வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத்தாள்கள். ,

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத் தொடர்கள்.இன்றுமுதல் இலங்கையின் நாணயற்  சுழற்சியில் ஈடுபடும்
வகையில்,  இலங்கை மத்திய வங்கியால் அதிகார பூர்வமாக,
வெளியிடப்பட்டது.இந்த நாணயத் தாள்களின் சிறப்பம்சமாக, பார்வையற்றவர்கள் 
கூட இலகுவாக அடையாளம் காணக் கூடிய வகையில்,அச்சிடப் பட்டுள்ளது.

ஒவ்வொரு நாணயத் தாளினதும்,பாதுகாப்பு நீர்வரி அடையாளமாக நாணயத் தாளின் முகப்பில் காணப்படும் உள்ளூர்  பறவையின்,வெவ்வேறு  முழு உருவம்,நீர்வரிப். படமாக 
அச்சிடப்பட்டுள்ளது.அத்துடன் நாணயத் தாளின் முகப் பெறுமதியும் நிலைக்குத்தாக 
நீர்வரி அடையாளமாக இடப்பட்டுள்ளது.