சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு?
எல்லை நிர்ணய அறிக்கையில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பிழையானவையும், பரஸ்பர விரோதமானவையுமாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிக்கும் ஆணைக்குழுவிற்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக பிழைகள் குழப்பங்களுடன் அவசர அவசரமாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இந்த அறிக்கையின் அடிப்படையில் சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு கூடுதல் உறுப்பினர்களும் சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு குறைந்தளவு உறுப்பினர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய உள்ளுராட்சி மன்ற எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 58937 ஆகும், இந்த உள்ளுராட்சி மன்றத்திற்கான உறுப்பினர் எண்ணிக்கை 23 ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 68591 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 12 மட்டுமேயாகும்.
உஹன பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத் தொகை 52137 ஆகும், பிரதேச சபைக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை 17 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம், தமிழ் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் சனத்தொகைப் பரம்பல் பாரியளவில் வித்தியாசப்பட்டாலும், சம எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் எண்ணிக்கையே வழங்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 31200 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்.
பதவி ஸ்ரீபுர பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 12703 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்.
மேலும் மொரவௌ பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 9939 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்,
கோமரன்கடவல பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 8348 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்.
மிகவும் சனத்தொகை அதிகமான பிரதேச சபைகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 203976 ஆகும், இதற்கான உறுப்பினர் எண்ணிக்கை 35 ஆகும்.
இதன்படி 6182 பேருக்கு ஒர் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.இந்த பிரதேசபை இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதற்கு மேலதிகமாக எல்லை நிர்ணயத்தின் போது பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன.
புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமா என்பது பற்றிய விடயங்கள் எல்லை நிர்ணய அறிக்கையில் பரிந்துரை செய்யப்படவில்லை.
எல்லை நிர்ணய அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன, யாரின் தேவைக்கு அமைய இவ்வாறு அவசர அவசரமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள