வியாழன், 22 டிசம்பர், 2016

புதிய அரசியல் அமைப்பு! 14 காரணிகளுக்கு மட்டும் ஆதரவு என்கிறார் தினேஸ்

புதிய அரசியல் அமைப்பு! 14 காரணிகளுக்கு மட்டும் ஆதரவு என்கிறார் தினேஸ்


புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது இணங்கப்பட்ட 14 காரணிகளுக்கு மட்டும் ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்இ
ணங்கப்பட்டுள்ள 14 காரணிகளுக்கு மட்டுமே கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும்.
ஐக்கிய இலங்கை மற்றும் பௌத்த மததத்திற்கான உரிமைகள் எந்த வகையிலும் மாற்றம் பெறக்கூடாது.
தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியன மாற்றம் பெறக்கூடாது.
ஆட்சி முறையில் மக்களுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும், மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படக்கூடாது,
நாடாளுமன்றின் செயற்பாடுகள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு, மாகாணசபைகள் ஊடாக நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.
நாட்டின் காணிகள் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்படக் கூடாது.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்தல். கலப்பு முறையில் தேர்தல் முறைமையை உருவாக்குதல் உள்ளிட்ட 14 முக்கிய விடயங்களில் மட்டுமே கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது ஆதரவளிக்கும்.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இந்த 14 காரணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டத்திற்கும் ஆதரவளிக்கப்படாது.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆளும் கட்சியின் நிலைப்பாடு இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ஒரு கட்சியின் நிலைப்பாடு அராசங்கத்தின் நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள