வியாழன், 22 டிசம்பர், 2016

தனி ஓர் இனத்துக்கு உரித்தானவர் அல்லர் வடக்கு முதலமைச்சர்..!


தனி ஓர் இனத்துக்கு உரித்தானவர் அல்லர் வடக்கு முதலமைச்சர்..!


முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனித்து ஓர் இனத்துக்கோ - மதத்துக்கோ உரித்தானவர் அல்லர். அவர் வடக்கு மாகாணத்துக்குப் பொதுவானவர். அவ்வாறுதான் முதலமைச்சர் செயற்படவேண்டும்.
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி சிங்கள மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு மீதான குழு நிலை விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரட்ன,
"வடக்கு மாகாண முதலமைச்சர் மாகாணத்துக்குப் பொதுவானவர். எங்களைப் பிரிக்கவேண்டாம். வவுனியாவில் உள்ள சிங்களப் பகுதிகளுக்கும் முதலமைச்சர் வரவேண்டும்" - என்றார்.
இதேபோன்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஜவாகிர் உரையாற்றும்போது, "வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் உள்ள சகல இனங்கள் மற்றும் மதங்களுக்கும் பொதுவானவர். அவர் அதற்குரிய வகையில் செயற்பட வேண்டும்" - என்றார்.