மைத்திரி–மஹிந்த இணையும் காலம் நெருங்கி வருகின்றது
ரணிலும் கூட்டு எதிரணியும் இணைந்து சு.க.வை வீழ்த்த சதி என்கிறார் நிமல் சிறிபால டி சில்வா
(ஆர்.யசி)
(ஆர்.யசி)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கூட்டு எதிரணியினர் இணைந்து உடன்படிக்கை மூலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிரந்தரமாக வீழ்த்தும் திட்டத்தை வகுத்துள்ளனர். 2020இல் நடைபெறும் தேசியத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வீழ்ச்சிக்கு சதித்திட்டம் வகுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் கூட்டணி ஒன்றாக பலமடையும் காலம் நெருங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.
பொது எதிரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கைகோர்க்கவேண்டும் என பொது எதிரணி உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ள நிலையில் பொது எதிரணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் கைகோர்க்க தயாராக உள்ளனரா என வினவியபோதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிரிபாலடி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்களை பலப்படுத்தும் நோக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து பொது எதிரணி உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர். இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொது எதிரணியின் ஒருசிலருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் எவ்வாறானவை என்பது வெளிப்படையாக தெரிகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துவதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிரந்தர பிளவுகளை ஏற்படுத்துவதும் இவர்களது திட்டமிட்ட செயற்பாடாக உள்ளது.எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி ஐக்கிய தேசியகட்சியின் அரசாங்கத்தை உருவாக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது.கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லாது மக்களின் மனதில் உள்ள கட்சியாக மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்க வேண்டும்.
மேலும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுவருகின்றன.எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஒற்றையாட்சிக்கு பாதகமான எந்த தீமானங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரிக்கப் போவதில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சகல மக்களுக்குமான தீர்வுகள் தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள