புதன், 4 ஜனவரி, 2017

ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்
ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா??...
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர்,அவரது மனைவி வாசுகி அம்மையார்தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.
அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று முழுமையாக நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.
அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.
ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கேட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.
இதற்கான காரணத்தை வாசுகி அம்மையார் தான் இறக்கும் தருவாயில் தன் கணவரிடம் கேட்டாராம்.
சோற்றுப் பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.
சோறில் ஒரு பருக்கை கூட விழாமல் சாப்பிடுவது நமது மரபு.தன் மனைவி பரிமாறும் போது தன் மனைவிக்கு சோறு சிந்தி இழுக்கு நேர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே ஊசி வைத்திருந்தார் திருவள்ளுவ பெருமான்.
நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.
அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாக சொன்னாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.
அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒரு முறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே,கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்கயிறு அப்படியே நின்றதாம்.
இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒரு நாள் இறந்து போனார்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.
ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை மனதிற்குள்
அசை போடுவார்களா..?

நவீன ஆராய்ச்சி

 நவீன ஆராய்ச்சி
.
முதலில் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இது பேய் படத்தின் ஸ்டில் என்றோ ...
அல்லது பொய்யாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றோ நினைக்க வேண்டாம்..
உண்மையில் இது மனிதன் தான் ..
பிறக்கும் பொழுது நன்றாக பிறந்த இவர்களை ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த அளவிற்கு கொடூரமாக மாற்றியது நவீன ஆராய்ச்சி என்று சொல்ல
கூடிய மிருகங்கள் தான் .
1940 வருடம் ரஷ்ய விஞ்சாணிகளுக்கு ஒரு விபரீத எண்ணம் உருவானது.
அதாவது சராசரி மனிதனுக்கு இன்றியமையாத ஒரு விஷயம் தூக்கம்
அந்த தூக்கம் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ஒரு 1 மாதத்திற்கு மனிதனை தூங்க விடாமல் இருக்க வைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்தார்கள்
இதையே ஆய்வு செய்தும் பார்த்து விடுவோம் என்று முடிவெடுத்தார்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்
5 சிறை கைதிகள். .
இவர்களிடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது அதாவது இந்த ஆய்வுக்கு சம்மதித்தால் ஆய்வு முடிந்ததும் அதாவது ஒரு மாதம் முடிந்ததும் விடுதலை செய்து விடுவோம் என்றும் சொன்னார்கள்.
இதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்ட அந்த ஐவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டது இதற்காக அரசாங்கத்தின் சார்பில் இவர்கள் அறைக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான சாப்பாடு, தண்ணீர், புத்தகங்கள், மெத்தைகள் இல்லா கட்டில்கள் போன்றவைகள் கொடுத்து
அந்த அறையில் ஒரு வித வாயுக்கலந்த காற்றை கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி விட்டார்கள்
அந்த வாயு மனிதனை தூக்கம் வர கூடிய செல்களை தற்காலிக செயல்படாமல் ஆக்கும் என்பதால் அதையும் அந்த அறையில் நிரப்பி விட்டார்கள்..
மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள ஒரே ஒரு இண்டர்காம் மற்றும் மைக்ரோ
போனை மட்டும் கொடுத்து
இருந்தார்கள், அடுத்ததாக அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு கதவுகளை ஷீல்டு லாக் செய்து விட்டார்கள் ,
இனிமேல் அந்த ஐவரும் நினைத்தால் கூட தூங்கவும் முடியாது வெளியே வரவும் முடியாது ,
நான்கு நாட்கள் சரியாகவே போனதாக இண்டர்காம் வழியாக சொன்னார்கள்
ஐந்தாவது நாள் அந்த ஐந்து பேரில் ஒருவர் தம்முடைய வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சில விஷயங்களை தன்னையறியாமல் சொல்லி
கொண்டே அதாவது உளறி கொண்டே
இருப்பதாக சொன்னார்கள் ..
5 வது நாளில் சித்த பிரமை பிடித்தது போன்று ஏதேதோ பேசியதாக சொல்கிறார்கள் விஞ்சானிகள்
7 நாட்களில் அவர்களது குரல் சற்று தொய்வுற்ற நிலையில் கண்டனர்,
10 வது நாளில் கூச்சல் சத்தம் அதிகமாக ஆகியது தொடர்ந்து அறையில் கத்தி கொண்டே பயங்கர சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது அதாவது எல்லாவற்றையும் போட்டு அடித்து உடைத்துள்ளனர் அடுத்த சில நாட்களில் கீச் கீச் என்று சப்தம் மட்டுமே வெளியே வந்தது இதைக்கண்டு சில ஆய்வாளர்கள் பயந்தனர்
இப்பகூட ஆய்வாளர்கள்அறையை திறந்து பார்க்காமல் இந்த கீச் கீச் என்று சப்தம் வருவது ஏற்கனவே அவர்கள் போட்ட கூச்சல் சப்தத்தால் அவர்கள் குரல் வளம் கிழிந்து இருக்க கூடும் ஆகவே ஆய்வு தொடர்ந்து நடக்கட்டும் அறையை திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர் ..
அதிலிருந்து 14 நாட்கள் ஆகும் வரையில் அந்த அறையில் இருந்து எந்த சப்தமும் வரவில்லை .
இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த விஞ்சானிகள் இப்பொழுது அறையில் உள்ள வாயுவை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பார்த்தனர் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அங்கே ஐந்து பேரில் ஒருவர் இறந்து போய் விட்டார் இந்த நால்வரும் கடந்த ஐந்து நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்தனர்
இறந்து போனவரின் தொடை சதைகள் மற்றும் மார்பு சதைகள் இல்லாமல் கிடந்தார் பிற்பாடு தான் தெரிந்தது கொஞ்சம் கொஞ்சமாக அவரே பிய்த்து எடுத்து இருக்கலாம் என்றும் தெரிகிறது
மீதம் உள்ள 4 பேரின் உடல்களில் தோல்களும் இல்லாமல் தசையும் இல்லாமல் காயங்களுடன்
பார்பதற்க்கே கொடூரமான தோற்றத்துடன் இருந்தனர் ,
அறை கதவு திறந்து சிலர் வருவதை உணர்ந்த இவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் அவர்களை தாக்க முயன்றனர் நன்றாக அனுபவமுள்ள அதிகாரிகளே இவர்களது தோற்றத்தை கண்டு அருகே செல்லாமல் பயந்து இருந்தனர் ..
இந்நிலையில் அந்த நால்வரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கி அட்டகாசம் செய்தனர் ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் மனநிலை பாதிக்கப்பட்டு பயங்கர கொடூரமாக இருந்தனர், இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை இவர்களால் பேசவும் இயலவில்லை இனிமேல் இவர்களால்
எந்த வித பிரயோசனமும் இல்லை என்று இவர்களை சுட்டு கொன்றும் விட்டனர்
இந்த நவீன அறிவியல் ....
இப்படி கொடூர ஆய்வு செய்தது
கம்யூனிச நாடான சோவியத் ரஷ்யா
[அறையை திறந்தவுடன் உயிருடன் இருந்த நால்வரில் ஒருவரை அப்போது எடுத்த புகைப்படம் தான் இது]
.

வாந்தி வருவது ஏன்?


ஓவியம்: வெங்கி
வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது.
நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் பிரெனிக் நரம்பு, வேகஸ் நரம்பு, தண்டுவட நரம்பு, பரிவு நரம்பு, மூளைமைய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.
பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.
வாந்தி நல்லதா, கெட்டதா?
வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.
முக்கியக் காரணங்கள்
கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும்.
காதும் ஒரு காரணம்தான்!
காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம்/விமானப் பயணங் களின்போது வாந்தி வருகிறது.
கர்ப்பகால வாந்தி!
கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு திடீர் திடீரென்று ஏறி இறங்குவதால், மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளை நீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.
உளவியல் காரணங்கள்
சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லப் பயப்படும் குழந்தைகள் காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ்வகையைச் சேர்ந்தது.
சின்னச் சின்னக் காரணங்கள்
பார்வை, நுகர்தல், தொடுதல் போன்றவையும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பல்துலக்கித் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.
என்ன செய்யலாம்?
வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன. என்றாலும், வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி சரியாகும். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
வாந்தியைத் தடுக்க வழி!
# உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.
# அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள்.
# அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
# வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.
# பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

சிறப்பு போக்குவரத்து ஒழுங்­குகள் அமு­ல் (எம்.எப்.எம்.பஸீர்)




சிறப்பு போக்குவரத்து ஒழுங்­குகள் அமு­ல்
 (எம்.எப்.எம்.பஸீர்)
கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் ஓடு பாதை நவீன மயப்­ப­டுத்­தப்­படும் புனர் நிர்­மாணப் பணிகள் இம்­மாதம் 6 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் நிலையில் அதனை மையப்­ப­டுத்தி பொது மக்­க­ளுக்கு ஏற்­படும் சிர­மத்தைக் குறைக்க நேற்று முதல் உடன் அமு­லுக்கு வரும் வகை­யி­லான சிறப்பு போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­களை பொலிஸார் நடைமுறைப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
ஓடு பாதை நவீன மயப்­ப­டுத்­தப்­படும் நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் 6 ஆம் திகதி முதல் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திக­தி­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இக்­கா­லப்­ப­கு­தியின் ஒவ்­வொரு நாளும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இந்த நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­படும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
இந்­நி­லையில் இக்­கா­லப்­ப­கு­தியில் விமான நிலை­யத்தை நோக்கி அதி­க­மான பய­ணி­களும் வாக­னங்­களும் வருகை தர உள்ள நிலையில், இதன் போது ஏற்­படும் சிர­மங்­களைக் குறைக்க நேற்று முதல் இப்­ப­ணிகள் நிறை­வுறும் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரையில் பிற்­பகல் 3.00 மணி முதல் மறு நாள் காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த சிறப்பு போக்குவரத்து திட்டம் அமு­லுக்கு வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
பிர­தா­ன­மாக நான்கு பாதைகள் ஊடாக கட்­டு­நா­யக்­க­வுக்குள் வரு­வோரை இலக்­காக கொண்டே இந்த சிறப்பு திட்டம் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.
கொழும்பு மற்றும் சிலாபம் பகு­தி­களில் இருந்து விமான நிலையம் நோக்கி வரும் வாக­னங்கள் விமான நிலை­யத்தின் பிர­தான வாயில்­களில் 40 ஆம் இலக்க வாயில் ஊடாக உள் நுழைந்து பழைய பீ.வீ.ஜி. வளாகம் ஊடாக விமான நிலை­யத்தின் உள் நுழையும் மற்றும் வெளிச் செல்லும் பகு­தியை அடைய முடியும்.
இதன் போது அதி­வேக பாதை ஊடாக 18 ஆம் கட்டை முதல் மினு­வாங்­கொட மற்றும் குரு­ணாகல் நோக்கி பய­ணிப்­போ­ருக்கும் விசேட பாதை ஒழுங்குகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இதன் போது கட்­டு­நா­யக்க - நாயக்­கந்த பாதை­யூ­டாக பய­ணிக்க அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்கும் பொலிஸார் மினு­வாங்­கொடை, குரு­ணாகல் பகுதி நோக்கி பய­ணிப்போர், கே - 2 சந்தி ஊடாக எவ­ரி­வத்தகர பகு­திக்கு திரும்பி மல்கஸ் சந்தி, கோவிந்த வீதி ஊடாக ஆடி அம்­ப­லம கிறிஸ்­தவ ஆலயம் அமைந்­துள்ள சந்­தி­வரை பய­ணித்து மினு­வாங்­கொடை நோக்­கியோ அல்­லது ஹின­டி­யன யாகொ­ட­முல்ல ஊடாக மினு­வாங்­கொடை பாதைக்குள் நுழைந்தோ பய­ணிக்க முடியும் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
இத­னி­டையே விமான நிலை­யத்தில் இருந்து அதி­வேக பாதை, 18 ஆம் கட்டை ஊடாக வெளிச் செல்லும் வாக­னங்கள் விமான நிலைய பிர­தான வாயில் ஊடா­கவே வெளிச் செல்ல முடியும் என பொலிஸார் தெரி­வித்­தனர். அத்­துடன் விமான நிலை­யத்தில் இருந்து மினு­வாங்­கொடை நோக்கி பய­ணிப்போர் முதலாம், இரண்டாம் இலக்க வெளிச் செல்லும் வாயில்கள் ஊடாக நாயக்­கந்த வீதி­யூ­டாக மினு­வாங்­கொடை நோக்கி செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பணிப்­பாளர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.
 மினு­வாங்­கொடை, கம்­பஹா மற்றும் குரு­ணாகல் பகு­தியில் இருந்து விமான நிலை­யத்­துக்கு மட்டும் வருவோர், ஆண்டி அம்­ப­லம முதல் நாயக்­கந்த வீதி ஊடாக பய­ணித்து விமான நிலை­யத்தின் 37 ஆம் இலக்க உள் நுழையும் பாதை ஊடாக விமான நிலை­யத்தின் உள் நுழையும் மற்றும் வெளிச் செல்லும் பகு­தியை அடைய முடியும் என பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
இதனை விட, கம்­பஹா, குரு­ணாகல் பகு­தி­களில் இருந்து அதி­வேக பாதை நோக்கி பய­ணிப்போர், குரு­ணாகல் - கொழும்பு வீதியின் யாகொ­ட­முல்ல சந்தி ஊடா­கவோ, பீவத்த சிலுவை சந்­தியால் திரும்பி மாதவ மல்கஸ் சந்தி வரை பய­ணித்து ஆண்டி அம்­ப­லம ஊடாக கோவிந்த மல்கஸ் வீதிக்குள் நுழைந்து எவ­ரி­வத்த நகர் ஊடாக அதி­வேக பாதைக்குள் பிர­வே­சிக்க முடியும்.
அத்­துடன் கட்­டு­நா­யக்க முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்­துக்கு அமந்­தொ­ழுவ பகு­தியில் இருந்து வருவோர், கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலையம் முன்­பாக உள்ள பிர­தான வாயில் ஊடா­கவும் முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்தின் 3 ஆம் இலக்க வாயில் ஊட­ாகவும் உள் நுழைய முடியும்.
இதனை விட மினு­வாங்­கொடை, கம்­பஹா மற்றும் குரு­ணாகல் பகு­தி­களில் இருந்து முத­லீட்டு ஊக்குவிப்பு வலயம் நோக்கி பய­ணிப்போர், குரு­ணாகல் - கொழும்பு பிர­தான வீதியின் யாகொ­ட­முல்ல சந்தி ஊடாக, பீல்­வத்த சிலுவை சந்தி, மாது மல்கஸ் சந்தி ஊடாக ஆண்டி அம்­ப­லம சந்­தியால் திரும்பி கோவிந்த வீதி, எவ­ரி­வத்த வரை பய­ணித்து கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலையம் முன்­பாக உள்ள பிர­தான வாயில் ஊடா­கவோ, கே - 2 சந்­தி­யூ­டாக தொரண சந்தி வரை பய­ணித்து முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்தின் முதலாம் இலக்க வாயில் ஊடா­கவோ உள் நுழைய முடியும்.
அத்­துடன் முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்­தி­லி­ருந்து வெளி­யேறும் வாகனங்கள் தொடர்­பிலும் தனி­யான போக்கு வரத்து ஒழுங்கு அமுல் செய்­யப்­பட்­டுள்­ளது.
 அதன்­படி அங்­கி­ருந்து வெளிச் செல்லும் வாக­னங்கள், எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாயக்­கந்த வீதி ஊடாக மினு­வாங்­கொடை நோக்கி பய­ணிக்க அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என பொலிஸார் தெரி­வித்­தனர். அதன்­படி வெளி­யேறும் வாக­னங்கள் மல்கஸ் சந்தி, கோவிந்த சந்தி ஊடாக ஆடி அம்­பலம் வரை பய­ணித்தோ அல்­லது ஹீன­டி­யன, யாகொ­ட­முல்ல சந்தி ஊடாக மினு­வாங்­கொ­டைக்கும் கொட்­டு­கொடை சந்தி ஊடாக கம்­பஹா மற்றும் ஜா எல நோக்­கியும் பய­ணிக்க முடியும் என பொலிஸார் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
எவ்­வா­றா­யினும் இந்த சிறப்பு போக்கு வரத்து திட்­டத்தின் பிர­காரம் நாயக்­கந்த வீதி ஊடாக விமான நிலை­யத்­துக்கு வருவோர் மட்டும் அனு­ம­திக்­கப்­ப­டுவர் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள போதும், பெரும் வாகன நெரிசல் விமான நிலைய பகு­தியில் ஏற்­ப­டு­மாயின் ஆண்டி அம்­ப­லம முதல் கே - 2 சந்தி வரை­யி­லான பகுதி மூடப்பட்டு கட்டுநாயக்க - மினுவாங்கொடை வீதி முற்றாக மூடப்படும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறான நிலை ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதிவேக பாதை, விமான நிலையம் நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் கோவிந்த மல்கஸ் சந்தி ஊடாக எவரிவத்த நகருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சீதுவை ஊடாக அதிவேக பாதை மற்றும் விமான நிலையம் நோக்கி பயணிக்க அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.


கலப்பு நீதிமன்றம் வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அவசியம்

தமிழர் படைப்பு மட்டுமல்ல தமிழரே பிரம்மிப்பானவர்கள்..!! - மர்மத்தளம் சிவனின் இருப்பிடமா?



போரில் அழிந்த மக்கள் மீண்டும் அழிவதை தடுக்க முடியாது? இதன் பின்னணியில் யார்?

யுத்தம் முடிந்து பல வருடங்களை கடந்துள்ளது. ஆனால் அழிவு மட்டும் மக்களை காலத்துக்கு காலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
போரில் அழிந்த மக்களை போல தற்போது போதைப் பொருள், கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றது. இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.
புத்தாண்டு மலர்ந்து மூன்று நாட்களை முழுமையாக கடந்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள்தான் எஞ்சியிருக்கின்றது.
கடந்த ஆண்டில் நாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் முழுமையாக இந்த வருடமும் அந்த எதிர்பார்ப்பு தொடரும் என்றே கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், நாட்டில் போதைப் பொருள் பாவனைகள் அதிகரித்து வருவதை காணமுடிகின்றது. போதைப் பொருட்களை ஒழிக்க திடமான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
போதைப் பொருள் பாவனை காரணமாக இளம் தலைமுறை சீரழிந்து வருகிறது. நாட்டிற்குள் போதைப் பொருள் பல வழிகளில் வருகிறது.
இலங்கைக்குள் கடல்வழியாகவே அதிகளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடல் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரின் காண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் தந்திரமான முறையில் நாட்டிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் காரணமாக யாழில் கலாச்சார சீரழிவு தலைவிரித்து ஆடி வருகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். யார் செயற்படுகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கொழும்பு உட்பட தென் பகுதிகளில் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் விற்பனைகள் பரவியிருந்த நிலையில், தற்போது வடபகுதி போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கான கேந்திர நிலையமாக மாறி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லையெனில் போரில் அழிந்த தமிழ் பேசும் மக்கள் போதைப் பொருளால் அழிவதை எவராலும் தடுக்க முடியாது.
பெற்றோர் தமது பிள்ளைகளில் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து, அவர்களை தமது கண்கானிப்பில் வளர்க்க வேண்டும்.
இல்லையெனில் எதிர்கால சந்ததி, போதை பொருள் என்ற பிசாசிடம் சிக்கி மடிவதை தடுக்க முடியாது போகும். 2017 ஆம் ஆண்டில் நாம் கால்பதித்து கொண்டிருந்த தருணம் பல இடங்களில் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
முதலாம் திகதி அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாக்கிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டார்.
மறைத்து வைத்தநிலையில் அவர் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவர முற்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தைப்பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் திகதி அன்று வெலிகம, மிரிஸ்ஸ பகுதியில் இங்கிலாந்து பிரஜை ஒருவரும் இலங்கை பிரஜைகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு தொகை போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களிடமிருந்து 05 கிராம் கொக்கேய்ன், 03 கிராம் ஹஷுஸ் மற்றும் தீர்வை வரி இன்றி கொண்டுவரப்பட்ட 224 சிகரெட்டுக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மூன்றாம் திகதி கொழும்பு இரவு நேர களியாட்ட விடுதிகளில் பயன்படுத்துகின்ற "நடனமாத்திரை" என்று கூறப்படுகின்ற எஸ்டர் போதை மாத்திரைகள் ஒரு தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் மதுவரி திணைக்களத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா என விசேட சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பீ.என். ஹேமந்த குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஒரு மாத்திரையின் சில்லறை விலை 3800 ரூபா என்றும், 10 - 20 வரை கொள்வனவு செய்யும் போது 3000 ரூபா வீதம் பெற்றுக் கொள்ள முடிவதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக கூறப்பட்டது.
இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதுடன் இதற்கு அடிமையாவதால் மனப்பாதிப்பு ஏற்படும் இதனை அறியாத இளைஞர் சமூகம் தன்னை தானே அழித்து வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்லும் தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.
இன்றும் ஊடகங்களை எடுத்துப் பார்த்தால் தற்போது போதை பொருளுடன் கைது செய்யப்படும் பெண்கள் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.
சீதுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு தொடக்கம் சீதுவ வரை பயணித்த முச்சக்கர வண்டியை காவற்துறை பரிசோதனை செய்த போது அவர்கள் ஹெரோயின் வைத்திருந்தமை அறியவந்துள்ளது.
32 மற்றும் 24 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீர் கொழும்பு மற்றும் மீரிஹான பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடத்தினுள் இலங்கையில் கிட்டத்தட்ட 4 இலட்சம் கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 3 இலட்சத்து மூவாயிரம் பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றவாளிகள் கிட்டத்தட்ட 80 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 ஆயிரத்து 800 கிலோ கிராம் போதைப்பொருளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய கஞ்சா பயன்படுத்தல், அருகில் வைத்திருத்தல் மற்றும் கஞ்சாவுடன் பயணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 319 ஆகும். அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 569 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹெரோயினுடன் 2015 ஆம் ஆண்டு 26 ஆயிரத்து 468 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய 67 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 20 ஆயிரம் கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 5 வருட காலப்பகுதியில் இலங்கையில் 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திலாவது போதைப் பொருள் விற்பனை, கடத்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. ஆரம்பித்திருக்கும் புதிய வருடத்திலாவது இது நிறைவேறுமா...?

ஒரு பக்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்காக பகிரங்க சவால்


ஒரு பக்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்காக பகிரங்க சவால்

ஒரு பக்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்காக பகிரங்க சவால்களை முன்னாள் ஜனாதிபதி விட்டுள்ளார் என்றபோதும் கூட அரசு தரப்பினர் அது எந்தவகையிலும் சாத்தியம் இல்லை என தெரிவிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் மகிந்த ஆதரவாளர்களோ விஜயகலா அண்மையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றி கூறிய கருத்தை மட்டுமே அதிகமாக விமர்சிக்கின்றார்கள்.
புதிய அரசியல் யாப்பு தமிழர்களுக்கு நாட்டை பிளவு படுத்தி கொடுக்கும் செயல் அதனால் அதனை எதிர்க்க வேண்டும் என்பதே தென்னிலங்கை தரப்பினரின் இப்போதைய முக்கிய வாதம்.
ஆனால் இந்த அரசியல் யாப்பு தொடர்பில் தமிழர்களின் பங்களிப்பும் அதனால் வடக்கு கிழக்கிற்கு ஏற்படும் நன்மையும் கூட தெரிய வில்லை.
தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ள இந்த புதிய அரசியல் யாப்பு கதையை அவரவர் அரசியல் இலாபத்திற்காக பயன் படுத்திக் கொள்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு.
ஆட்சிக்கு வரும் போதும், இப்போதும் ஜனாதிபதி என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதும் கேள்வி மட்டுமே விடைகள் கிடைக்கவில்லை.
தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் எனக் கூறி வந்தார், அவ்வளவு ஏன் ஆறு மாதங்களுக்குள் தமிழ் வடக்கின் காணிகள் அனைத்தையும் விடுவிப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆறு மாதம் 1 வருடமாகிப்போனது.
ஆனாலும் அவருடை வாக்குறுதி வெரும் மேடைப் பேச்சாகவே இருந்து போனது. இப்போதைக்கு ஜனாதிபதி நாட்டில் இராணுவத்தினரைக் காக்க வேண்டும், அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்.,
என்பதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளார். இராணுவத்தினருக்காக மட்டுமே சேவையாற்றி வருகின்றாரா? முக்கியமாக யாரிடம் இருந்து இராணுவத்தினரை காக்கப் போகின்றார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் தமிழ் மக்களை காப்பதில் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மட்டும் எவரும் வெளிப்படையாக செயற்பட வில்லை, அடிமைப்படுத்தவே திட்டம் தீட்டுகின்றனர்.
அப்போதைய ஜனாதிபதி ஆட்சியை பிடிப்பேன் என்கின்றார் ஆனால் இப்போதைய ஜனாதிபதி அதற்கு அமைதியாக உள்ளார்.
இங்கு அவருடைய அமைதிக்கு காரணம் எது வென்று தெரியவில்லை, நாட்டை ஆட்சி செய்வது யார் என்ற கேள்வியையும் கூட எழுப்பி விடுகின்றது இப்போதைய அரசியல் நிலைப்பாடுகள்.
குறிப்பாக நாட்டில் பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் எவரும் விலகவில்லை அனைவரின் கோரிக்கையும் இது ஒன்று மட்டுமே.
இந்த நிலை தொடரும் வரை இலங்கையில் தமிழர் பிரச்சினை எப்போதும் தீராது. நல்லிணக்கம், சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்பது எல்லாமே வெரும் பேச்சளவில் மட்டுமே இருக்கும்.
ஆகமொத்தம் திட்டமிட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா? என்பது தெரியவில்லை. இராணுவப்புரட்சி, இனவாதம், புலிகள், புலம்பெயர் தமிழர்கள், அரசியல் யாப்பு இப்படி மாறி மாறி செல்கின்றது பிரச்சினை.
தமிழர்களின் தீர்வு மட்டும் எப்போதுமே கேள்விக்குறிதான். யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட போதும் இன்றுவரைக்கும் தமிழ் மக்கள் அடிமை வாழ்வே தொடருகின்றது.
பதிவாகி வரும் சம்பவங்கள் இதனை தெளிவாக எடுத்துக்காட்டும். பொறுமைகாத்து வரும் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடுகளும் மௌனமே அதனால் தொடர்கின்றது பதில் இல்லாத இந்தக் கேள்வி.