செவ்வாய், 15 நவம்பர், 2016

மட்டக்களப்பு விகாராதிபதியை தூண்டிவிடும் அமைச்சர்?மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அண்மையில் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த அமைச்சரே அண்மையில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடாத்தி ஆர்ப்பாட்டம் நடாத்த ஆலோசனை வழங்கியதுடன் அதற்கு அரசாங்க உயர் அதிகாரி ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த அமைச்சர் அவர்கள் பட்டிப்பளை பிரதேச அதிகாரி ஒருவரிடம் நீங்கள் இன்று அந்த பிக்குவுக்கு 30 ஏக்கர் காணியை வழங்க மறுத்தால் பின்னர் 600 ஏக்கரை வழங்க வேண்டிவரும் என தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த அமைச்சர் மாவட்டத்தில் இன முரண்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் அதற்காகவே குறித்த பிக்குவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

thanks to Tamilwin

உலகில் நல்லாட்சி நடைபெறும் 10 நாடுகள் எவை தெரியுமா?ஒட்டு மொத்த உலகில் நல்லாட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தை பின்லாந்து தட்டிச் சென்றுள்ளது.
உலக நாடுகளில் நல்லாட்சி நடைபெறும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. கல்வி, வருவாய் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளுக்கு இந்த பட்டியலில் முதன்மை இடங்கள் கிட்டியுள்ளன.
அந்த வரிசையில் முதலிடத்தில் பின்லாந்து அரசு தட்டிச் சென்றுள்ளது. கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்த பின்லாந்து இந்த ஆண்டு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. கடந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தே இருந்தது. 3-வது இடத்தில் நோர்வே உள்ளது. 4-வது இடத்தில் நெதர்லாந்து எட்டியுள்ளது.
இதன் பாராளுமன்றம் அமைந்துள்ள ஹேக் நகரில் உலக நாடுகளின் 150 அமைப்புகள் இங்கு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 5-வது இடத்தில் ஸ்வீடன் உள்ளது.
கடந்த ஆண்டைவிடவும் ஒரு இடம் பிந்தங்கி இருந்தாலும் உலக நாடுகள் வரிசையில் நல்லாட்சி நடைபெறும் நாடுகளில் ஆகச்சிறந்த நாடு ஸ்வீடன் என கூறப்படுகிறது.
நல்லாட்சி நடைபெறும் நாடுகளின் தரவரிசை பட்டியல்:
  1. பின்லாந்து
  2. நியூசிலாந்து
  3. நோர்வே
  4. நெதர்லாந்து
  5. ஸ்வீடன்
  6. சுவிட்சர்லாந்து
  7. டென்மார்க்
  8. லக்சம்பர்க்
  9. கனடா
  10. ஜேர்மனி
ஆசிய நாடுகளில் ஜப்பான் மடுமே குறித்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 17-வது இடத்தில் ஜப்பன் உள்ளது.