திங்கள், 10 ஜனவரி, 2011

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்.
வெள்ளத்தில் மிதக்கும்,கிழக்கு மாகாணம் படங்களைக் காண இங்கே  மௌசை வைத்து. 
அழுத்துங்கள்.நன்றி, தமிழ் மிரர்.சேத விபரங்கள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனையால் வெளிடப்பட்ட அறிக்கையிலிருந்து, 421 ,809 பேர்  இருப்பிடங்களில்  இருந்து வெளியேறியுள்ளனர்,142,105 பேர் பாடசாலைகள்,பள்ளி வாயல்கள்,போன்ற பொது இடங்களில்,தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வவுண தீவு,பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கன்னங்குடா,ஆயித்திய மலை,மற்றும் பட்டிப்பளை செயலாளர் பிரிவிலுள்ள 14 கிராமங்கள்,கிரான் செயலாளர் பிரிவிலுள்ள சில  கிராமங்கள்,வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில  கிராமங்கள் வெள்ளத்தாலும்,காற்றாலும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும்,மேற்படிக்  கிராமங்களுக்கான  தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்,மேற்படி கிராமங்களில் இருந்து,பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு,கொண்டுவருவதற்கு சகல நடவடிக்கைகளையும்,மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனை மேற்கொண்டுள்ளது.    


இடி, மழை, மின்னல், வெள்ளம், இன்னும் இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு இருக்குமோ,அவ்வளவும் இன்று கிழக்கு   மாகாணத்தில் தான்,இறைவனால் இறக்குமதி
செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.போதாக்குறைக்கு மின்சாரமும் தன்னால் முடிந்த மட்டும்,தன் கைவரிசையைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்கள் கண்ட முதல் வெள்ளம், உயிர்ச் சேதங்களை பெரிய அளவில் ஏற்படுத்தாவிட்டாலும்,உடைமைகளை முடிந்தளவுக்கு,சேதமாக்கிவிட்டது.
கிழக்கு மாகாணத்தின் 85 %பொருளாதாரம் விவசாயம். விவசாயம் என்பதையே இல்லாமல் செய்த பெருமை இந்தவெள்ளத்தையேசாரும்.நெல்உற்பத்தியில்தன்னிறைவு 
 கண்ட கீழ மாகாணம்,ஒரு நேர உணவுக்கு கையேந்த வைத்து விட்டது. 

பாடசாலைகளும் பள்ளி வாசல்களும்,வெள்ள அகதி முகாங்களாகிவிட்டன. முஸ்லீம் 
மக்கள் பள்ளிவாசல்கள் மூலம் ஓரளவு,நிம்மதியைத் தேடிக்கொள்ளக்கூடியதாக,
அதாவது,சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு,ஆசுவாசப் படுத்தப்படுகிறாகள். ஏனையவர்களுக்கு இராணுவம், தனது பங்களிப்பைச் செய்து கொண்டுள்ளது.

போக்குவரத்துக்கள் இது எழுதும் வரையில் மறு சீர் அமைக்கப் படவில்லை.நேற்று 
தினசரிப் பத்திரிகை கொழும்புவில் இருந்து,மட்டக்களப்பு ,காத்தான்குடி ,கல்முனை 
அக்கரைப்பற்று,பொத்துவில்வரை நடைபெறவில்லை. இன்றும் அதே நிலைதான் 
தொடர்கிறது.பொதுமக்கள் பொது இடங்களிலும்,உற்றார் உறவினர்களின் மாடி 
வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

மழை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது,கிடைத்த செய்தி,மட்டுநகர் வாவியின் இருமருங்கின் கரைகளில் இருப்பவர்களை,பாதுகாப்பான இடங்களுக்கு, இடம்பெயருமாறு பாதுகாப்பு படையினர்,முன்னறிவித்தல் கொடுத்துள்ளார்கள்.பொது மக்களின் நிலைமை சொல்ல 
முடியாத துன்பத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.  

இந்த காணொளி என்னால் எனது வீட்டையும் அயலையும் சுற்றி எடுக்கப்பட்டது.ஒரு 
காக்கா குருவியையும் சந்திக்க முடியவில்லை,எல்லோரும் கிரேட் எஸ்கேப்.விடியோ 
காட்சிகள் இன்னும் உண்டு பெரிய பைலாக இருப்பதால் முடியவில்லை.மயற்சி திருவினையாக்கும்.முடிந்தால் பதிவிடுகிறேன்