ஐயோ என்பார்கள் சிலர் --அந்த அவனா என்றார்கள் பலர்
சிவனே என்றும் சிலர் --இன்னும் சிந்திய கண்ணீருடன் பலர்
வந்தது துன்பம் எனக்கு--அதற்கு
வருந்தியவர்கள் ஆயிரம் கணக்கு
வாட்டியவர்களோ பல ஆயிரம் இருக்கு-புரியாத
விந்தை உலகம் இன்னும் எதற்கு
சொந்தம் நான்என்றார்கள்-- எனக்கு
சொகுசாக இருந்தபோது வந்தவர்கள் பஞ்சமில்லை பேச்சில் உறவுக்கு--உதை
பந்தாய் போனது என்பெயர் பேச்சுக்கு
உயர்ந்த இடத்தில் இருந்தபோது--இந்த
உலகம் எந்தன கைகளுக்குள்
உண்மையை யான் உணர்ந்தபோது--ஐயோ
உருண்டுவிட்டேன் உலகத்தின் காலுக்குள்
வேசங்கள் தெரிந்ததும் நெஞ்சுக்குள்--உலக
மோசங்கள் புரிந்ததும் அன்றைக்குள்
வேதங்கள் கூறியது வாழ்க்கைக்கு ---எரியும்
வேதனைகள் யாவும் புதிய பாதைக்கு
ஏணியாக இருந்தபோது எனக்கு –கொஞ்சமும்
ஏறவில்லை இந்த இளவடித்த ஞானம்
ஞானியாக நான் வந்தபோது இன்று –ஏற
ஏணியில்லை எங்கு போவது நானும்