வியாழன், 20 ஜனவரி, 2011

கிடைத்த வெள்ள நிவாரணம்.


இதற்கு  முதல் எழுதிய பதிவில் வெள்ள நிவாரணம் படும் பாடு என்பதை எழுதியிருந்தேன், இது எனது பிரதேச மக்களுக்குக்  கிடைத்த வெள்ள நிவாரணம்.கிட்டத்தட்ட ஒருமாதம் வெள்ள நீருக்குள் கிடந்து,பிரண்டு
சாதனைகள் செய்த  மக்களுக்கு,ஒரு வழியாக, புண்ணியவான்கள் மனது வைத்து, வழங்கிய  அரசாங்க நிவாரணம்,மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் ஆணைக்கிணங்க
மண்முனை வடக்கு,பிர தேச செயலாளரின், அனுசரணையுடன்,எமது பகுதி கிராம சேவையாளரால்,வழங்கப்பட்டது.முன்னைய பதிவில் குறிப்பிட்ட,நிவாரணத்திற்கும்,
இந்த நிவாரணத்திற்கும் சம்பந்தம் இல்லை.அந்த நிவாரணப் பணத்திற்கு என்ன நடந்தது
என்பதை நிற்சயம் இந்தப் பிளாக்கில்,கட்டாயம் வெளிவரும்.

இதை நான் வாங்கப் பட்டபாடு,ஐயா,சொல்லில் மாளாது,நான் தான் இதற்கு உரியாள் என்பதை நிருபிக்க,இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டபோதுகூட,
இவ்வளவு கஷ்டப்படவில்லை.பத்துப் பேர் கொண்ட,ஒரு குழுவால்,சரியாக விசாரணை
செய்யப்பட்ட பின்புதான்,இந்தப் பொட்டலம்,எனது கைக்குக் கிடைத்தது.


1 .துவாய்.................................................................150 .00
2 .போத்தல் தண்ணீர் 1500 .மல...........................120 .00..
1பைக்கட்,90 ,கிராம் சொக்கலட் மாறி பிஸ்கட் 30 .00
1 .பைக்கட்,90கிராம் மில்க் கீரீம் பிஸ்கட் ..........30 .௦௦00௦௦
1 .பைக்கட்,70,கிராம் மாறி பிஸ்கட் ....................20 .00
1 .சன்லையிற் சலவை சோப்பு ............................27 .00
1 .பற்பசை சிறியது .................................................35 .00
1 .பல் தூரிகை,..........................................................32 .௦௦௦௦௦௦00௦௦
1 .அங்கர் பைக்கட் 400 கிராம்...............................244 .00
1 .லக்ஸ் சோப்பு ......................................................32 .00
3 .சம்போ பைக்கட் ..................................................15 .௦௦௦௦௦௦00
மொத்தம்..................................................................735.00


கையில் வெள்ள நிவாரண பொட்டலம்,கிடைத்தவுடன்,உடனடியாகப் பிரித்து,அதிலிருந்த
ஒரு தண்ணீர்ப் போத்தலையும்,ஒரு பிஸ்கட் பைக்கட்டையும்,அவ்விடத்திலேயே, சாப்பிட்டு முடித்து,எனது களைப்பைத் தேற்றிக் கொண்டேன்

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கு ஒரு வருடச் சம்பளம்,125 கோடி ரூபா, நாள்
ஒன்றுக்கு அவர்களின் சம்பளச் செலவு,.3,42 ,466.௦௦ ரூபா இதை  நான் சொல்லவில்ல,
நமது சக பதிவர் ஒருவரின் பதிவில் வாசித்தது.நீங்களும் பார்க்க  இன்னும் எவ்வளவு செலவுகளை எடுத்துக் காட்டலாம்,ஆனால் அவைகளின் எதிர் விளைவுகளைத் தாங்கக்
கூடியளவு,நமது உடம்பும் தயாரில்லை,குடும்பச் சூழலும்,நல்லதாக இல்லை.

இப்படி நமது நாட்டின் முக்கிய செலவுகளை,எண்ணிப் பார்த்து,நமது நாட்டில் ,வாழுகின்ற
மக்களின் இயலாமையை நினைத்து,மனது நிறைந்த பாரத்துடன்,கையில் இருந்த நிவாரணப் பொருள்களின்,பாரம் தெரியாமல்,எனது வீட்டை நோக்கிய பயணத்தைத்
தொடர்ந்தேன்.

1 கருத்து:

  1. உங்களுக்கு இதாவது கிடைத்தது,எனக்கு எதுவுமே,கிடைக்கவில்லை?

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள