'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
சனி, 3 டிசம்பர், 2016
மட்டக்களப்பு நகரில் பதட்டம் முடங்கியது
நகரில் பதட்டம் முடங்கியது நகரம் தமிழ் வாலிபர்களின் எழுற்சியினால் வெடி கொழுத்தி இறக்கப்பட்டார் விகாராதிபதி
(சிவம்)
பொதுபலசேனாவின் மட்டக்களப்பு வருகைகக்கு நீதி மன்றம் தடை விதித்ததிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து மங்களராமய விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் நகரில் இன்று (03) பதட்டம் ஏற்பட்டதோடு போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.
விகாராதிபதியை வெளியில் வர விடாது பொலிசார் வீதித் தடையை ஏற்படுத்தியதால் பொலிசாருடன் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகள் சகிதம் வெளிக்கிட்டார் விகாராதிபதி.
தடையின் மறுபுறத்தினால் உள்ளுர் வீதிகள் வளியே தேரர் சிங்கள மக்களைத் திரட்டிக் கொண்டு கூக்குரல் மற்றும் கோஷம் இட்டு சென்றதினால் தமிழ் இளைஞர்களிடையே முறுகல் ஏற்பட்டு தமிழ் வாலிபர்கள் சிங்களவரைத் தாக்க முற்பட்டபோது பொலிசார் கலகத்தைப் பொலிசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
மீண்டும் வீதியின் பிரதான தடைக்கு சென்ற விகாராதிபதி தடையின் மேல் ஏறி ஒரு மதகுருவிற்று முற்றிலும் ஒவ்வாத நிலையில் வார்த்தைப் பிரையோகத்தைப் பாவித்து ஒட்டு மொத்த முழு பௌத்த துறவிகளையும் அவமானப்படுத்தியுள்ளார்.
இதனை அவதானித்த இளைஞர்கள் பொலிஸ் ;நிலையத்தின்; எதிரில் ஒன்றுகூடி தேரரின் அடாவடித்தனத்தைக் கண்டித்து விகாராதிபதியைக் கைதுசெய்யும்படி கோஷமிட்டனர். போலிசாரினால் இளைஞர்களை சமரசப்படுத்த முயற்சித்தபோதும் அது முயற்சியளிக்கவில்லை.
வெடியைக் கொழுத்தி விகாராதிபதியின் பக்கம் வீசி தேரரை கீழே இறக்கி விகாரையினுள் முடக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ். வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரக்குமார், ஞா. கிருஷ்ணபிள்ளை, பொன் செல்வராசா, பா. அரியநேத்திரன், ஜேசுசபைத்துறவி அருட்தந்தை ஜோசப்மேரி ஆகியோர் கலந்து கொண்டு தேரரருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.
இச்செய்தி பதிவேற்றம் செய்யப்படும் வரை இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து அகலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
லேபிள்கள்:
மட்டக்களப்பு நகரில் பதட்டம் முடங்கியது
திருகோணமலை - புல்மோட்டையில் பௌத்த தேரரின் ஆதிக்கம்
திருகோணமலை - புல்மோட்டையில் பௌத்த தேரரின் ஆதிக்கம்
புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புல்மோட்டை அரிசி மலை பௌத்த தியான மண்டபத்திற்கு ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பணாமுற திளக்க வன்ச என்னும் பௌத்த பிக்கு அதனை பௌத்த கோவிலாக மாற்றினர்.
பின்னர் அரிசி மலை பகுதியை சூழவுள்ள பகுதியை பௌத்த விகாரைக்கான நிலமாக அரிசி மலை, பொன்மலைக்குடா, வெற்றிலைக்கேணி, வீரன் தீவு போன்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை புனித பூமியாக்க நினைத்தனர்.
இதற்காக திருகோணமலையின் முன்னாள் அரசாங்க அதிபர் சில்வா மஹிந்தவின் அனுசரணையுடன் புல்மோட்டையின் ஏனைய பகுதிகளான 14ஆம் கட்டை பம்ப் ஹவுஸ், சாத்தனமடு, ஆண்டான் குளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய புல்மோட்டை பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் காணியை அளவிட முற்பட்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தலைமையில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தௌபீக் புல்மோட்டை பெரிய பள்ளிவாசலின் தலைவர் கலீல் லெப்பை, ஐனியப்பில்லை, ஐயூப்கான் மௌலவி ஆகியோர் உட்பட புல்மோட்டை மக்களால் ஆர்ப்பாட்டத்தின் மூலம் பல தடைவைகள் குறித்த பகுதியில் காணி அளவீடு செய்வதைத் தடுத்தும் குறித்த நபர்களைப் பல தடவைகள் நீதிமன்றுக்கு நிறுத்தியும் மேற்படி காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடை நிறுத்தப்பட்டன.
மேலும் அரிசி மலை பகுதியில் 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிஹார்ப் நிறுவனத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 03 வீடுகள் கடற் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
குறித்த காலப் பகுதியில் காலித் என்பவரின் வீடு உடைக்கப்பட்டு பௌத்த கோவிலுக்காக மேலதிக கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் மாகாண சபை உறுப்பினர் அன்வரால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வீடு மீட்கப்பட்டு அவர் குடி அமர்த்தப்பட்டார்.
அவர் இல்லாத சமயம் வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்டு வீடு உடைக்கப்பட்ட நிலையில் புல்மோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் அது தோல்வியுற்றது.
பிக்குவான பணமுற திளக்க வன்ச கொழும்பில் இருந்து சிங்கலே ராவண பலய போன்ற இனவாதக் கும்பல்களை பௌத்த பிக்குகளோடு வரவழைத்து மிக மோசமாக நடந்து கொண்டார்.
பின்னர் மிகுதி இரண்டு வீடும் படையினரிடமிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விடுவித்து கொடுத்த போது அந்த பௌத்த பிக்கு அரிசிமலை பகுதியை கை விட்டு 14 ஆம் கட்டைப் பகுதியை நோக்கி நகர்ந்தார்.
குறித்த பகுதியிலே வெளி மாகாணங்களில் இருந்து சட்ட விரோதமாக மக்கள் குடியமர்ந்த போது அவற்றுக்கும் குச்சவெளி பிரதேச செயலாளரால் நீதி மன்றுக்கு கொடுக்கப்பட்டு சட்ட ரீதியாக வெளி ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதிலும் தோல்வி கண்ட பிக்கு இனவாத கும்பல்களில் ஒன்றான மஹா சேனா பலாக்காய என்ற கூட்டத்தோடு தொடர்பை ஏற்படுத்தி அவர்களைப் புல்மோட்டைப் பிரதேசத்திற்கு கொண்டு வந்து இனவாதம் பேசினார்.
இதனை குறித்த வீடியோவை முகநூலினூடாக வெளியிட்ட கும்பல்களின் ஒருவனான அமித் வீரசிங்க என்பவனின் முகநூலைப் பார்ப்பதினூடாக அறியக் கூடியதாக இருந்தது.
குறித்த முகநூலில், முஸ்லிம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் போகக் கூடாது என்றும் புல்மோட்டையில் சிங்கள பெரும்பான்மை மக்கள் குடியமர்ந்துள்ள பகுதியிலே அவர்களுக்காக புதிய கடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும் சிங்க இளைஞசர்கள் ஒன்று பட வேண்டும் என்றும் பதிவுகள் இட்டப்பட்டிருந்தன.
இதனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அன்வர், முதலமைச்சர் ஊடாக கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தார்.
எனவே புல்மோட்டை பொலிஸ் அதிகாரி, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோருக்கு வீடியோ மற்றும் போட்டோக்களை அனுப்பப்பட்டதுடன் புல்மோட்டை பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பினை வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், குறித்த அரிசி மலை பௌத்த பிக்குவின் தலைமையில் மஹா சேனா பலாக்காய கும்பல்கள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு சட்ட விரோத குடியேற்றக் காரர்களுக்கு சில பொருட்கள் வழங்கினர்.
இதன் போது, அரசாங்க அதிபர் 50 கடைகளுக்கு அனுமதியற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வை நிறுத்தும்படி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதால் பிக்கு 13 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள பௌத்த கோவில் பகுதியிலே அடிக்கல் ஒன்றை நாட்டிச் சென்றனர்.
எனவே புல்மோட்டை பிரதேசத்தில் பெரும்பான்மை மக்களை குடியமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அலையும் அரிசி மலை பௌத்த பிக்கு தன்னுடைய நடவடிக்கைக்கு இனவாத கும்பல்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றார்.
மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் எதிர்காலத்தில் முஸ்லீம் மற்றும் அண்மை கிராமமான பதவி ஸ்ரீ புற சிங்கள மக்களோடு உள்ள உறவை சீர்குலைக்க எடுக்கும் முயற்சி பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
அத்தோடு புல்மோட்டை பிரதேசமக்கள் சிங்கள மக்களின் காணிகளை அடாவடியாக பிடித்திருப்பதாகவும் வதந்திகளை பரவுவதுடன் ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து வந்து இரு சமூகங்களையும் பிரிக்கின்ற முழு முயற்சியில் மஹிந்தவின் முகவராக குறித்த பிக்கு செயற்படுவது புலனாகிறது.
மேலும் புல்மோட்டை பிரதேசத்தை அண்டிய ஏனைய பௌத்த விகாரைகளிலுள்ள பௌத்த துறவிகள் மிகவும் நெருக்கமாக புல்மோட்டை முஸ்லிம்களோடு உறவை வைக்கும் போது
மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலின்படி இயங்கும் அரிசி மலை பௌத்த பிக்குவின் நடவடிக்கைகளுக்கு நல்லாட்சி அரசு தீர்வு எடுக்குமா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
nanri Tamilwin
மட்டக்களப்பு அம்பேபிட்டிய சமண ரத்னா தேரரின் நடவடிக்கை
மட்டக்களப்பு அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரின் நடவடிக்கையால் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு! கைதாவாரா தேரர்?
வீரகேசரிச் செய்தி படங்களுடன் ஆர்ப்பாட்டமும்,ஊர்வலமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் தடை.வெலிக் கந்தையில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப் பட்டார் ஞானசாரதேரரும் குழிவினரும்,இதைக் கேள்வியுற்ற மட்டக்களப்பு அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர் தனது திரு விளையாடலை துவங்க ஆயத்தமானபோது போலீசார் தலையிட்டு தடை நடவடிக்கை
விபரத்திற்கு இங்கே செல்லவும்
வீரகேசரிச் செய்தி படங்களுடன் ஆர்ப்பாட்டமும்,ஊர்வலமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் தடை.வெலிக் கந்தையில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப் பட்டார் ஞானசாரதேரரும் குழிவினரும்,இதைக் கேள்வியுற்ற மட்டக்களப்பு அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர் தனது திரு விளையாடலை துவங்க ஆயத்தமானபோது போலீசார் தலையிட்டு தடை நடவடிக்கை
விபரத்திற்கு இங்கே செல்லவும்
மனிதனைத் தேடுவோம்
மனிதனைத் தேடுவோம்
மனிதம் எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கும் ஆர்.ஜே.பாலாஜி
கேட்டுப் பாருங்கள்.ஒரு திரைப் படம் பார்த்த நிறைவை விட,நல்ல புது அனுபவம்
லேபிள்கள்:
மனிதனைத் தேடுவோம்
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020
சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.
இக்காலங்களில் இவரி 3 முறை வக்ரம் ஆகிபின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
1. 06.04.2017 பங்குனி 24ம் தேதி வியாழக்கிழமை வக்ரமாகி 25.08.2017 ஆவணி 9 வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின்
2. 18.04.2018 சித்திரை 6ம்தேதி புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி 06.09.2018 ஆவணி 21 வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்
3.30.04.2019 சித்திரை 17 செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.
சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை நாம் 4 கட்டங்களாகப் பார்க்க இருக்கிறோம்.
பொதுப்பலன்கள் :
1. சனிபகவான் தனுசுராசியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஏற்படும் அனைவருக்குமான பொதுப்பலன்கள்.
2. சனிபகவான் தனுசுராசியில் உள்ள மூலம், பூராடம், உத்தராடம் மற்றும் விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் அதாவது (வக்ரம் மற்றும் வக்ரநிவர்த்தி காலங்களில் நடக்கும்) பொதுப்பலன்கள்
3. அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள் (உதாரணமாக ஒருவர் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்றாலும் சிம்மராசியில் உள்ள மகம், பூரம், உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள் இதில் அடங்கும்) .
4.சனிபகவானின் பார்வை 3, 7, 10ம் இடங்கள்ஆகும். இவர் ஒவ்வொருவர் ராசிக்காரர்களுக்கும் அவர்பார்வை படும் இடங்களில் ஏற்படும்பலன்கள்.
என 4 வகையான பலன்களைப் பார்க்க இருக்கிறோம்.
இத்துடன் இக்காலங்களில் 2 முறை குருப்பெயர்ச்சியும் 2 முறை ராகு – கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. அவைகளையும் கருத்தில்கொண்டு என்ன பலன்கள் நடைபெறும் என்பதை மிகவிரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள நடப்பு தசாபுத்தி காலங்களில் நடைபெறும் பலன்களே முக்கியமானது ஆகும். அத்துடன் சனிப்பெயர்ச்சி என்பது கோச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பொதுப் பலன்கள் ஆகும். இவ்விரண்டும் கலந்தே ஒரு மனிதரது வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடைபெறும
லேபிள்கள்:
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)