பலாலியை பிராந்திய விமான நிலையமாக மாற்றத் திட்டம்
“பலமிக்கதொரு இலங்கை” திட்டத்தில் உள்ளடக்கம்
(எம்.எம்.மின்ஹாஜ்)
(எம்.எம்.மின்ஹாஜ்)
வடக்கிற்கு விசேட அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதன் பிரகாரம் பலாலி பிராந்திய விமான நிலைய மாகத் தரமுயர்த்தப்படவுள்ளதாக “பலமிக்கதோர் இலங்கை” பொருளாதாரத் திட்டத் தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று பலமிக்க தோர் இலங்கை பொருளாதாரத் திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்றிட்டங் களின் அடிப்படையில் பலமிக்கதோர் இலங்கை பொருளாதார திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது வடக்கு மாகாணமாகும். எனவே வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படும். மேலும் இலகு படகு சேவையை ஆரம்பிப்பதற்கும் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி அமைப்போம். திருகோணமலையை சுற்றுலா தளமாக மாற்றுவோம். திருகோணமலை துறைமுகத்தை பலப்படுத்துவோம்.
மலையகத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள