தீவிர பயிற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபடுவதாக,இலங்கையின் பிரதமர்
தி.மு ஜயரத்ன பாராளுமன்றத்தில் புதன் கிழமை நடந்த அவசரகால நீடிப்புத் தொடர்பான விவாதத்தில் பங்கு கொண்டு உரையாற்றுகையில் தெரிவிப்பு.
மேலும் பேசுகையில்,மூன்று பயிற்சி முகாங்கள் இயங்குவதாகவும்,
இவைகளில் ஒன்றில் முக்கிய தலைவர்களைக் கொல்வதற்கு தீவிர
பயிற்சிகள் வழங்க்கப்படுவதாகவும். அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் வி.ருத்திரகுமாரின் தலைமையின் கீழ் ஒரு குழுவும்.நோர்வேயில்
செயல் படும் நெடியவன் தலைமையில் ஒரு குழுவும், அண்மையில் இந்தியாவிற்கு விமானமூலம் வந்த விநாயகம் தலைமையில் ஒரு குழுவும்
தீவிர பயிற்சியில் ஈடுபடுவதாகவும்,இவர்களின் முக்கிய நோக்கம்.
இலங்கையில் வன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதுடன்,இலங்கை இந்திய
முக்கிய தலைவர்களைக் கொல்வதுதான், என்றும் புலன் ஆய்வுப்
பிரிவினரின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, பாராளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
அண்மையில்,தமிழ் நாட்டில் மகா போதி அலுவலகத்தில் நடந்த, சம்பவத்திற்கும்,புகழேந்தி மாஸ்டர் குழுவிற்கும் நெருங்கிய சம்பந்தம்,
இருப்பதாகவும்,இவர் பொட்டு அம்மானின் நெருங்கிய சகாவாக இருந்தவர்
என்றும்,இவைகளின் பின்னணியில் முக்கிய நபராக இவரே செயல்படுகிறார்.
தமிழ் நாட்டின், கேரளா எல்லைக் கிராமமான பிச்சுமலை கிராமத்தை அண்டிய
பகுதியில் இப் பயிற்சி முகாங்கள் அமைந்திருப்பதாகவும். புலனாய்வு அறிக்கையை அடிப்படையாக வைத்து பிரதமர், பாராளுமன்றத்தில்
அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில்
தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக எதிர்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரம சிங்க
"இந்திய நடுவண் அரசுக்கு அறிவிக்கப் பட்டாத?"என வினா எழுப்பியபோதும்,
பிரதமரோ, அவரின் மந்திரி சபையோ எதுவித பதிலும் அளிக்கவில்லை.