துன்பத்தில் இருந்து வெளிப்பட.
மனிதர்களாகிய நாம்,இன்னல்களில் இருந்து வெளிப்பட,எந்தவித செலவுமில்லாமல்.
திருமூலர் நான்கு வரிகளில் நல்ல வழியைக் காட்டியுள்ளார்.முடிந்தவர்கள். ஏன்? எல்லாராலும் இதைக் கைக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள்.காசி ராமேஸ்வரம் போகமுடியவில்லையே?தான தருமம் பன்னமுடியவில்லையே என்று
அங்கலாய்ப்பவர்கள்.இந்த நாலு வரியை வாசித்துப் பாருங்கள். நறுக்குத் தெறித்தாற்போல், எவ்வளவு எளிமையாக,இலகுவாக,யாவர்க்கும் புரியும்படி,
அழகாக தருமம் என்பது என்ன என்பதை விளக்கியுள்ளார்.உங்கள் மனதை இன்னல்களில் இருந்து,இலகுவாக வெளிக்கொணரலாம்.எனக்கு விளங்கிய முறையில் இதை எழுதியுள்ளேன்,இதை விட திறமையான முறையில் யாரும் எழுதியிருந்தாலும்
சொல்லுங்கள் திருத்திக் கொள்வோம்.
யாவர்க்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கொரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. (திருமூலர் திருமந்திரம்)
இறைவனைப் பூசிப்பதற்கு ஒரு பச்சிலை போதும்.பசுவுக்கு ஒரு கைப்பிடி அளவு புல் கொடுத்தால் அதுவே பெரிய ஜீவா காருன்யமாகும். உணவு உண்ணும் போது,ஒரு கவளம் உணவு தருமம் செய்தல்.பிறர் மணம் நோகாதவாறு, இனிய மொழிகளைப்
பேசுதல்.இவ்வாறு வாழத் தினமும் பழகிக் கொண்டாலே,வாழ்வில் துன்பம் என்றும்
நெருங்காது.