கலப்பு நீதிமன்றம் வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அவசியம்
(ரொபட் அன்டனி)
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணி பரிந்துரை
விசேட வழக்குரைஞர் அலுவலகம்
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணி பரிந்துரை
விசேட வழக்குரைஞர் அலுவலகம்
சர்வதேச குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிப்பது
சட்டவிரோதமானது
சிறுபான்மை மக்கள் குறித்த ஆணைக்குழு
காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவதுடன் அதன் ஒவ்வொரு அமர்விலும் சர்வதேச நீதிபதி ஒருவராவது இடம்பெறவேண்டியது அவசியம் என்று நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்
தறியும் செயலணி பரிந்துரை செய்துள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப் பட்டது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், இராஜாங்க அமைச்சர்
ஏ.எச்.எம். பௌசி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குறித்த அறிக்கையானது மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை செயணியின் தலைவர் மனோரி முருத்தொட்டுகம வெ ளியிட்டுவைத்தார்.
அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு ,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவது அவசியம்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகளை தெரிவு செய்யும் முறையானது நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களின் ஆலோசனையுடன் அரசியலமைப்பு பேரவையினால் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச நீதிபதிகளை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் ஆலோசனை பெறப்பட வேண்டும். அனைத்து விடயங்களும் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
தெரிவு செய்யப்படும் நியமங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். போதியளவு எண்ணிக்கையான நீதிபதிகளை நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகளில் ஒருவரோ பலரோ வருகை தராவிடினும் காலதாமதம் ஏற்படாது.
ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளும் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதியும் இருப்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்களை பொறுத்தவரை எல்லா இனக்குழுக்களினதும் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும்.
போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் உட்பட பாலியல் வன்முறை குற்றங்களுக்கும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் விசேட நீதிமன்ற ஆணை வழங்கப்பட வேண்டும்.
விசேட வழக்குரைஞர் அலுவலகம் காலதாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்களின் பரப்பெல்லை, பாதிக்கப்பட்டோரின் பன்முகத் தன்மை, குற்றம் புரிந்தோரின் வகைகள் என்பவற்றை பிரதிபலித்து வழக்குரைஞர் அலுவலகத்தின் தேர்வு வடிவமைக்கப்பட வேண்டும்.
விசேட வழக்குரைஞர் அலுவலகம் தனக்கென்று சொந்த விசாரணை அலகை கொண்டிருத்தல் வேண்டும். அதன் அலுவலர்கள் சர்வதேச பிரதிநிதிகளாகவும் இருக்க வேண்டும்.
பயங்கரவாத விசாரணை பிரிவு போன்ற அலுவலகங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விசாரணை அலகில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது.
யுத்தக்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதைகள், திட்டமிட்டு காணாமலாக்குதல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான மன்னிப்பு சட்டவிரோதமானது என்பதுடன் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட முன்னாள் தமிழ் தீவிரவாத இயங்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த முன்னாள் போராளிகளின் நிலைமை பரிசீலிக்கப்பட வேண்டும்.
காணி உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசு நட்டஈடு வழங்க வேண்டும். அரச காணி பகிர்ந்தளிப்பு திட்டத்திற்கு உட்படாத மலையக தமிழர்களும் இதில் உள்ளடங்குவர்.
சிறுபான்மை உரிமைகள் ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்கிறோம். இந்த ஆணைக்குழுவானது அரசியலமைப்பு பேரவையினால் சிபாரிசு செய்யப்படும் பெயர் பட்டியலிலிருந்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள