பேசியதற்காகவே.
உண்மையில் எமக்கும் பிரச்சினை இருக்கின்றது, ஏன் பிக்குகளை மட்டக்களப்பிற்கு வர அனுமதிக்கப்பட வில்லை இதனை அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அதே போன்று மட்டக்களப்பில் பொலிஸாருக்கு ஆணையிட்டவர் யார்? என்பது தொடர்பில் அரசு விசாரணைகள் செய்ய வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர், பாதுகாப்பு செயலாளர் யாராவது அதற்கான பதிலை அளிக்க வேண்டும்.
அப்படியே அரசு பொலிஸாருக்கு உத்தரவுகள் விடுக்கவில்லை என்றால் யார் அந்த உத்தரவுகளை பிறப்பித்தது? யாரின் கட்டளையின் பேரில் பொலிஸார் அன்று அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் எதிர் வரும் 14ஆம் திகதி (நாளை) நீதிமன்றத்திற்கு எம்மை வரச் சொல்லி இருக்கின்றார்கள். எனவே இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
இதன்போது எமக்காக வழக்கறிஞர்கள் ஒன்று திரள வேண்டிய ஓர் கட்டாய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு வந்து சேருங்கள் எமது உண்மையினை நிலைநாட்ட ஆதரவு தேவை.
யுத்த காலம் முதலாக நாம் கூறிவந்த பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்பட வில்லை இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
அதேபோன்று அனைவரும் மட்டக்களப்பில் ஒன்று திரள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஆனாலும் நான் யாரையும் அழைக்கவில்லை அதனால் பிரச்சினைகள் ஏற்படும்.
வர முடியுமாக இருந்தால், எமது பௌத்தத்தை காக்க வேண்டும் என்பதற்காக வர முடிந்தால் மட்டும் தாராளமாக வரலாம். இறுதி மூச்சை பௌத்தத்திற்காக போராடி விட முடியுமானதாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
அதனால் இதனை எங்கிருந்து பார்த்து கொண்டிருந்தாலும் கவனமாகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
இவை சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளவை. இது அழைப்பா அல்லது எச்சரிக்கையா என்பது அவரவர் எண்ணத்திற்கு ஏற்பவே அமையும்.
எவ்வாறாயிலும் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட பிக்குகளின் செயற்பாட்டால் இன்றும் எதிரொலிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த வேளையில் மீண்டும் மட்டக்களப்பில் பதற்றம் ஏற்படுமாயின் நிச்சயமாக மீண்டும் விடுதலைப்புலிகள் என்ற காரணத்தை எப்படியாவது அனைத்து மக்கள் மத்தியிலும் கட்டாயமாக விதைக்கப்பட்டு விடும்.
அதன் காரணமாகவே இவ்வாறாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அதற்கான ஆரம்பப்புள்ளியே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் என்ற வகை புரளி அமைந்துள்ளது.
அப்படி ஓர் நிலை ஏற்படுத்தப்பட்டு விடுமானால் அடுத்த நாடு சிதறிப்போகும் அபாய நிலையே ஏற்பட்டு விடும் என்றே அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இங்கு ஆரம்பத்தில் பௌத்தம் காக்க வந்த பிக்குகள் பின்னர் அதனை அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றினர், அடுத்து முஸ்லிம் இனத்திற்கு எதிரானதாக மாற்றி தமிழர்களையும் உள்வாங்கினர்.
அதன் பின்னர் விடுதலைப்புலிகள் தான் இவற்றிற்கு காரணம், தமிழீழ பிரச்சினைகள் காரணமாகவே இவை நிகழ்வதாக கூறிவந்தனர். இப்போது பொலிஸார் மற்றும் அரசியல் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் எவ்வகையிலாவது பிரச்சினைகள் ஏற்பட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய நோக்கமாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும் அடுத்த மாதம் முதல் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் விவாதங்கள் இடம்பெறப்போகின்றது. எனினும் பிக்குகளின் இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் குழப்பமடையும் சாத்தியக் கூறுகளே அதிகம்.
எனவே முறையான வகையில் இனச்சிக்கலை அரசு தீர்க்காவிட்டால் புதிய அரசியல் யாப்பு ஏட்டளவிலும் பேச்சளவிலும் மட்டுமே இருக்கும் என்றே கூறப்படுகின்றது.