சனி, 24 டிசம்பர், 2016

அம்மா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன! அதிர வைக்கும் நாஞ்சில் சம்பத்

அம்மா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன! அதிர வைக்கும் நாஞ்சில் சம்பத்.



அ.தி.மு.க-வில் நான் இணைந்த உடனே எனக்குப் பொறுப்பும் கொடுத்து, காரும் வழங்கியவர் புரட்சித் தலைவி. அவர் இல்லாத இந்த இயக்கத்தில் எனது இயக்கம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என தழுதழுக்கிறார் நாஞ்சில் சம்பத்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின், சசிகலாவின் அரசியல் என்ட்ரி குறித்து நாஞ்சில் சம்பத்திடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது,
ஜெயலலிதா இல்லாத இந்த வெற்றிடத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சூன்யமாகப் பார்க்கிறேன். ஒருவர் இறந்த பின் ‘யாரும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடம்’ என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. எனக்குத் தெரிந்து இப்போதுதான் அது உண்மையாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. இந்த இடத்தை நிரப்புவதற்கு ஒருவரும் இல்லை.
பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்களே?
அதை பொதுக்குழு தான் தீர்மானிக்க வேண்டும். ‘இதற்கு எதிராகவும் நான் இல்லை, யாருக்கு ஆதரவாகவும் நான் இல்லை’ என்பதுதான் என் மனநிலை.
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு போட்டுள்ளாரே?
இந்த மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, அம்மாவை யார் பார்த்தார்கள் என்ற விவரங்கள்கூட தெரியவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னால் உடல் பரிசோதனைக்கு என அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் என அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, படிப்படியாக நோய் வந்தது என்று அடுக்கிக்கொண்டே போனார்கள்.
அதன் பிறகு ‘தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் சரியாக தெரிந்துகொள்கிறார், வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், திடீரென அம்மா இந்த நிலைக்கு ஏன் ஆளானார் என்பது குறித்து சாதாரண பொதுமக்களுக்கு எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளும் எழுகின்றன.
சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா வழக்கு போட்டிருப்பதன் மூலம், உண்மைகள் ஊர்வலம் வருமானால் எனக்கு மகிழ்ச்சிதான்.
அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி உள்ளது?
லட்சக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் அன்பைப் பெற்ற இயக்கம் அ.தி.மு.க. அதைச் சரியாக வழிநடத்திச் சென்றால் எக்காலத்திலும் அந்தக் கட்சிக்கு ஊனம் ஏற்படாது. அது வழி நடத்தக் கூடியவர்களின் வல்லமையைப் பொறுத்தது.
தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வில் குரல்கள் எழுகின்றனவே?
அவர் பேட்டியை நான் பார்த்தேன். வார்த்தைகளை அளந்து பேசுகிறார். அவரிடத்தில் முதிர்ச்சி தெரிகிறது. அவருக்கும் முதல்வராக இருந்த அம்மாவுக்கும் இருந்த உறவு முறை இரத்த சம்பந்தம் உடையது. அ.தி.மு.க என்ற இயக்கத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லாமல் இருப்பது எனக்கே கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சிலர் வெளிப்படையாக இறங்கிவிட்டார்கள். என்னைப்போன்று பொறுப்பில் இருப்பவர்கள் அப்படி செய்ய முடியாது.
கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோ மீது தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தியுள்ளார்களே?
ஜெயலலிதா மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது, கலைஞர் மீது கணைகளை வீசியிருந்தார் வைகோ. ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலின்போது, ஒரு மலிவான விமர்சனத்தை கலைஞர் மீது வைத்தார். பிறகு மன்னிப்பு கேட்டார்.
இப்போது அ.தி.மு.க-காரர்களுக்கு வக்கீலாக மாறிவிட்டார். சம்மன் இல்லாது ஆஜராகும் மனிதராகத் தன்னை அவரே தாழ்த்திக்கொண்டார். தமிழக அரசியலில் அவர் கேலிப் பொருளாகி விட்டது வேதனையைத் தருகிறது.
அந்த தி.மு.க தொண்டர்களின் உணர்வை நான் மதிக்கிறேன். ஆனால், அந்த அசம்பாவிதம் அரங்கேறி இருக்கக்கூடாது.
அதன் பிறகு தி.மு.க-வின் பொருளாளர், செய்தி தொடர்பாளர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்த பிறகும் வைகோ இதைக் கண்டித்து பேட்டி கொடுப்பது அநாகரிகத்தின் உச்சம்.
ஒரு அருவருக்கத்தகுந்த அரசியல்வாதியாக மாறிப்போனார் வைகோ என்பது துரதிர்ஷ்டவசமானது.
ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும்போதே, சசிகலாவை முதல்வராக சிலர் முன்மொழிகிறார்களே?
ஓ.பி.எஸ் அவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த அன்றே, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அமைச்சர் கருத்து சொல்கிறார். ஒரு அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்புள்ளது, அதை மறந்து விட்டு அந்த அமைச்சர் பேசுகிறார்.
முதல்வர் டெல்லி சென்ற அன்றைக்கு இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்திருப்பது முதல் அமைச்சருக்குப் பின்னடைவு.
மாநில நிர்வாகத்துக்கு தலைமை ஏற்கக்கூடிய ஒருவரை சக அமைச்சரே இப்படி மட்டம் தட்டுவது இதுவரைக்கும் எங்கேயும் நிகழ்ந்தது இல்லை.
உதயகுமார் ஆசையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதை அடைவதற்கான வழிமுறைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.
ஓ.பி.எஸ் அவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த அன்றே, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அமைச்சர் கருத்து சொல்கிறார். ஒரு அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்புள்ளது, அதை மறந்து விட்டு அந்த அமைச்சர் பேசுகிறார்.
முதல்வர் டெல்லி சென்ற அன்றைக்கு இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்திருப்பது முதல் அமைச்சருக்குப் பின்னடைவு.
மாநில நிர்வாகத்துக்கு தலைமை ஏற்கக்கூடிய ஒருவரை சக அமைச்சரே இப்படி மட்டம் தட்டுவது இதுவரைக்கும் எங்கேயும் நிகழ்ந்தது இல்லை.
உதயகுமார் ஆசையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதை அடைவதற்கான வழிமுறைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.
- Vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள