வியாழன், 25 ஜூன், 2009

மட்டு மாநகர்
வான் உயர் புகழ் மாமாங்கேஸ்வரர் அருள் -நிறை
தான் தோன்றி ஈஸ்வரர் பெருமை கொள்
மீன் பாடத் தேன் பாயும் மட்டு மாநகர் –இதற்கு
மிதிலை மாநகர் கூட நிற்குமா நிகர்


இறைவனாக இருக்கின்றேன்.


நான் இறைவனாகத்தான் இருக்கிறேன்-உலகில்
மனிதனாக இருப்பதாக நீ இருந்தால்
எங்கும் தேடி அலைய வேண்டாம் – தினம்
உங்கள் காலடியில் நானிருப்பேன்

உன்னையே நீ உணரவில்லை –பிற
உறவுகளை ஒழுங்காகப் புரியவில்லை
இன்னுன் ஏன் தேடுகிறாய் என்னை –அன்பு
அன்னையின் முகத்தைப் பார்!

அறிவுள்ள தந்தையை நேசி –உலகின்
எண்ணில்லா இதயங்களை யோசி
அன்பான அயலவர்களைப் பெற்று நாளும்
பண்பாக வாழ்வதையே போற்று

கண்ணில்லா மனிதர்களாய் வழாமல் --பெரும்
கருணையுள்ள மனிதனாய் வாழ்.
எங்கும் நீ எனைத் தேடவேண்டாம்--அன்பு
பொங்கும் மனதில் ஓரமாய் நானிருப்பேன்