சனி, 12 மார்ச், 2011

நீண்டதொரு இரவு வேண்டும்!..நீண்டதொரு இரவு வேண்டும் -முழு
நிம்மதி நீயென் அருகில் வேண்டும் 
வான்மதி ஒளி வீச வேண்டும் -அங்கே
வந்து நீயுறவாட வேண்டும்.

பக்கம் வந்து நீ பள்ளி கொள்ளவேண்டும் -என்
பார்வையால் உன்னையான் அள்ளவேண்டும் 
சொர்க்கமெல்லாம் இருவரும் சுற்ற வேண்டும் -உறவைச் 
சொல்ல முடியாமல் மூச்சுத் தினறவேண்டும்

கம்பனின் கவிதை கனிவாக வேண்டும்-கவிஞர் 
கண்ணதாசனின் வரிகள் பணியாக வேண்டும் 
வைரனின்  சொல் நீயாக வேண்டும் -இளைய 
இராஜாவின் இனிய பன்னாகச் சேர வேண்டும் 

மெல்லப் பேசும் தென்றல் வேண்டும் -உன்னை
அள்ளப் பார்த்து அது அலைய வேண்டும் 
கள்ளப் பார்வை மெல்லக் கலைய வேண்டும்-நான் 
சொல்லாமல் சுகங்கள் கோடி வேண்டும் 

கன்னம் கனியாகக் காணவேண்டும் -முக 
வண்ணம் கலையாமல் கடிக்க வேண்டும் 
இன்னும் இந்த இன்ப உறவு வேண்டும் -உன் 
இதயமெல்லாம் என் பெயர் எதிரொலிக்க வேண்டும்.