ஒரு பக்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்காக பகிரங்க சவால்
ஒரு பக்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்காக பகிரங்க சவால்களை முன்னாள் ஜனாதிபதி விட்டுள்ளார் என்றபோதும் கூட அரசு தரப்பினர் அது எந்தவகையிலும் சாத்தியம் இல்லை என தெரிவிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் மகிந்த ஆதரவாளர்களோ விஜயகலா அண்மையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றி கூறிய கருத்தை மட்டுமே அதிகமாக விமர்சிக்கின்றார்கள்.
புதிய அரசியல் யாப்பு தமிழர்களுக்கு நாட்டை பிளவு படுத்தி கொடுக்கும் செயல் அதனால் அதனை எதிர்க்க வேண்டும் என்பதே தென்னிலங்கை தரப்பினரின் இப்போதைய முக்கிய வாதம்.
ஆனால் இந்த அரசியல் யாப்பு தொடர்பில் தமிழர்களின் பங்களிப்பும் அதனால் வடக்கு கிழக்கிற்கு ஏற்படும் நன்மையும் கூட தெரிய வில்லை.
தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ள இந்த புதிய அரசியல் யாப்பு கதையை அவரவர் அரசியல் இலாபத்திற்காக பயன் படுத்திக் கொள்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு.
ஆட்சிக்கு வரும் போதும், இப்போதும் ஜனாதிபதி என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதும் கேள்வி மட்டுமே விடைகள் கிடைக்கவில்லை.
தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் எனக் கூறி வந்தார், அவ்வளவு ஏன் ஆறு மாதங்களுக்குள் தமிழ் வடக்கின் காணிகள் அனைத்தையும் விடுவிப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆறு மாதம் 1 வருடமாகிப்போனது.
ஆனாலும் அவருடை வாக்குறுதி வெரும் மேடைப் பேச்சாகவே இருந்து போனது. இப்போதைக்கு ஜனாதிபதி நாட்டில் இராணுவத்தினரைக் காக்க வேண்டும், அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்.,
என்பதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளார். இராணுவத்தினருக்காக மட்டுமே சேவையாற்றி வருகின்றாரா? முக்கியமாக யாரிடம் இருந்து இராணுவத்தினரை காக்கப் போகின்றார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் தமிழ் மக்களை காப்பதில் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மட்டும் எவரும் வெளிப்படையாக செயற்பட வில்லை, அடிமைப்படுத்தவே திட்டம் தீட்டுகின்றனர்.
அப்போதைய ஜனாதிபதி ஆட்சியை பிடிப்பேன் என்கின்றார் ஆனால் இப்போதைய ஜனாதிபதி அதற்கு அமைதியாக உள்ளார்.
இங்கு அவருடைய அமைதிக்கு காரணம் எது வென்று தெரியவில்லை, நாட்டை ஆட்சி செய்வது யார் என்ற கேள்வியையும் கூட எழுப்பி விடுகின்றது இப்போதைய அரசியல் நிலைப்பாடுகள்.
குறிப்பாக நாட்டில் பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் எவரும் விலகவில்லை அனைவரின் கோரிக்கையும் இது ஒன்று மட்டுமே.
இந்த நிலை தொடரும் வரை இலங்கையில் தமிழர் பிரச்சினை எப்போதும் தீராது. நல்லிணக்கம், சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்பது எல்லாமே வெரும் பேச்சளவில் மட்டுமே இருக்கும்.
ஆகமொத்தம் திட்டமிட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா? என்பது தெரியவில்லை. இராணுவப்புரட்சி, இனவாதம், புலிகள், புலம்பெயர் தமிழர்கள், அரசியல் யாப்பு இப்படி மாறி மாறி செல்கின்றது பிரச்சினை.
தமிழர்களின் தீர்வு மட்டும் எப்போதுமே கேள்விக்குறிதான். யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட போதும் இன்றுவரைக்கும் தமிழ் மக்கள் அடிமை வாழ்வே தொடருகின்றது.
பதிவாகி வரும் சம்பவங்கள் இதனை தெளிவாக எடுத்துக்காட்டும். பொறுமைகாத்து வரும் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடுகளும் மௌனமே அதனால் தொடர்கின்றது பதில் இல்லாத இந்தக் கேள்வி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள