புதன், 17 பிப்ரவரி, 2010

மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில் எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்
மத்தியில் இந்தப் பாடல்கள் பிரபல்யம். ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம் ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள். மிகவும் மனவருத்தமான விஷயம் இந்தத் தலை முறையுடன் இது அழிந்து விடும். நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.தற்போது
அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்,இயந்திர மயப்படுத்தல்,கட்டாயக் கல்வி முறை இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

கீழ்வரும் பாடல்கள் தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.

கச்சான் அடித்த பின்பு -நடுக்
காட்டில் மரம் நின்றதுபோல்
உச்சியில் நாலு மயிர்-தலை
ஓரம் எல்லாம் வழுக்கை

கண்ணுமொரு பொட்டை-இரு
காதுகளும் செவிடாம்
குருத்தெடுத்த வாழை போல-அவர்
கூன் வளைந்திருப்பார்

முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
மூணு பல்லுத்தான் மீதி
காகக் கறுப்பு நிறம்-ஒரு
காலுமெல்லோ முடமவர்க்கு

நாணற்பூப்போல -தலை
நரைத்த கிழவனுக்கு
கும்மாளம் பூப்போல -இந்தக்
குமர்தானோ வாழுறது

தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
தக தகவென்ற பட்டுடையும்
பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

அத்தர் புனுகாம்
அழகான பவுடர் மணம்
இஞ்சி தின்ற குரங்குபோல -
இவருக்கேனோ இச்சொகுசு.

பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
பவுசாக நடந்திட்டாலும்
அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
ஆறுநாட் பட்டினியாம்.

சங்கிலியும் தங்கமில்லை -
சரியான பித்தளையாம்
இடுப்பிலேயும் வாயிலேயும்-
இருக்கிறது இரவல் தானாம் 
     

தமிழா..! நீ பேசுவது தமிழா...!-02

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவி வண்ணம் -உங்கள் 
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதே யெந் எண்ணம் 
தேனிசைச் செல்லப்பாவின் தேர்ந்த இனிய குரல் வண்ணம் -ஐயா
தெள்ளு தமிழின் இன்றைய நிலைதான் இந்த இனிய பண்ணும்.   தமிழா! நீ பேசுவது தமிழா!
நமது உடன் பிறப்பு "உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்"அவர்களின் கவிவரிகள்,தேனிசைச் செல்லப்பா அவர்களின் குரல் வளம், அருமையான இசை வெள்ளம்  ,அனைத்தும் இணைந்த ஒரு இசைத் தமிழ்ப்பழம்.(இந்த இணைய தளத்தில் திரு.புஸ்பவனம் குப்புசுவாமி
பாடியுள்ளார்)
http://moganaraagam.blogspot.com/search/label/காசி%20ஆனந்தன்


நமது பாடலைப் பாடியிருப்பவர் தேனிசைச் செல்லப்பா இருபாடலையும் கேளுங்கள்,நமது
தாய் மொழியின் தற்போதைய நிலைமையைப் பாருங்கள்,இப்படியே போனால் இன்னும் சில வருடங்களின் பின் தமிழ் என்னவாகும்? நீங்களே யோசித்துக் கொண்டு இரு பாடலையும் கேளுங்கள். புலம் பெயந்தவர்களுக்கு இப்பாடல்கள் பழையவை.இணைய இணைப்பில் மௌசை வைத்து பிளே பட்டினை(play ) அழுத்துங்கள்.இன்னும் அநேக பாடல்கள், தமிழக முதல்வருக்குப் பிடியாத பாடல்களும் உண்டு.உணர்ச்சிக் கவிஞரின்
வேறு பாடல்க்களுமுண்டு.
http://www.theesam.com/music/index.php?action=song&id=186