சனி, 7 ஜனவரி, 2017

கூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா..?

கூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா..?


சுந்தர் பிச்சையின் இந்திய பயணத்தின் முக்கியமான சில நிகழ்வுகளும், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரின் பதில்கள் இங்கே!
சுந்தர் பிச்சையின் இந்தியப் பயணம்
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்தியா வந்தால் தன் வழக்கமான அலுவல்களை கவனித்துவிட்டு, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த முறை ஐ.ஐ.டி காரக்பூர் மாணவர்களுடன் கலந்துரையாடல், பத்திரிகையாளர் சந்திப்பு, டெல்லி கான்பிரன்ஸ் என வலம் வந்திருக்கிறார் சுந்தர் பிச்சை.
இந்த சந்திப்புகளில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் மிகவும் சுவாரஸ்யமனவை! கூகுள் நிறுவனத்தில் அவரது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
டிஜிட்டல் இந்தியா மீது நம்பிக்கை
தங்கள் நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் பற்றி கூறுகையில்,”சர்க்கரை அளவுக் கருவி மேம்பாடு குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
பிக்ஸல் (கூகுளின் ஸ்மார்ட் போன்) கொண்டு மக்கள் எளிதாக பயன்படுத்தும் விதமான AI (ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்) உருவாக்கும் முயற்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன” என்றார்.
இந்தியாவில் டிஜிட்டல் பற்றிய கேள்விக்கு, “இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் டிஜிட்டல் மயம் என்பது எளிதல்ல. ஆனாலும் அதனை சாத்தியப்படுத்த முடியும்.
இங்கு ஆங்கிலம் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் மொத்தத்தில் மிகவும் குறைவு.எனவே முடிந்த வரை அந்தந்த பிராந்திய மொழிகளிலேயே தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிகழ்த்த வேண்டும். கூகுள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
2000 ரூபாய்க்கு மொபைல் போன் விற்கும் திட்டம் உள்ளது” என்றார். மேலும் தொழில்நுட்பத்தில் இந்தியா சீனாவை விஞ்சுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்தியா எதிர்வரும் காலத்தில் ஒரு உலகத்தர தொழில்நுட்ப போட்டியாளராக வளரும்.
அது எந்த நாட்டுடனும் மோதும் திறன் கொண்டிருக்கும். அதற்கு சில ஆண்டுகள் ஆகும். மேலும்,இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டுக்குத் தயாரிக்கப்படும் எந்தவொரு தயாரிப்பும் உலகம் முழுதற்கும் தயாரிக்கப்பட்டது போன்றது” என்றார்.
சுந்தர் பிச்சையின் உரையாடலில் சில சுவாரஸ்ய தகவல்கள்
1. சுந்தர்பிச்சை கூகுள் நிறுவன பணிக்காக இன்டர்வியூ செய்யப்பட்டது முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1-ம் தேதியன்று தானாம்.
2. சுந்தர் பிச்சைக்கு இன்டர்வியூவின் போது ஐஸ்க்ரீம் தரப்பட்டுள்ளது. காரணம் கூகுள் ஒரு வித்தியாசமான அலுவலக அமைப்பை கொண்ட நிறுவனம் என்பதை காட்டுவதற்காகவாம்.
3. இவருக்கு விராட் கோலியை மிகவும் பிடிக்குமாம். அவரது இளமைகாலத்தில் கவாஸ்கரை மிகவும் பிடிக்கும் என்றும் தற்போது கோலியை மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
4. எனக்கு நிறைய நடிகர்களை பிடிக்கும் .ஃபேவரைட் என்று கேட்டால் ஷாருக், தீபிகா படுகோன் தான் என்கிறார் சுந்தர் பிச்சை.
5. ஐ.ஐ.டி-யில் படிக்கும் போது முதல் வருடத்தில் சி க்ரேடு வாங்கியது இன்னமும் வருத்தமளிப்பதாக கூறினார்.
6. இவரது இன்ஸ்ப்ரேஷனாக விளங்கியது இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.
7.ஐ.ஐ.டி காரக்பூரின் கூகுள் டூடுலை ஒரு நாள் இடம்பெற வைக்க முடியுமா என்றதற்கு அனுப்பி வைய்யுங்கள். ஆனால் தேர்வாவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்று பதிலளித்தார்.
8. சுந்தர் பிச்சையின் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் ஐ.ஐ.டி.,யில் படித்த நாட்கள் தான் என்கிறார்.
- Vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள