செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தமிழ் ஈனத்தின் தலைவன்.ஏட்டுச் சுரக்காய்களை எடுத்து விளையாடும் கலையில்-ஈழ
நாட்டுப் பற்றாளர், நமது தமிழ்நாட்டுக் கலைஞர் முதல்வர்,
வோட்டுப்போட்ட  தமிழன் தலையில் வேட்டுவைத்து -தேங்காய்
உடைத்து தன் வீட்டுச் சோத்திற்கு சொதிவைத்த வல்லவர்.


கூட்டைவிட்டு உயிர் போகுமுன் மீட்டிடுவாய் என நம்பினோம்-நீயோ
ஆட்சியை விட்டு அகல்வோம் எனநினைத்து,பட்டோலையில்  பம்பினாய்.
காட்டிவிட்டாய் யுன் நரிக் குணத்தை உண்ணும் விரதத்தில் அன்று-பாரத
நாட்டியமா? நாடகமா? நன்றாக ஆடுகின்றாய் உலகுக்கு இன்று 


அடித்துத்துவைத்து  அலகாகக் கிள்ளி,அள்ளி எறிந்து-புலருமுன்
தேடிப் பிடித்து சிறையில், இறுக்கி அடைத்து முறித்துவிட்டு
பட்டுச் சட்டைக்கு அளவெடுத்த பரிதாபம், அநியாயம் -தமிழ்
நாட்டுத் தமிழன் ஆளுகின்ற ஆட்சியில்தான் இந்த  நியாயம்.


வேட்டைக்காரன் பார்த்து வெகு வேடிக்கையாய் இருந்துவிட்டு-யுங்க
கட்சி கடைசியில் கட்டையில் காலடி வைத்து ஏறும்போது
ஆட்சி கொடுக்க வேண்டும் இலங்கைத் தமிழருக்கு -நிலை
நாட்டப்படவேண்டும் தமிழர் முழு உரிமைகள் ஈழத்தில்.


மாட்டிவிட்டு மறு படியும்  நோட்டம் பார்க்கும் -கண்
கட்டுவித்தை தமிழ் நாட்டு மக்களுடன் முடியட்டும்.
தொட்டிலை ஆட்டிவிட்டுப் பிள்ளையையும் கிள்ளி விட்ட-பழம்
பாட்டிக்கதை  ஈழத்தில், இங்கு முழுப்பேருக்கும் அத்துபடி. .
  
தமிழ் ஈனத்தின் தலைவன்