செவ்வாய், 15 நவம்பர், 2016

மட்டக்களப்பு விகாராதிபதியை தூண்டிவிடும் அமைச்சர்?



மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அண்மையில் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த அமைச்சரே அண்மையில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடாத்தி ஆர்ப்பாட்டம் நடாத்த ஆலோசனை வழங்கியதுடன் அதற்கு அரசாங்க உயர் அதிகாரி ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த அமைச்சர் அவர்கள் பட்டிப்பளை பிரதேச அதிகாரி ஒருவரிடம் நீங்கள் இன்று அந்த பிக்குவுக்கு 30 ஏக்கர் காணியை வழங்க மறுத்தால் பின்னர் 600 ஏக்கரை வழங்க வேண்டிவரும் என தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த அமைச்சர் மாவட்டத்தில் இன முரண்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் அதற்காகவே குறித்த பிக்குவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

thanks to Tamilwin





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள