சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.
இக்காலங்களில் இவரி 3 முறை வக்ரம் ஆகிபின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
1. 06.04.2017 பங்குனி 24ம் தேதி வியாழக்கிழமை வக்ரமாகி 25.08.2017 ஆவணி 9 வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின்
2. 18.04.2018 சித்திரை 6ம்தேதி புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி 06.09.2018 ஆவணி 21 வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்
3.30.04.2019 சித்திரை 17 செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.
சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை நாம் 4 கட்டங்களாகப் பார்க்க இருக்கிறோம்.
பொதுப்பலன்கள் :
1. சனிபகவான் தனுசுராசியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஏற்படும் அனைவருக்குமான பொதுப்பலன்கள்.
2. சனிபகவான் தனுசுராசியில் உள்ள மூலம், பூராடம், உத்தராடம் மற்றும் விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் அதாவது (வக்ரம் மற்றும் வக்ரநிவர்த்தி காலங்களில் நடக்கும்) பொதுப்பலன்கள்
3. அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள் (உதாரணமாக ஒருவர் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்றாலும் சிம்மராசியில் உள்ள மகம், பூரம், உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள் இதில் அடங்கும்) .
4.சனிபகவானின் பார்வை 3, 7, 10ம் இடங்கள்ஆகும். இவர் ஒவ்வொருவர் ராசிக்காரர்களுக்கும் அவர்பார்வை படும் இடங்களில் ஏற்படும்பலன்கள்.
என 4 வகையான பலன்களைப் பார்க்க இருக்கிறோம்.
இத்துடன் இக்காலங்களில் 2 முறை குருப்பெயர்ச்சியும் 2 முறை ராகு – கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. அவைகளையும் கருத்தில்கொண்டு என்ன பலன்கள் நடைபெறும் என்பதை மிகவிரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள நடப்பு தசாபுத்தி காலங்களில் நடைபெறும் பலன்களே முக்கியமானது ஆகும். அத்துடன் சனிப்பெயர்ச்சி என்பது கோச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பொதுப் பலன்கள் ஆகும். இவ்விரண்டும் கலந்தே ஒரு மனிதரது வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடைபெறும