ஞாயிறு, 27 நவம்பர், 2022

ஆறுதல் காண்பதுவும் அரிது.





ஆப்படிக்கும் நண்பர்கள், ஆர்ப்பரிக்கும் உறவுகள்,
மோப்பம் பிடிக்கும் பிள்ளைகள்,முடிந்த கணவுகள்- ஏப்பமிடும்
நேரமெல்லாம்   எரிகின்ற நெஞ்சம், அணைக்க முடியாது,
ஆறுதல் காண்பதுவும் அரிது.


வென்றுவிட்டோம் என்று தொடைகளைத தட்டுவதும் 
வென்றுவீழ்த்திவிட்டோம் என்று வீறாப்புக் கொள்வதும்-மன்றில்
ஆற்றாதவன் ஆணவத்தில் செய்யும் செயல்
போற்றாதீர்கள்  பொல்லாதது  இழி செயல்.

கதைப்பார்கள் ஆயிரம் பெருமைக் கதைகள்
உதைப்பார்கள் அக்கனமே,இக்கதையைக் கேட்டவனை
முறைப்பார்கள் முழுப்பெருமையும் கேட்கவில்லையென்றும்
குறையெதுவும் அவர்களிடம் கண்டுவிடக் கூடாதென்று.