வெள்ளி, 29 ஜனவரி, 2010

K.Pயும் குழுவினரும்.....
இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகள் சிலவற்றிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமரன் பத்மநாதன் [kp]என்பவரை எமக்கு ஆதரவாக செயற்பட்ட சிலரும் சில இயக்க உறுப்பினர்களும் இரகசியமான சந்தித்துள்ளமை எம்மால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாடுகளில் கடந்த காலங்களில் எமது அமைப்பு சார்ந்து இயங்கி வந்த அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும் இலங்கை அரசின் துரோகச் செயல்களுக்குள் அகப்பட்டு எமது விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.முழுவதையும் அறிந்து கொள்ளhttp://lttepress.com/more1.html

வடகிழக்குத் தமிழர்களும் சனாதிபதித் தேர்தலும்


நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் வட கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்களின் பங்கு என்ன? மஹிந்த சிந்தனையை வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? தமிழ் கூட்டமைப்புத் தலைமையை இன்னும் தமிழ் மக்கள் நம்புகிறார்களா? அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென்கிறார்களா?ஆயுதக் குழுக்கள் தொடர்ந்தும் தங்களை வழி நடத்த வேண்டும் என்கிறார்களா?இப்படி ஆயிரம் கேள்விகள்? இதற்கெல்லாம் விடை யாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றுக்கெல்லாம் விடைகளை வழங்க சம்பந்தப் பட்டவர்களே முன்வருவார்கள்.
எப்பொழுது என்கிறீர்களா? பாராளுமன்றத் தேர்தலின் போது.அதுவரை பொறுமையுடன்
காத்திருங்கள்.இந்தச் செய்தியை பதிவிடும் போது, ஒரு செய்தி அதுதான் நமது கேள்வியுடன் தொடர்புடையது.

இந்த இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள் நமது கேள்விகள் பலதிற்கு இங்கு விடை கிடைக்கும் http://ustertamil.blogspot.com/2010/01/blog-post_1659.html

வழமைபோல இந்த சனாதிபதித் தேர்தலிலும் வடகிழக்கு மக்கள் பத்து லட்சம் வாக்குகளை பயன்படுத்தாமலே விட்டு விட்டார்கள்.மொத்த பதிவு செய்த வாக்காளர்கள் 19 ,83 ,946 ,அதில் வாக்களித்தவர்கள் 9,64 ,146 .பேர்   பேர். வட கிழக்குச் சிங்கள மக்கள்,முஸ்லிம் மக்கள் தங்கள் வாக்குகளை 90 % -99 % பயன் படுத்தி எதோ ஒன்றை நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் என் இனிய தமிழ் மக்கள் ஏதோ ஒன்றை நினைத்து
தயங்கிவிட்டார்கள்.
ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்கிறார்களோ? மறக்கவும் மாட்டோம்,மன்னிக்கவும்  மாட்டோம்.பொறுத்திருந்து பார்ப்போம்.பாராளுமன்றத் தேர்தலில் எம் இனிய தமிழ்
மக்களின் எண்ணத்தில் என்ன இருக்குது என்று.

புதன், 27 ஜனவரி, 2010

மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் ,.


சனாதிபதித் தேர்தல் -2010 வன்னி தேர்தல் மாவட்டம்.மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் ,.

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி. முடிவுகள்..சனாதிபதித் தேர்தல் -2010 ,தேர்தல் மாவட்டம் வன்னி.தேர்தல்த் தொகுதி முல்லைத்தீவு தேர்தல் முடிவுகள்..

,யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்


சனாதிபதி தேர்தல் -2010 யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் ,யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள் 

.நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்.


சனாதிபதித் தேர்தல்- 2010 ,.யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்.நல்லூர் தேர்தல் தொகுதி,தேர்தல் முடிவுகள் 

.பருத்தித் துறை தேர்தல் தொகுதி முடிவுசனாதிபதித் தேர்தல்-2010 ,.யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் \.பருத்தித் துறை தேர்தல் தொகுதி,தேர்தல் முடிவு

ஸ்ரீலங்கா சனாதிபதித் தேர்தல் -2010 முடிவுகள்.ஸ்ரீலங்கா சனாதிபதித் தேர்தல் -2010 .,உத்தியோகபூர்வ முடிவுகள்.சனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார் 

திகாமடுல்ல மாவட்ட தேர்தல் முடிவுகள்.சனாதிபதித் தேர்தல் 2010 .,தேர்தல் மாவட்டம் திகாமடுல்ல.திகாமடுல்ல மாவட்ட தேர்தல் முடிவுகள். சரத் பொன்சேகா முன்னிலையில்

திருகோணமலை மாவட்டத் தேர்தல் முடிவுகள்.சனாதிபதித் தேர்தல் 2010 .,திருகோணமலை தேர்தல் மாவட்டம்.திருகோணமலை மாவட்டத் தேர்தல் முடிவுகள்.சரத் பொன்சேகா முன்னிலையில்.

மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகள்.


சனாதிபதித் தேர்தல்- 2010 ,.தேர்தல் மாவட்டம் மட்டக்களப்பு.மட்டக்களப்பு  மாவட்டத் தேர்தல் முடிவுகள்.சரத் பொன்சேகா முன்னிலையில்.

வன்னி மாவட்டத் தேர்தல் முடிவுகள்சனாதிபதித் தேர்தல் -2010 .,தேர்தல் மாவட்டம் வன்னி.வன்னி  மாவட்டத் தேர்தல் முடிவுகள் .சரத் பொன்சேகா முன்னிலையில்.

.யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல் முடிவுகள்


சனாதிபதித் தேர்தல்- 2010 , தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம்.யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல் முடிவுகள் சரத் பொன்சேகா முன்னிலையில்.

உடுப்பிட்டி. தேர்தல்த் தொகுதி முடிவுகள்சனாதிபதித்  தேர்தல் 2010 ,தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம்.தேர்தல்த் தொகுதி உடுப்பிட்டி. தேர்தல்த் தொகுதி முடிவுகள்

கோப்பாய்.தேர்தல் தொகுதி முடிவுகள்.சனாதிபதித் தேர்தல் 2010 , தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம்.தேர்தல்த் தொகுதி கோப்பாய்.தேர்தல் முடிவுகள்

மானிப்பாய் தொகுதி ,தேர்தல் முடிவுகள்


சனாதிபதித் தேர்தல் 2010 ,தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம் .தேர்தல்த் தொகுதி மானிப்பாய் ,தேர்தல் முடிவுகள்

காங்கேசன் துறை தேர்தல் முடிவுகள்


சனாதிபதி தேர்தல் -2010 ,தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம்,காங்கேசன் துறை    ,தேர்தல்த் தொகுதி முடிவுகள்.                          

வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள்


சனாதிபதித் தேர்தல் -2010 ,யாழ்ப்பாண மாவட்டம் தேர்தல் தொகுதி வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள் 

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்.


சனாதிபதித் தேர்தல் 2010 ,தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி ஊர்காவற்துறை,தேர்தல் முடிவுகள். 

சம்மாந்துறைத் தேர்தல் தொகுதி முடிவுகள்


சனாதிபதித் தேர்தல் - 2010 ,திகாமடுல்ல மாவட்டம்,சம்மாந்துறைத் தேர்தல் தொகுதி,தேர்தல் முடிவுகள்

அம்பாறைத் தேர்தல் தொகுதி முடிவுகள்


சனாதிபதித்  தேர்தல்-2010 ,.திகாமடுல்ல மாவட்டம்.அம்பாறைத் தேர்தல் தொகுதி  முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் ,கல்குடாத் தேர்தல் தொகுதிமுடிவுகள்,


சனாதிபதித் தேர்தல்- 2010 ,மட்டக்களப்பு மாவட்டம் ,கல்குடாத் தேர்தல் தொகுதி,தேர்தல் முடிவுகள்.

ஜனாதிபதித் தேர்தல் -2010 ,மட்டக்களப்பு மாவட்டம்பட்டிருப்புத் தேர்தல் தொகுதி, தேர்தல் முடிவுகள்


ஜனாதிபதித் தேர்தல் -2010 மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்புத்  தேர்தல் தொகுதி, தேர்தல் முடிவுகள் 

சனாதிபதித் தேர்தல் -2010,காலி மாவட்டத் தேர்தல் முடிவுகள்

சனாதிபதித் தேர்தல் -2010 ,காலி மாவட்டத் தேர்தல் முடிவுகள் ,சனாதிபதி ராஜபக்ஸ முன்னிலையில் . 
.யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி தொகுதி தேர்தல்முடிவுகள்


சனாதிபதித் தேர்தல் -2010 ..யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி  தேர்தல் தொகுதி,தேர்தல் முடிவுகள்.

சனாதிபதித் தேர்தல்-2010 மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்


திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்.

சனாதிபதித் தேர்தல் மகநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்சனாதிபதித் தேர்தல் மகநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்.எழுத்துப் பெரிதாகத் தெரிய
படத்தின் மேல் மௌசை வைத்து க்ளிக்கவும்.  

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

ஸ்ரீ லங்கா சனாதிபதித் தேர்தல் 2010 .தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்.

மாவட்டம் ................மஹிந்த...................சரத் ..
புத்தளம் .....................4988 .............................2464 ..
மொனராகலை .......8871 ............................3795 .
இரத்தினபுரி .............9458 ............................4143..
காலி .........................15640 .............................7905 ..
அம்பாந்தோட்டை...8982 ..........................3679 .
யாழ்ப்பாணம்.............892 ............................3179 .
திருகோணமலை ...6892 ..........................3798 .
மாத்தறை ...............10425 ............................5129 .
மாத்தளை ................8846 ............................4038 ..
பதுளை ....................14998 ............................8056 .
மட்டக்களப்பு............1491 ..........................3637 .
திகாமடுல்ல ............9989 ...........................5885
களுத்துறை ............13695 ...........................6177 .
வன்னி ......................2018 .............................1845 .
பொலன்னறுவை....9971 ...........................4057
கொழும்பு ................12119 ............................6897 .
கேகாலை ...............14330 ............................6811 .
கண்டி .......................20184 ...........................10025 .
நுவரெலியா ............6098 ............................3087 .
அனுராதபுர.............25760 ..........................10228 .காத்திருங்கள் .....தொடரும் 

திங்கள், 25 ஜனவரி, 2010

ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தல்-2010.ஸ்ரீலங்கா ஜனாதிபதித்தேர்தல2010

1.கொழும்பு 
15218542.கம்பஹா 
14744643.களுத்துறை 
813233

4.கண்டி 
970456

5.மாத்தளை 
3426846.நுவரேலியா  
457137

7.காலி 
761815

8.மாத்தறை 
5788589.அம்பாந்தோட்டை 
42118610.யாழ்ப்பாணம் 
72135911.வன்னி 
26697512.மட்டக்களப்பு 
33364413.அம்பாறை 
42083514.திருகோணமலை 
241133

15.குருநாகலை 
118364916.புத்தளம் 
495575

17.அனுராதபுர 
579261

18.பொலன்னறுவை 
28033719.பதுளை 
57481420.மொனராகலை 
30064221.இரத்னபுரி 
734651

22.கேகாலை 
613938


 மொத்த வாக்குகள்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தல் மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட  மொத்த வாக்குகள்.சிவப்பு வர்ணத்தில் இருப்பது வடகிழக்கு மாகாணங்கள். பச்சை நிறத்தில் காணப்படுவது சரத் பொன்சேகா வெல்லுவார் என எதிர்பார்க்கும் மாவட்டங்கள்.நீல வர்ணத்தில் இருப்பது மஹிந்த ராஜபக்ச வெல்லுவார் என எதிர்பாக்கப்படும் மாவட்டங்கள்.முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகாவின் ஆதரவு சரத் பொன்சேகாவுக்கு கிடைக்கமுதல் எடுக்கப்பட்ட முடிவுகள்.மேலதிக விபரங்களுக்கு இங்கே போய்ப்பாருங்கள்   http://www.tamilseythi.com/srilanka/srilanka-election2010/2143.print.html 
                                            

புதன், 20 ஜனவரி, 2010

Poll: இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறபோவது...!!
Poll: இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறபோவது...!!
ஒரு  கருத்துக்  கணிப்புத்தான்,26 .ஜனவரி 2010வரைக் காத்திருக்க முடியாதவர்கள்.இப்பொழுதே வாக்களிக்கலாம்.அடையாள அட்டை தேவையில்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கத் தேவையில்லை .உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பதிவின் அடிப்பகுதிக்குச் செல்வது ஒன்றுதான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை.வாருங்கள் வாக்களிப்போம்.சிறிலங்காவின் அடுத்த  ஜனாதிபதியை இந்தக் கருத்துக் கணிப்பால் கண்டுபிடிப்போம்.

யாழ் /பாதுகாப்பு வலையத்தில் மீள் குடியேற்றம்
பாதுகாப்பு வலையங்களில்பொதுமக்கள் மீளக்குடியமர ஸ்ரீ லங்காவின் பாதுகாப்பு அமைச்சு   அனுமதி அளித்துள்ளதாக அரச தொலைக்காட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.பாதுகாப்பு வலையததினுள் காணி,வீடுகள் இருப்பவர்கள்,தங்களது உரிமைகளை உறுதிப் படுத்தக்கூடிய ஆவணங்களுடன் சென்று தகுதிவாய்ந்த அதிகாரிகளை சந்திக்குமாறு, அரச தொலைக்காட்சி அறிவித்தல் விடுத்துள்ளது.

ஏனைய பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலையங்களுக்குப் பொருந்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவும்

தேர்தல் நெருங்க நெருங்க,தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்காததெல்லாம் நடக்கலாம் போல்

தெரிகிறது.  

ஜனாதிபதித் தேர்தல் - 2010


வட கிழக்கு மொத்த வாக்காளர்கள் பதிவு செய்யப் பட்டவை 
2005 ஆண்டு தேர்தல் இடாப்பின்படி 19,06260
2008  ஆண்டின் தேர்தல் இடாப்பின் படி 19,83946

 எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்பேசும் முகாமையாளர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்போது,ஜனாதிபதி வேட்பாளர்களோ யார் முந்தி,தேர்தலில் வென்று இனிய தமிழ் மக்களின் கடைசிச் சொத்தாக மிஞ்சி இருக்கும்,கச்சையை உருவலாம் என்று யோசனை பண்ணுகிறார்கள் .இதை அறிந்த ...என் இனிய தமிழ் மக்கள் .. என்ன செய்யலாம் என்று தலையைப் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.சும்மாவா கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் சுத்த தமிழ்  வாக்குகள் 2005 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் படாதவை தேர்தல் செயலகத்தின்  கணக்கின்படி,  பதியப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்.வட கிழக்கில் கொட்டிக் காயப்போட்டிருக்கிறார்கள் எனது இனிய தமிழ் மக்கள். இவற்றை எப்படி கணக்குப் பண்ணலாம் என்பதுதான் வடகிழக்கு முக்கிய அரசியல் வாதிகளின் கவலை.தங்களின் இருப்பைத் தக்கவைக்கவும்,தங்களின் எஜமான விசுவாசத்தை மீண்டும் நிருபிக்கவும் இந்த இனிய தமிழ் மக்களின் வாக்குகள் எப்படியெல்லாம் உதவப் போகிறது என்பதுதான் தற்போது அவர்களின் கவலை.  . 
  
 தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து,பெரும்பான்மை மக்களின் பகுதிகளில் "அமிர்தகழி திமிர்த களம்" ஆடி வருகிறார்கள்.தொலைக்காட்சிகள் மேலும் ஒரு  படி  போய்   நேரடி விவாதம் மட்டும் நடத்தாதகுறை ஒன்றைமாத்திரம் விட்டு வைத்திருக்கிறார்கள்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனவரி  26ந் திகதி இரவு 12  மணிக்கு, தாங்கள் யுத்தம் செய்து பெற்ற சுதந்திரத்தை சரத் பொன்சேகா,தமிழ் கூட்டமைப்புத் தலைவர்  சம்பந்தரிடம் ஒப்பந்தம் போட்டு விற்று விட்டதை 
வாங்கிக் கிழித்தெறிந்து தமிழ் மக்களை இந்நாட்டின் சுதந்திர பிரசைகளாக ஆக்குவேன். .அத்துடன் சுபீட்சமான எதிர்காலத்தையும் காட்டுவேன் என்கிறார்.நம்பவில்லை என்றால் மேலேயுள்ள படத்தைப் பார்க்கவும்.வடகிழக்கு வாக்குகளை தனக்குச் சாதகமாக்க ஜனாதிபதி நம்பியிருப்பவை,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,தர்மலிங்கம் சித்தார்த்தன்,
ஆனந்த சங்கரி, தமிழ் மக்களை வன்னியில் இருந்து விடுவித்தது,தமிழ் மக்களில் இருந்து விடுதலைப்புலிகளை மாத்திரம் தெரிந்து எடுத்து வகை, தொகை இல்லாமல் கொன்றது.பாதுகாப்பான தமிழ் அகதி முகாம்கள் ஏற்படுத்திக் கொடுத்தது.விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு அரசியல்வாதி அந்தஸ்த்துக் கொடுத்தது.தப்பி வந்த போராளிகளுக்கு பயங்கரவாதி என்ற பட்டத்துடன் சிறை வாழ்க்கை. இன்னும் பட்டியல்  இடலாம். கடந்த 2005 ஜனாதிபதித் தேர்தலில் இவர் வடகிழக்கில் பெற்ற மொத்த வாக்குகள் 226009 வட கிழக்கின் மொத்த வாக்குகளில் 12 % த்தைதான் இவரால் பெற முடிந்தது. இவரை விட ரணில் விக்கிரம சிங்க பெற்ற வாக்குகள் அதிகம். 
    
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா   தான் எதையும் தமிழ் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடம் எழுதவும் இல்லை,விற்கவும் இல்லை .இத்துடன் நிலையான மாற்றத்தையும் ஏற்படுத்துவேன் என்கிறார்.ஜனாதிபதியின்  தலைமையின் கீழ் போரில் ஈடுபட்டு,தமிழ் மக்களை அகதிமுகாம்களுக்குள்  பாதுகாப்பாகக் கொண்டு விட்டவரும் இவர்தான். இவருக்காக வாக்கைச்  சேகரிக்க,பெரும்பான்மை மக்கள் ஐ .தே.கட்சி சார்பில் ரணிலும் அவரது குழுவினரும்,இனவாதக் கட்சி ஜே.வி.பி.சார்பில் சோமவன்ச அமர சிங்கவும்.தமிழைப் பேசிக்கொண்டு தமிழ் மக்களுக்கு எப்படி ஆப்பு வைக்கலாம்,கிழக்கு மாகாணத்தை எப்படி கையகலப் படுத்தலாம் என்று அலையும் முஸ்லிம் காங்கிரசும்,மலையகத் தமிழர் மனோகணேசனும் இவருக்கு அகலக் கைகள்.ஜனாதிபதித் தேர்தல் -2005 இவரது நண்பர் ரணில் விக்கிரம சிங்க வடகிழக்கில் பெற்ற வாக்குகள் 443180 வடகிழக்குமாகாணத்தில்  மொத்த வாக்குகளின் 23 %மான வாக்குகளை இவர் பெற்றார். மஹிந்த ராஜபக்சவை விட அதிகம்.   


.தமிழ் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன்   தொடர்ந்தும்,இந்தியாவின் இசையுடன் " ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம்"என்கிறார்கள்.இசை மாத்திரம் அல்ல தயாரிப்பு,நெறியாள்கை,உதவி இப்படிப் பட்டியல் நீண்டாலும்.நடிப்பு மாத்திரம் 
சுத்தமா தமிழர் கூட்டமைப்பு மாத்திரமே.தமிழ் மக்களின் வாக்குகளைக் கைகளில் எப்படி ஏந்துவது,என்னமுறையில் பாவித்து,தமிழ் மக்களைக் காப்பற்ற வக்கில்லாத தமிழ்க் கூட்டமைப்பும் சம்பந்தர் தலைமையில் திரு திரு வென முழித்துக்கொண்டு வட கிழக்கில் அலைகிறார்கள்.   

   மொ.கள்=மொத்த வாக்குகள் .உதிரி= உதிரிக் கட்சிகள் வாக்க.வை =வாக்களிக்காதவை
சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில்,மஹிந்த பெற்ற வாக்குகள் மாவட்ட வாரியாக தேர்தல் திணைக்களத்தின் தகவலுடன் உள்ளது.படம் பெரிதாகத் தெரிவதற்கு மௌசை படத்தின் மேல் வைத்துக் கிளிக்கவும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் 36 %  689649 இதை 
விட வாக்களிக்காதவர்களின் தொகை  அதிகம். மொத்த வாக்காளர்களின் 64 % மானவர்கள் 
வாக்களிக்கவில்லை 1236071 இந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால்,தமிழ் மக்களின் தலைஎழுத்து வேற மாதிரியாக இருந்திருக்கலாம்.


வரும் 26 ந திகதி எல்லாம் தெரிந்து விடும்.அடையாள அட்டை கலாசாரம் தொடருமா? போலீஸ் பதிவு தொடர்ந்து நடை பெறுமா? பாதுகாப்பு வலையம் அதிகரிக்குமா? இவை யாவும்
தொடர்ந்து அமுலில் இருக்கும். எவர் ஜனாதிபதியாக வந்தாலும்,இவைகளில் மாற்றங்கள் வார,தேர்தல் முடிந்ததும் பழைய குருடி கதவைத் திறடி கதைதான் தொடரும்.

திங்கள், 18 ஜனவரி, 2010

இறந்தவர் மீண்டும் உயிருடன் !       21ம் நூற்றாண்டின் அதிசயம், சிறிலங்காவின் பாதுகாப்புப் படையால்யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர் உயிருடன் இருப்பதாக இணையத்தளம் தகவல்.இவரது இறப்புச் சாட்சிப் பத்திரம் கூடவழங்கப்பட்டது. நீங்களே இந்தச் செய்தியின் நம்பகத்   தன்மையை பரிசோதித்துப் பாருங்கள். வழமையாக தேர்தலில்தான் இறந்தவர்கள் தமது வாக்குகளைப்போட்டு விட்டுச் செல்வார்கள்.ஆனால்இது வழமைக்கு மாறாக நடக்கிறது இணையத் தள இணைப்புக்கு இங்கே சொடுக்கவும் .http://lttepress.com/more1.html

இலங்கைச் சரித்திரம்-24

Posted by Picasa
இலங்கைச் சரித்திரம்,வழமைபோல் புதிதாகப் படிப்பவர்கள் முதலாம் அத்தியாயத்தில்
இருந்து ஆரம்பியுங்கள்.மௌசை பக்கத்தின் மேல் வைத்துக் கிளிக்கினால் எழுத்துக்கள்
பெரிதாகி வாசிப்பதுஇலகுவாக இருக்கும்.தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பை பின்னூட்டமாக இடுங்கள். தொடர்ந்து 25 வது  பக்கம் செல்ல .

வெள்ளி, 15 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்து-2010


Posted by Picasaதங்கத் தமிழினம் தலை நிமிர்ந்து வாழவும்
தரணியெல்லாம் தமிழ் தமிழ் என்றும் பேசவும்
பொங்கு கடல்போல் தரணியெங்கும் ஆளவும் 
எங்கும் நிறை இறைவன்அருள் பொழியட்டும்

வந்தவினை என்றும் தங்காமல் ஓடி  ஒழியட்டும்
வாழும் எம்மை வாழவைக்க கதிரவன் புறப்படட்டும்
சூழ நிற்கும் அசுரர்கள் தொல்லை  மறையட்டும்
சூழ்ந்து நின்று குழி பறிக்கும் கூட்டம் குறையட்டும்   

தமிழனைக் கொன்று தமிழ் வளப்போர்
தரணியைத் தனியே ஆளட்டும்
தமிழ் மக்களை ஒத்தி  வைத்த 
தமிழினத்தின் தமிழ்க் காவலர்கள் வாழட்டும்

தரணியில்  தமிழினமும் தமிழும் அனைவரும்  வாழ
ஓரணியில் உலகமும் ஒற்றுமையுடன் சேர
இரண்டாயிரத்துப் பத்தாவது இந்தப் பொங்கல்
இன்பமாகப் பொங்கி இவ்வுலகத்தை வாழ்த்தட்டும்
 

திங்கள், 4 ஜனவரி, 2010

மரண அறிவித்தல்


Posted by Picasa
எனது தந்தையாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்டு,எங்கள் துன்பத்திலும்,துயரத்திலும் பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும், கோடான  கோடி நன்றிகள்.