சனி, 13 மார்ச், 2010

இணையத்தில் இலவச ஜோதிடம்.

இணையத்தில் இலவச ஜோதிடம் 




ஜோதிடம் என்றாலே நம்பிக்கைதான்,இவைகளையெல்லாம் நம்புவது யார்? என்று கேட்டவர்கள் கூட,தனக்கோ அல்லது தனது குடும்பத்தவர்க்கோ கஷ்டம் என்று வந்தால்,கையில் பிறந்த குறிப்புடன் அலைபவர்களை,நாம் அன்றாடம் காண்கிறோம்,கணனிகள் உருவாகியும்,மனிதன் அன்றாட அலுவல்களை கணனி மூலம்,நிருவகித்தாலும்,அந்தக் கணனியைமுதன் முதல் இயக்குவதற்கு நல்ல நேரம் பார்ப்பவர்கள்  இன்றும் இல்லாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால்,சில பதிவர்கள்  நல்ல நேரம் பார்த்துத்தான்,பதிவுகளை எழுதுகிறார்கள்,வெளியிடுகிறார்கள்,

உங்கள் பலன்களை சரியாக அறிந்து கொள்வதற்கு,சில விடயங்கள் அடிப்படையாகத் தெரிந்து இருக்க வேண்டும், அவை,உங்கள் பிறந்த நேரம்,பிறந்த ஊர்,பிறந்த திகதி,இவ்வளவும் சரியாகத் தெரிந்து இருந்தால்,இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்  அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை இட்டு calculate என்பதை அழுத்தினால்,உங்கள் இராசி,லக்கினம்,நட்சத்திரம்,நட்சத்திர பாதம்,நடப்பு திசை இவை எல்லாம் அட்சர சுத்தமாக வழங்குகிறார்கள்.இவைகள் எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள்,இவைதான் சோதிடத்தின் ஆரம்பம்,இதை வைத்துத்தான் இன்னும் பல 
இனைய தளங்களில்,உங்கள் எதிர் காலத்தை நீங்களே அறிந்து கொள்ளலாம்.நீங்கள் பிறந்த இடத்தின் நேர அமைப்பும்,அதுதாங்க GMT இது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் 
ஒன்றுதான்.போய்ப்பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இதனை  அடிப்படையாக  
வைத்து அடுத்ததாக ஒரு தமிழ் இணைய தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்,
இது சம்பந்தமான கேள்விகளை,பின்னூட்டத்தில் கேட்கலாம்,பிறந்த திகதி தெரியாதவர்களுக்கும்,இணைய தளம் தயாராக இருக்கிறது.                                                                                                            அன்புடன்.!

5 கருத்துகள்:

  1. பரவால்லீங்களே, எல்லாரும் ஜோசியப்பதிவு போடறாப்ல இருக்குதுங்க. ரொம்ப நல்லது. மன தைரியம் குறைவாக இருப்பவர்களுக்கு ஜோசியம் ஒரு வரப்பிரசாதமே.

    பதிலளிநீக்கு
  2. சார் உங்கள் பின்னூட்டம் பார்த்து எனக்கு சிறப்பு தான் வந்து

    //நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ,போ ,போ..//

    நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, இந்த பதிவு நன்றாக
    உள்ளது.பகிர்வுக்கு நன்றி ருத்ரா அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. சகோதரா:-கக்கு-மாணிக்கம்!
    பொன்னான வருகைக்கும்,புதுமையான கருத்துக்கும்.
    நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  4. மருத்துவர், பி.கந்தசாமி ஐயாவுக்கு!
    சட்டியிலுள்ளது அகப்பையிலே!
    புத்தியிலுள்ளது வார்த்தையிலே!

    பதிலளிநீக்கு
  5. இது இவ்வளவுக்கும் ஐநூறு கொடுத்தேனே!

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள